இந்த தெலுங்குப் பொண்ணுங்க என்ன பேசினாலும் ரொமாண்டிக்கா வேற இருக்கு. குரல் காரணமா இல்ல தெலுங்கே இப்படிதானா. எல்லாப் பொண்ணுங்களுமே இப்படிதான் பேசறாங்க. ஒருவேளை நமக்குதான் வயசுக்கோளாறோ? செல்லம் நீ யூத்து இல்ல. வயசாகிடுச்சு. அத மொதல்லப் புரிஞ்சிக்கோ. சரி அப்போ தெலுங்கே இப்படித்தான்னு வச்சுக்குவோம்.சுந்தரத்தெலுங்குனு சும்மாவா சொன்னான்? ம்ம்ம் கண்ணாடில பாத்தா ஒருத்திதான் தெரியறா. ம்ம்ம் நல்லாதான் இருக்கா. டேய் இதையெல்லாம்கூட பதிவுல எழுதப்போறியா? என்ன பாத்ரூம்லையா எட்டிப் பாத்தோம்? சைட்டடிக்கிறது ஒரு தப்பா? நம்மள ‘நெனைக்க’ விடாம எடஞ்சல் பண்ணது இவங்க சத்தம்தான். ஹும் சரி நாம மறுபடி உருப்படியா எதாவது ‘நெனைக்க’ ஆரம்பிப்போம்.பதிவுல எழுதனுமே! போட்டான்யா சடன் ப்ரேக்கு. ஏற்கனவே எலும்புல தோலப்போத்திகிட்டு சுத்திகிட்டு
Read Full Post »அண்மைக்காலமாக
எனக்குள்ளும் புதிய மாற்றங்கள்
தென்படத் துவங்கியிருக்கின்றன.
என்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவது எனக்கேத் தெரிகிறது.
இராத்திரியின் நீளம் விளங்குகிறது.
நானும் கவுஜை ஜொள்ளுகிறேன்.
என் பிம்பம் விழுந்தே கண்ணாடிகள் உடைகின்றன.
கண்களிரண்டும் ஒளிகொள்வதாக நண்பன் சொல்கிறான்.
தலையணை நனைக்கிறேன்.
மூன்று முறை பல்துலக்குகிறேன்.
காத்திருக்கும்போது நிமிடங்கள் வருடங்களாகின்றன.
வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்களாகின்றன.
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
தொண்டைக்கும் தலைக்கும்
உருவமில்லா உருண்டையொன்று உருளுகிறது.
உண்மையாகவே இருதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கிறது.
நிசப்த அலைவரிசைகளில்
எனது குரல் மட்டும் ஒலிபரப்பாகிறது மிக மிக சத்தமாக.
எனது நரம்பே நாணேற்றி எனக்குள் அம்புவிடுகிறது.
புதிய ஹார்மோன்கள் நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கின்றன.
எனினும் உதடுகள் மட்டும் சகாராவாகிறது.
வாழ்ந்துகொண்டே சாகவும் முடிகிறது.
செத்துக்கொண்டே வாழவும் [...]
Recent Comments