உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!
*
இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.
*
உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!
*
நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!
*
இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!
Related Posts...
- பேரலையும் மாமழையும்
மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய்.
மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில்
கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்.... - காதல் கவிதை
காதல் கவிதை - இரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய். இயலாத செயலென இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
... - இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான்.
காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள்.
காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்.... - போடா கருவாயா
அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம்.
சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள்.
கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள்.
அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது ... - களவாடிய கவிதைகள்
மொட்டுக்கள் பூக்கட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.
உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி
மீண்டும் மொட்டுக்களாவது உனக்கு தெரியுமா?
o0o
கடலுக்கும் கரைக்குமான எல்லையை
வரைய முடியாமல் தத்தளிக்கிறது அலை...
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்...
நீங்க ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க அருள். உங்க கவிதை தான் என் காதலிக்கு அனுப்பிடு இருககேன் நன்றி