ஓவியம் வரைய
நீர் வண்ணங்களைக்
கலக்கி வைத்திருந்தேன்.
தரையில் கொட்டி
துவக்கி வைத்தது
ஒரு குழந்தை.

*

ஊரிலிருந்து வந்த மாமன்
தான் புதிதாய் வாங்கி வந்த
ஏரோப்ளேன்,
கண்டெயினர் லாரி,
இரண்டடுக்கு பஸ்,
சுற்றிக்கொண்டே இருக்கும் ரயில்…
எல்லாவற்றையும் எடுத்துக் காட்டினான்.
எல்லா வண்டிகளையும்
ஓட்டி சலித்தக் குழந்தை
பழையபடி
அவனை மண்டியிட சொன்னது…
ஆனை சவாரிப் போக!

Related Posts...

  • ஏமாந்தியா?
    காலையில் படியிறங்கும்பொழுது கீழ்வீட்டுக் குழந்தை முறைத்துப்பார்த்தபடி நின்றது. அதனை சிரிக்க வைக்க கையாட்டி சிரித்தபடி நான் கீழிறங்க,...
  • குழந்தை கவிதை
    ஒரு கையில் புத்தகப்பையும் மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது புடவையணிந்த குழந்தையொன்று. இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு அதட்டிக்கொண்டே வருகிறாள் சீருடையணிந்த தாயொருத்தி!...
  • இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
    கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான். காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள். காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்....
  • ஜனனி – தேங்காயா? தென்னமரமா?
    அக்கா : ( புது வீடு கட்டிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் போட்டிருந்த கொட்டகை மீது நிறைய சுரைக்காய் காய்த்திருப்பதைப் பார்த்து ) இந்த சுரைக்காயெல்லாம் கடைல வாங்கினா முப்பது ரூபா நாற்பது ரூபா சொல்லுவாங்க… ஜனனி : அப்படியாம்மா? அப்படின்னா நாம வீடு கட்டினத...
  • கிளி ஜோதிடம்
    மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன். ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள். “சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன். (கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக) என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்ப...

25 Responses to “துவக்கி வைத்த குழந்தை”

  1. /காதல்கவிதை வகை போல இது பாசக்கவிதை வகை../

    எல்லாம் ஒரு சிறுமுயற்சிதாங்க்கா :)

    /ஜனனி நல்ல மாமா கிடைச்சாரும்மா உனக்கு../

    இத எந்த அர்த்தத்துல சொல்றீங்கன்னு தெரியலையே

  2. /எதையுமே பத்திரமாவெக்க தெரியாதா அண்ணா உங்களுக்கு..??/

    இனிமே உங்ககிட்ட கொடுத்துடறேன்!

    /அந்த ஆனை நீங்க தானே??/

    நானே பூனை சைஸ்ல இருக்கேன் :(

    /நல்லா இருந்தது அண்ணா கவிதை..!!/

    நன்றிங்க ஸ்ரீ!!!

  3. Ragurathan says:

    Attakasam arul….very nice abt the second kavithai…the end was a fantastic one..really a childish one

  4. சேர்ம ராஜா says:

    Rompa Super Annachi..

  5. ரகு, சேர்மராஜா இருவருக்கும் நன்றிகள்!

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD