அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.

*

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்

*

நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.

*

என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?

*

செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.

Related Posts...

  • விட்டுக்கொடுத்தல்
    சிகரெட் முதல் கடல் குளியல் ECR பயணம் பெரிய ராட்டினத்தில் சுற்றுதல் வரை உனது பயங்களுக்கு அடிபணிந்து...
  • என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?
    கிழிக்க மனமின்றி பத்திரப்படுத்திய உன் கடிதங்களை வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது மனம். * நம் பிரிவுக்குப் பிறகு 128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன் நீ பரிசளித்த ...
  • ஒன்றாகத் தந்தாய்
    தொலைந்து போய் அழும்பிள்ளையின் துயரும் தொலைத்துவிட்டுக் கதறும் தாயின் வலியும் ஒன்றாகத் தந்தாய். பாதி உயிரை இழந்த உடலின் கதறலும் உடல் நீங்கிய உயிரின் தவிப்பும் ஒன்றாகத் தந்தாய். பார்வையற்ற கண்களின் இருமையும் வாயில்லா இதயத்தின் வெறுமையும் ஒன...
  • மரண விளையாட்டு
    குருதி தோய்ந்த நகங்களை நாவால் நக்கியபடி, உயிர் குடிக்கும் உக்கிரத்துடன் பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது. சிக்கிவிட்ட இரையென நடுங்குகிறேன் நான். இரக்கமேதுமின்றி மீண்டுமொருமுறை என்னைக் கொன்றுவிட்டு சலனமேயில்லாமல் என்னருகிலேயே படுத்துறங்குக...
  • தப்பித்துச் சென்று சிறைபடுதல்
    எவருக்கும் அனுமதியற்ற எனது அறைச்சுவரெங்கும் ஆணியில்லாமல் தொங்குகின்றன உனது புகைப்படங்கள். ஒன்றில் சிரிக்கிறாய். ஒன்றில் சிணுங்குகிறாய். ஒன்றில் பயப்படுகிறாய். ஒன்றில் முகம்புதைத்து அழுகிறாய். ஒன்றில் தூர விலகி நடக்கிறாய். ...

35 Responses to “செல்லரிக்கும் காதல்”

  1. ரெண்டும் மூணும் சுமாரா இருக்கு.. மத்தது அருமை…அசத்தல்.

    கலந்து போடும் போது அது பக்கத்துல எட்டிப்பாக்கமுடியாம சுமாரா ஆகிடுச்சு போல ரெண்டாவதும் மூணாவதும்..

  2. /ரெண்டும் மூணும் சுமாரா இருக்கு/

    வசனம் அப்படிதாங்க்கா இருக்கும் :) )) உண்மைய சொன்னதுக்கு நன்றி. நல்லா எழுதப்பாக்குறேன்!

    /மத்தது அருமை அசத்தல்./

    நன்றி :)

    /கலந்து போடும் போது அது பக்கத்துல எட்டிப்பாக்கமுடியாம சுமாரா ஆகிடுச்சு போல ரெண்டாவதும் மூணாவதும்../

    இனி கலப்படங்கள் தவிர்க்கப்படும் ;)

  3. Reegan says:

    //செல்லரித்துப் போன
    உனது பழையப் படமொன்று
    என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.//

    ரொம்ப அருமையான வரிகள்…
    ஆனா எல்லா கவிதையிலும் ஒரு சோகம் இருக்கு……
    அது பாசிடிவா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்…..

  4. நன்றிங்க ரீகன்!
    எல்லா கவிதையிலுமா? புலம்பல் கவிதை மட்டும்தான இப்படி இருக்கும்!

  5. M.sathish says:

    arul sir nan karur than. innakum ippadithan COLOR COLORa arthamatra varthaikal greetingla kiriki koduthu kalagadithuvital innai oruthi.

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD