அறுபது ஆண்டுகளுக்கு முன்பு
தாத்தா காலத்தில் கட்டப்பட்ட வீடு அது.
மச்சு வீடென்றால் எல்லோருக்கும் தெரியும்.

அத்தைப்பெண், மாமன்மகனான
அம்மாவும் அப்பாவும்
சிறுவயது முதல் விளையாண்ட வீடு.
அவர்களின் திருமணமே அந்த வீட்டில்தான் நடந்ததாம்.

அப்புறம் அப்பா காலத்தில்
தொழில் நலிவடைய, வீடு அடமானத்திற்குப் போனது.
கடைசியாக அப்பாவும் நலிவடைய
அவரைக்காப்பாற்ற வீட்டை விற்றோம்.
வீடும்போனது.
கொஞ்ச நாளில் அப்பாவும் போனார்.

நாங்கள் இந்த வாடகை வீட்டுக்கு வந்து
இருபது ஆண்டுகள் முடியப்போகிறது.
இத்தனை நாள் சேமிப்புடன், வங்கிக்கடனையும் சேர்த்து
நேற்றுதான் பழைய மச்சு வீட்டையே விலைபேசி முடித்தேன்.
மீண்டும் தான் வாழ்ந்த வீட்டுக்கே போகிற மகிழ்ச்சி அம்மாவுக்கு.

இன்று வாடகை வீட்டை காலி செய்து கிளம்பும்போது
தான் வாழ்ந்த வீட்டையே திரும்பி பார்த்தபடி வருகிறாள்
என் பன்னிரண்டு வயது மகள்.
பி.கு : இது 101% கற்பனை.

Related Posts...

  • குழந்தை கவிதை
    ஒரு கையில் புத்தகப்பையும் மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது புடவையணிந்த குழந்தையொன்று. இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு அதட்டிக்கொண்டே வருகிறாள் சீருடையணிந்த தாயொருத்தி!...
  • இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
    கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான். காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள். காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்....
  • கிளி ஜோதிடம்
    மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன். ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள். “சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன். (கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக) என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்ப...
  • இந்தியாவில் இரண்டு நிலா
    வேளச்சேரி தரமணி சாலையை ஒட்டியிருந்த ப்ளாட்பாரக் குடிசைகள் ஓரிரவில் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அடுத்தடுத்த நாட்களில் புத்தம்புதிய தார்ச்சாலை மினுமினுப்புடன் அகண்டு நீண்டிருந்தது.. ஆறேழு ஆட்டுக்குட்டிகளை விழுங்கிய மலைப்பாம்பு படுத்திருப்பதைப் போ...
  • போடா கருவாயா
    அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம். சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள். கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள். அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது ...

22 Responses to “அம்மா வாழ்ந்த மச்சுவீடு”

  1. viji says:

    Romba Nalla irukku Arul………Cute one……

  2. Bob Albert says:

    101 % Karpanaiyaai irrundhalum…

    இன்று வாடகை வீட்டை காலி செய்து கிளம்பும்போது
    தான் வாழ்ந்த வீட்டையே திரும்பி பார்த்தபடி வருகிறாள்
    என் பன்னிரண்டு வயது மகள்.

    …engira varikal manasai thoduthunga…

    Really superb…

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD