‘எனக்கு உன்னைப்போல
கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.
எனக்கும்தான் உன்னைப்போல
கவிதை பேசத் தெரியாது!
*
கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன்.
*
கவிதையெழுதுவதில்
என் விரல்களை வென்றுவிடுகின்றன
உன் இதழ்கள்!
*
நீ கையொப்பமிட்டு தரும்
எந்தப் புத்தகமும்
கவிதைப் புத்தகம்தான்!
*
இப்படி வாசிக்க…
ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.
நேசிக்க…நீ மட்டும்தான்!
*
ஒருவழியா வேர்ட்பிரசுக்கு மாறி ஒரு கவுஜைப் பதிவும் எழுதியாச்சு. ப்ளாக்கர் – வேர்ட்பிரஸ் மாற்றம் நடந்தபோதும், வேர்ட்பிரஸ் நீட்சிகளைப் பயன்படுத்தத் துவங்கியபோதும் சிரமமிருந்தாலும் எப்படியோ சமாளிச்சாச்சு! வேர்ட்பிரசுக்கு மாறினது குறித்த விரிவான பதிவு ஓரிரு நாளில் பதிக்கிறேன். புது வீடு எப்படியிருக்குனு சொல்லிட்டுப்போங்க
Related Posts...
- இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான்.
காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள்.
காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்.... - போடா கருவாயா
அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம்.
சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள்.
கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள்.
அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது ... - களவாடிய கவிதைகள்
மொட்டுக்கள் பூக்கட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.
உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி
மீண்டும் மொட்டுக்களாவது உனக்கு தெரியுமா?
o0o
கடலுக்கும் கரைக்குமான எல்லையை
வரைய முடியாமல் தத்தளிக்கிறது அலை...
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்... - அவளால் சுமாரான கவிதைகள்
எல்லோருக்கும்
முகம் காட்டும் கண்ணாடி
உனக்கு மட்டும்
நிலவு காட்டுவதெப்படி?... - பேரலையும் மாமழையும்
மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய்.
மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில்
கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்....
@அபூபக்கர்,
வாழ்த்துகளுக்கு நன்றிங்க அபூ. தள வடிவமைப்புக்கு நான் தனியா எதுவும் பண்ணலையே! எல்லாமே இணையத்துல இலவசமா கிடைக்கிறதுதான்!
all kavathi are super ………………….
நன்றிங்க மதி.
lovesai anbu ammu
Attakasam!
super sir