
பொங்கல் வாழ்த்து
வழக்கமாய் டைடல் பார்க் சிக்னலில்
கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்
துடைத்துவிட்டு காசுகேட்கும்
கால் ஊனமான சிறுமியொருத்தி
இன்று காலை கண்ணாடிகளைத் துடைக்காமலே
காசு கேட்டுக்கொண்டிருந்தாள்.
காசு கிடைக்கிறதோ இல்லையோ
அழுக்குக் கண்ணாடிகளில்
விரல்களால் கிறுக்கிக்கொண்டே
போய்க்கொண்டிருந்தாள் – ‘பொங்கல் வாழ்த்து’
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!
written by அருட்பெருங்கோ
\\ tags: பொங்கல், வாழ்த்து, கவிதை
செய்தி 1 : நேற்று நண்பர் பிரேம்குமார், அழகான ஆண்குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார். குழந்தைக்கு ‘ப’ வரிசையில் பெயர் வைக்க வேண்டுமென்பதால் பிரேம்குமார் என்றே வைத்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்
செய்தி 2 : தங்கச்சி ஆகாயநதிக்கு நேற்று மாலை அழகான ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. தாயும், சேயும் நலம்!
செய்தி 3 : மேலேயுள்ள இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை
வாழ்த்து சொல்ல – prem.kavithaigal@gmail.com அல்லது 09884812363
written by அருட்பெருங்கோ
\\ tags: வாழ்த்து
எனக்கு என்னைப் பிடித்திருப்பதே
உனக்கு என்னைப் பிடித்திருப்பதால்தான்.
*
அந்த மூன்று வார்த்தைகளைக் கேட்டாலும்
”எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்று
வெட்கப்படுகிறவளை என்ன செய்ய?
*
கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென!
*
உன் வாசனையை
என்னுடன் கூட்டிச்செல்வதற்காகவே
தினமும் உன் கைக்குட்டை வாங்கிச் செல்வேன்.
*
உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!
*
இதுவரை நீ வந்த
கனவுகளையெல்லாம் சேர்த்து
ஒரே கனவாக காணும்
ஓர் இரவு கிடைக்குமா?
*
ஒவ்வொரு சந்திப்பிலும் நிரூபிக்கிறாய்.
கவிதையென்பது எழுதப்படுவதன்று
நிகழ்த்தப்படுவது என்று!
*
தூசிவிழுந்த இடக்கண்ணில்
நீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!
*
என் பிறந்தநாளுக்கு அனுப்ப
காதல் தேடும் வாழ்த்து
நீ!
*
நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ஊடலும் கூடலும் மட்டுமல்ல…
காதலில் தேடலும் சுகம்தான்!
*
written by அருட்பெருங்கோ
\\ tags: பிறந்தநாள், வாழ்த்து, காதல், கவிதை
Recent Comments