Jan 07

கோபித்துக் கொண்டு
என்னோடு நீ பேசுவதில்லையென
முருகனிடம் முறையிடப்
போனால்
அவனோ,
இரண்டு நாட்களாய்
வள்ளி தன்னிடம்
பேசுவதில்லையென
மயிலிடம் புலம்பிக் கொண்டிருக்கிறான்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Jul 22

…உலகத்துல எத்தனையோ கண்டம் இருக்கு. அதுல ரொம்பப் பெருசு நம்ம ஆசியாக்கண்டம்தான் அப்படிங்கறதும் சில அறிவுஜீவிகளுக்குத் தெரிஞ்சிருக்கும். அந்தப் பெரிய கண்டத்துல பல நாடுக இருந்தாலும் இந்தியாவ மட்டும்தான் துணைக்கண்டம்னு சொல்லுவாங்களாம். அதுல பல மொழிகள் பேசப்பட்டாலும் ரொம்பப் பழமையான மொழிகள்ல இந்தத் தமிழும் ஒன்னு. பழசா இருக்கிற அளவுக்கு அது புதுசாவும் இருக்குனு சொல்லுவாங்க.(பதிவு சரியான மொக்கையா இருக்கேன்னு இதோட நீங்கப் போயிட்டா அதுவும் இந்தப் பதிவோட வெற்றி தான்;))

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Jun 26

1. “அருட்பெருங்கோ நல்ல தமிழ்ப் பெயர், ஆனா வாய்லதான் நுழைய மாட்டேங்குது” - என்னோடப் பெயரைக் கேட்டதும் பெரும்பாலானவர்கள் சொல்றது இதுவாத்தான் இருக்கும். அதக் கொஞ்சம் தெளிவாக்க இதை ஒரு வாய்ப்பா எடுத்துக்கறேன். என்னோட இயற்பெயர் சிவசாம்ராஜ். தமிழ் மேல இருந்த பாசத்துல சாம்ராஜ், பெருங்கோ ஆகிட்டான் (சாம்ராஜ் ‍- பேரரசன் - பெருங்கோ). எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, அதையும் மாத்தலாம்னு யோசிச்சப்போதான் அன்பே சிவம்னு கமல் சத்தம் போட்டார். சரி அன்பு னு மாத்தலாம்னு யோசிக்கும்போதுதான் என்னோட சிற்றறிவுக்கு, கொஞ்ச நாள் முன்னாடி நான் எங்கேயோ படிச்ச ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது. குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் இந்த மாதிரி நமக்குப் பழக்கமானவங்க மேல காட்டறதுக்கு பேர்தான் அன்பு, ஆனா முன்னப்பின்ன பழக்கமில்லாத எல்லார் மேலேயும் காட்டற அன்புக்கு அருள்னு பேர் அப்படினு எங்கேயோ படிச்சிருக்கேன். இப்படிதான் சிவம் அன்பாகி , அன்பு அருளாகி, இறுதியா சிவசாம்ராஜ்- அருள்+பெருங்கோ - அருட்பெருங்கோ ஆகிட்டேன். (அருட்பெருங்கோனு சும்மா பேருக்குதான் வச்சிருக்கேன், இன்னும் கெசட்ல எல்லாம் மாத்தல)

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Mar 07

ஓவியப் போட்டியென்றால்
உன்னை வரைந்து அனுப்பலாம்…
காவியப் போட்டியென்றால்
நம் காதல் கதையனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!
வெற்றி பெற வேண்டுமென்றால்
உன் பெயரைத்தான்
அனுப்ப வேண்டும்…
சிறியதாக இருக்கிறதென்று
ஒதுக்கி விட்டால்?

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,