Sep 03

கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் வெள்ளிக்கிழமை கரூரில் நடந்தது எங்கள் புதுமனைப் புகுவிழா.
வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு ஹைதரபாத்தில் இருந்து கோவைக்குப் புறப்பட்டேன். அது கோவை வழியாக கொச்சி செல்லும் ஏர் டெக்கான் விமானம்.
ஓணம் நெருங்கியதால் விமானத்தில் சேட்டன், சேச்சிகளின் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. முத்து நகரத்தை வானில் இருந்து கொஞ்சம் ரசித்துக்கொண்டிருக்கும்போது,
பணிப்பெண் டீ வேண்டுமா என்றார். தலையாட்டினேன். வெந்நீரும் , டீத்தூளும் கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டார் நானே கலந்து குடித்த டீ க்கு 20 ரூபாய் அதிகம்தான். கரூர் டீக்கடையில் மாஸ்டரே கலந்து கொடுக்கும் டீ, இரண்டு ரூபாய் ஐம்பது காசுதான் :)

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

Jan 30

இது தான் அமராவதி ஆறு.முன்பெல்லாம் ஆற்றில் குளிக்கிற அளவுக்கு தண்ணீரும் போகுமாம், சுத்தமாகவும் இருக்குமாம்.
பிறகு சாயப்பட்டறைகள் பெருகி சாயக்கழிவுகள் கலந்து ஆறு நாறிப்போனது. எப்போதாவது மழை வந்து ஆற்றை கழுவி விட்டுப் போகும். அப்போது மட்டும் ஆற்றில் ஊற்றுத் தோண்டி குளிக்கலாம்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Dec 14

குழந்தையை அணைத்துக் கொள்ளும் தாயின் கரத்தைப் போல வஞ்சி மாநகரை அணைத்துக் கொண்டு செல்கிறது - வரலாற்றில் ஆண் பொருணை என வருணிக்கப்பட்ட - அமராவதி ஆறு. ஆடி மாதத்தின் ஒரு மாலைப் பொழுதில் வஞ்சியில் இருந்து புறப்பட்ட நமது பேருந்து அமராவதி ஆற்றைக் கடந்து கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.பழங்காலத்தில் சேர மன்னர்கள் சோணாடு சென்ற ராஜபாட்டை இதுவாகத் தான் இருக்குமோ? நாமறியோம்! இதோ சாலைக்கு வலப்புறத்தில் தெரிகிறதே இது என்ன?

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,