Feb 03

ஒரு வாரமாய் எனது பதிவுகளை வாசித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள், மடலனுப்பியவர்கள், நேர்மையான விமர்சனம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும்… அழியாத எனது அன்பும், நன்றிகளும்!
ஒரு வாரம் தொடர்ந்து எழுதினால் அயற்சி ஏற்படுமென்பதற்கு மாறாக இன்னும் சிறப்பாக எழுதவேண்டும் என்கிற ஆவல் உண்டாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சிறுகதை எழுதப் பழக வேண்டுமென்கிற எனது ஆசை அதிகப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். ( எனது மொக்கைகள் கவுஜை வடிவத்தில் மட்டுமல்ல கதை வடிவத்திலும் இனி உங்களை இம்சிக்கும் :) )

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Jan 31

நின்றபடி தென்னை.
நீள்வதும், குறைவதும், மறைவதுமாய்
அலைந்தபடியே அதன் நிழல்.

*
வான்தொடும் பிரயத்தனத்துடன்
வளர்ந்த ஆலஞ்செடி,
மரமானதும் மண்தொடவே விழைகிறது
விழுதுகளால்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Jan 31

அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப்பன்ன நன்னெடுங்கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங்குன்றம் பாடியபாட்டே.
- அவ்வையார்.

“குறி சொல்பவளே!
குறி சொல்பவளே!
நல்ல நீண்ட கூந்தல் கொண்ட
குறிசொல்பவளே!
மீண்டும் சொல்!
அவன் வாழும்
நல்ல உயர்ந்த மலையைப் பற்றி
மீண்டும் சொல்!”

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Jan 30

konjam kaadhal 1

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Jan 30

அவளுக்கு ஒரு சிறிய குடை வாங்கிக் கொடுத்து,
நான் : தினமும் இத ஸ்கூலுக்கு எடுத்துப் போயிட்டு, வரும்போது மழை பேஞ்சுதுன்னா பிடிச்சுக்கனும் சரியா?
ஜனனி : அம்ப்ரல்லா எடுத்துட்டுப் போனா மிஸ் திட்டுவாங்க மாமா. நான் எடுத்துட்டுப் போக மாட்டேன். அம்மாதான் கொண்டு வரனும்.
நான் : மழ பேஞ்சா மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டுதான் பாப்பா வருவாங்க. அதனால உன்னலாம் திட்டமாட்டாங்க.
ஜனனி : மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டு வரமாட்டாங்க!
நான் : அப்பறம் எப்படி வருவாங்க?
ஜனனி : புடவ கட்டிட்டு வருவாங்க!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Jan 29

தலைமையாசிரியர் அறைக்குள்
பயத்தோடு நகம் கடித்தபடி நீயும்
பயமில்லாமல் முகம் நடித்தபடி நானும் நின்றிருக்க
இயல்பாய்ப் பேசினார் அவர்.
…அருகிலிருக்கும் கான்வெண்ட் பள்ளியொன்றில்
நிகழும் கலாச்சாரப் போட்டிக்கு செல்லும் குழு
நம்முடைய தலைமையில்…

செய்தியைச் சொன்னதும் ஒன்றாய் நிமிர்கிறோம்.
பிறவிவரங்கள் பெற்றுக்கொண்டு
நாம் வெளியேறுகையில்
நம் நெருக்கம் பற்றி அறிந்தவராய்
பரிசுகளோடு நம் பள்ளிப் பெயரும் முக்கியமென
நாசூக்காய் சொல்லி அமர்ந்தார்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Jan 29

கிளாஸ்ல இந்த மாதிரி கேள்வி கேட்டதும் நம்மப் பயலுகளோட ரியாக்ஷன பாத்திருக்கீங்களா? முன்னாடி பெஞ்சுல இருக்கவன் பின்னாடி திரும்பிப் பாப்பான். பின்னாடி இருக்கவன் பக்கத்துல இருக்கவனப் பாப்பான். ரொம்ப நல்லப் பையனா இருக்கிற ஒருத்தன் மெதுவா எந்திரிப்பான், அப்படியே ஸ்லோ மோஷன்ல அங்க இங்க னு கொஞ்சம் பேரு எந்திரிப்பாங்க. ( வேற மாதிரி நடக்கிறதும் உண்டு! ஒரு தடவ எங்க கிளாஸ்ல ஒருத்தன் தூங்கிட்டு இருக்கிறத ஒரு லெக்சரர் பாத்துட்டார். கடுப்புல, ‘ஹௌ டேர் யூ ஸ்லீப் இன் மை க்ளாஸ்’ னு கொஞ்சம் சத்தமாவே கத்திடவும், தூங்கிட்டு இருந்த ஒரு அஞ்சாறு பேரு படக்குனு எந்திரிச்சு நிக்கவும் அவரே சிரிச்சுட்டார் :) ) அன்னைக்கும் ஒரு அஞ்சாறு பேரு எந்திரிச்சாங்க. அவருக்குத் தேவையான கவுண்ட் கெடச்சிடுச்சுனு நான் எந்திரிக்காம உட்காந்தே இருந்தேன். அவங்கள வெளிய அனுப்பிட்டு கொஞ்சம் கணக்குகளக் கொடுத்து சால்வ் பண்ண சொன்னார். அப்பாடா இன்னைக்குத் தப்பிச்சோம்னு நெனச்சா, அவரு கிளாசையே சுத்தி சுத்தி வர ஆரம்பிச்சுட்டார். ஆகா, சனியன் சைட்டடிக்க ஆரம்பிச்சுடுச்சேனு ஒரு பதட்டம் வந்துடுச்சு.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Jan 28