நீ கடந்த பாதையெங்கும்

சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்

உன் கூந்தல் உதிர்த்த‍வையா?

உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?

 

உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍

கொதிப்புடன் வருகிறது வெயில்.

வெயிலிலிருந்து உன்னைக் காக்க

மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை.

இரண்டுக்கும் ப‌ய‌ந்து

உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!

 

தொலைதூர பயணங்களில்

காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன‌‍

செல்பேசி உரையாடல்களை

கனவின் அலைவரிசையில்

தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!

 

குளிர்வேலிக்குள் இருப்ப‍தாய் உணர்கிறேன்.

கண்ணுக்கு மையை

அதிகமாய் தீட்டிவிட்டாயோ?

 

செல்பேசியில் என‌து பேச்சு

இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.

இதயத்திலிருந்து வருவதால்

‘லப்டப்’ ஓசை கலந்திருக்கும்!

Related Posts...

  • இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
    கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான். காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள். காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்....
  • போடா கருவாயா
    அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம். சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள். கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள். அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது ...
  • க‌ளவாடிய கவிதைகள்
    மொட்டுக்க‍ள் பூக்க‍ட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய். உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி மீண்டும் மொட்டுக்க‍ளாவது உனக்கு தெரியுமா? o0o கடலுக்கும் கரைக்குமான எல்லையை வரைய முடியாமல் தத்த‍ளிக்கிறது அலை... நட்புக்கும் காதலுக்குமான எல்லையை வரையறுக்...
  • அவளால் சுமாரான கவிதைகள்
    எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்ப‍டி?...
  • பேரலையும் மாமழையும்
    மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய். மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில் கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்....

33 Responses to “காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!”

  1. Vidhu says:

    “கனவின் அலைவரிசையில்

    தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்”
    Arumaiyaana varigal. Ninaivu payanam pin noakki selgindradhu….

  2. uma says:

    தொலைதூர பயணங்களில்

    காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன‌‍

    செல்பேசி உரையாடல்களை

    கனவின் அலைவரிசையில்

    தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!

    arputham……

  3. Preethi says:

    உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!//

    அழகு !!:):)

    pl visit & comment

    enoda chinna muyarchi
    http://mayilaragu.wordpress.com/2010/04/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD