காலையில் படியிறங்கும்பொழுது
கீழ்வீட்டுக் குழந்தை முறைத்துப்பார்த்தபடி நின்றது.
அதனை சிரிக்க வைக்க
கையாட்டி சிரித்தபடி நான் கீழிறங்க,
சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு
என் தலை மறையும் நேரம்
கையாட்டத் துவங்கியது.
திரும்பி நான் எட்டிப்பார்க்க,
‘ஏமாந்தியா?’ என்பதாய் தலையாட்டி
கோணல் வாய்வைத்து சிரித்தது.
கையாட்டலைவிட தலையாட்டல் அழகாய் இருந்தது.

Related Posts...

  • துவக்கி வைத்த குழந்தை
    ஓவியம் வரைய நீர் வண்ணங்களைக் கலக்கி வைத்திருந்தேன். தரையில் கொட்டி துவக்கி வைத்தது ஒரு குழந்தை....
  • குழந்தை கவிதை
    ஒரு கையில் புத்தகப்பையும் மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது புடவையணிந்த குழந்தையொன்று. இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு அதட்டிக்கொண்டே வருகிறாள் சீருடையணிந்த தாயொருத்தி!...
  • இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
    கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான். காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள். காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்....
  • ஜனனி – தேங்காயா? தென்னமரமா?
    அக்கா : ( புது வீடு கட்டிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் போட்டிருந்த கொட்டகை மீது நிறைய சுரைக்காய் காய்த்திருப்பதைப் பார்த்து ) இந்த சுரைக்காயெல்லாம் கடைல வாங்கினா முப்பது ரூபா நாற்பது ரூபா சொல்லுவாங்க… ஜனனி : அப்படியாம்மா? அப்படின்னா நாம வீடு கட்டினத...
  • கிளி ஜோதிடம்
    மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன். ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள். “சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன். (கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக) என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்ப...

26 Responses to “ஏமாந்தியா?”

  1. /அப்படியா அருள்..!/

    இலக்கியரே. வாங்கறதுன்னா கும்மறது. இப்போ நீங்க கும்முற மாதிரி ;)

  2. சில சம்பவங்கள் திரும்ப திரும்ப மெல்லிய இசையோடு ஸ்லோ மோஷனில் பிளே ஆகி நினைவலைகளை வருடி செல்லும். யோசித்து பார்த்தால் அதில் குறிப்பிடதகுந்ததாய் ஒன்றும் இருக்காது. ஆனால் எதோ உணர்வினை அது மீட்டுகிறது என்பது உண்மை.

  3. உண்மைதான் சாய்ராம்.
    அந்த குழந்தையிடம் நான் எதிர்பார்த்தது ஒன்று. என்னை ஏமாற்றுவதாக நினைத்து அது செய்ததோ வேறொன்று. ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட அது செய்தது அழாகாய் இருந்தது.

  4. //குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?//

    Repeatttuuuuuu…

  5. ///குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?//

    Repeatttuuuuuu…/

    எங்க இருந்தாலும் தேடிப்பிடிச்சி கும்மறதுன்னா வந்துட்ற மாப்ள! நல்லாரு! :)

  6. Venkatesh says:

    இந்த கவிதைய ஒரு நாள் அந்த பாப்பா படிச்சிட்டு அருள்-எ கும்ம போகுது..

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD