நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!
*
மேலும் சில காதல் கவிதைகள் :
முத்தம்
காதல் கவிதை
அன்புள்ள காதலிக்கு
Valentine’s Day
காதல் வாங்கினால் முத்தம் இலவசம்
Related Posts...
- அக்னி நிலா!
பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.... - களவாடிய கவிதைகள்
மொட்டுக்கள் பூக்கட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.
உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி
மீண்டும் மொட்டுக்களாவது உனக்கு தெரியுமா?
o0o
கடலுக்கும் கரைக்குமான எல்லையை
வரைய முடியாமல் தத்தளிக்கிறது அலை...
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்... - முத்தம்
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?... - காதல் கவிதை
காதல் கவிதை - இரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய். இயலாத செயலென இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
... - பிறந்த வீடா? புகுந்த வீடா?
இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.
*
நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.
...
தீயின் மடியில்
————————–
புருவம் என்னும் வில் எடுத்து காந்த கண்களால் கணை தொடுக்காதே என்னவளே.
நான் தீயின் மடியில் குளிர்க்காய்கின்றேன் உன் ஸ்பரிசத்தில்.
எப்பொழுது விடியல் வரும் உன் தணலில் இருந்து விடைபெற
எப்பொழுது இரவு வரும் உன் கதகதப்பில் சரணடைய…
நாட்கள் செல்ல செல்ல வயது கூடும் என்பார்கள் ஆனால் என்னவளுடன் இருக்கும் போது நாட்கள் என்ன வருடங்கள் சென்றாலும் நான் இளமை ஆகி மழலை பருவம் அடைகின்றேன்
வெர்ய் நிசெ
தவம்
ப
சுபெர்