நீ நினைக்கிறேன்.
நான் பேசுகிறாய்.
நமக்குள் காதல் வராமல்
என்ன செய்யும்?
*
பூக்களற்ற தீவுகளுக்கு
மணம்வீசப் பயணிக்கிறது.
உன் கூந்தலிலிருந்து
பிரிந்த இழையொன்று.
*
நேரில் கோபித்துக்கொண்டு
கனவில் வந்து கொஞ்சும்
மக்கு நீ!
*
குடையின்றி நீ வருகையில்
வெயிலுக்கும் மழைக்கும் சண்டை!
*
நீ நிலாச்சோறுண்ணும்
பௌர்ணமி இரவுகளில்
காதல் கள்ளுண்ணும்
நிலா!
இசையுடன் கேட்க : (நன்றி ஜோஷ்வா ஸ்ரீதர்
)
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
Related Posts...
- பேரலையும் மாமழையும்
மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய்.
மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில்
கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்.... - காதல் கவிதைகள்
காதல் கவிதைகள் - நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!... - கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!... - அன்பே காதல் இமை மழை குடை
இந்த பதிவெழுதத் தூண்டிய அய்யனாருக்கு நன்றி :-)... - அக்னி நிலா!
பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்....
பொன்னக், ரீகன், கலை,
மூவருக்கும் நன்றிகள்!
hmmm…:) naan ninaithadhai neengal pesi irukkireergal…:) padikkum bozhudhu zha na mattum parthirukkalame…? matra badi kavidhai arumai…. ungal kural (enakku bojanam kidaikka vittaalum parava illai…!?
) inimai…!:)
arumai…superb….
அழகான மயிலறகால் மனதுக்கு மிக பிடித்தவர் வருடும் சுகமாய் இதமான வரிகள் வாழ்த்துக்கள் பெருங்கோ அவர்களே
nice pa
super…. pa