
அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.
*
கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.
*
“ஆயிரம் முத்தங்களுடன்,
_____”
என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
ஓர் இதழொப்பம் செய்.
*
கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.
*
ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”
Related Posts...
- களவாடிய கவிதைகள்
மொட்டுக்கள் பூக்கட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.
உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி
மீண்டும் மொட்டுக்களாவது உனக்கு தெரியுமா?
o0o
கடலுக்கும் கரைக்குமான எல்லையை
வரைய முடியாமல் தத்தளிக்கிறது அலை...
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்... - முத்தம்
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?... - காதல் கவிதை
காதல் கவிதை - இரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய். இயலாத செயலென இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
... - காதல் கவிதைகள்
காதல் கவிதைகள் - நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!... - பிறந்த வீடா? புகுந்த வீடா?
இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.
*
நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.
...
superb………………………
நன்றி நித்யா!
That last one is superbbbbbbbbbbbbbbb.
அருமை!
amazing lines…especially the last four lines….gr8 arutperungo…
Rasikka… meendum pakkida… vaikkum vasana kavidhai…. eadhu ungalluku evvalavu neram… ippadi ellam kavidhai ezhudhuvadarku?!!!
“meendum padikka” endru vasikavum… thattachu pizhai… mannikka vendum kavi….
aaakaa…. arumaijilum arumai… amaisare… intha kavithai alitha kavi perasuku ean naaddil paatiyai ealuti tarukiren.. atatkaana eatpaadukalai ipoluthe seiyunkal amaisare…
aakadum manna…
கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.
suppve nice ,,,
“ஆயிரம் முத்தங்களுடன்,
_____”
என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
ஓர் இதழொப்பம் செய்.
ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”
இந்த 2ம் அடிச்சுக்க ஆளே இல்ல.. அருள்