உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
நாவல் வடிவம் அதற்கு நீளம்.
சிறுகதையில் மிகவும் சுருங்கும்.
கவிதையென்றால் பொய் சேரும்.

எழுதினாலே இயல்பு மாறக்கூடும்.

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
எழுத்தில் சிதைக்காமல்
நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?

*
பாதிக்கனவுடன்
கலைந்துவிட்ட உறக்கத்தை
மீதிக்கனவுக்காக இழுத்துப்போனேன்.
விழித்தபோது கிடைத்திருந்தது
புதிதாய் இன்னொரு பாதிக்கனவு.

Related Posts...

  • குழந்தை கவிதை
    ஒரு கையில் புத்தகப்பையும் மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது புடவையணிந்த குழந்தையொன்று. இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு அதட்டிக்கொண்டே வருகிறாள் சீருடையணிந்த தாயொருத்தி!...
  • இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
    கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான். காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள். காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்....
  • கிளி ஜோதிடம்
    மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன். ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள். “சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன். (கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக) என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்ப...
  • இந்தியாவில் இரண்டு நிலா
    வேளச்சேரி தரமணி சாலையை ஒட்டியிருந்த ப்ளாட்பாரக் குடிசைகள் ஓரிரவில் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அடுத்தடுத்த நாட்களில் புத்தம்புதிய தார்ச்சாலை மினுமினுப்புடன் அகண்டு நீண்டிருந்தது.. ஆறேழு ஆட்டுக்குட்டிகளை விழுங்கிய மலைப்பாம்பு படுத்திருப்பதைப் போ...
  • போடா கருவாயா
    அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம். சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள். கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள். அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது ...

28 Responses to “என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது”

  1. //கி கி கி அறிவாளிங்க எல்லாம் ஒரே மாதிரிதான் சிந்திப்பாங்களாம் //

    இதற்கு ஸ்ரீ -யிடமிருந்து கண்டிப்பாக கும்மி இருக்குன்னு நினைக்கிறேன்.ஏன்னா அவரும் அறிவாளிதானே…!

    :)

  2. அவரும் நம்ம நண்பர்தான? அப்புறம் அவர் மட்டும் எப்படி இருப்பார்? அவரும் அறிவாளியாத்தான் இருந்தாகனும்! ;)

  3. ஸ்ரீ says:

    அடடா மக்களே உங்க புள்ளரிப்புக்கு நன்றி ஹை. என்னத்த செய்ய தெரிஞ்சோ தெரியாமலோ என்னை அறிவாளின்னு சொல்லிட்டீங்க. வேணும்னா நானும் அதே தலைப்புல ஒரு மொக்கைய போட்டிடுறேன். :) எல்லாம் அறிவாளிக்கு அறிவாளி பண்ற விஷயம் தானே !!!

  4. புல்லரிப்பா? புள்ளரிப்பா?

    நீயும் நானும் நம்மள அறிவாளினு சொல்லிக்கிறத விட பெரிய மொக்கையா இருக்கனும் ஓக்கேவா?

  5. ஆனால் அது தொலைந்து போன காதல்.. நினைவுகளாய் மட்டுமே இருக்கிறது.. :(

  6. Z says:

    //எழுத்தில் சிதைக்காமல்
    நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?//

    :) )))

  7. சரவணக்குமார் ஃபீல் பண்ணாதீங்க!!!

    ஜி, நன்றி!!!

  8. vijay says:

    hi super

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD