தொலைந்து போய் அழும்பிள்ளையின் துயரும்
தொலைத்துவிட்டுக் கதறும் தாயின் வலியும்
ஒன்றாகத் தந்தாய்.

பாதி உயிரை இழந்த உடலின் கதறலும்
உடல் நீங்கிய உயிரின் தவிப்பும்
ஒன்றாகத் தந்தாய்.

பார்வையற்ற கண்களின் இருமையும்
வாயில்லா இதயத்தின் வெறுமையும்
ஒன்றாகத் தந்தாய்.

இனிமைகொள்ள ஒரு நினைவும்
தனிமைகொல்ல ஒரு நினைவும்
ஒன்றாகத் தந்தாய்.

எடுத்துப்போன இதயத்தை மட்டும் ஏன்
இரண்டாகத் தந்தாய்?

Related Posts...

  • யாரோ!
    சொற்களைத் தந்தாய். கவிதை செய்தேன். யாரோ வாசிக்கிறார்! மொட்டுக்களைத் தந்தாய். மலரச் செய்தேன். யாரோ சூடிக் கொள்கிறார்!...
  • குழந்தை கவிதை
    ஒரு கையில் புத்தகப்பையும் மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது புடவையணிந்த குழந்தையொன்று. இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு அதட்டிக்கொண்டே வருகிறாள் சீருடையணிந்த தாயொருத்தி!...
  • இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
    கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான். காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள். காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்....
  • கிளி ஜோதிடம்
    மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன். ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள். “சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன். (கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக) என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்ப...
  • இந்தியாவில் இரண்டு நிலா
    வேளச்சேரி தரமணி சாலையை ஒட்டியிருந்த ப்ளாட்பாரக் குடிசைகள் ஓரிரவில் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அடுத்தடுத்த நாட்களில் புத்தம்புதிய தார்ச்சாலை மினுமினுப்புடன் அகண்டு நீண்டிருந்தது.. ஆறேழு ஆட்டுக்குட்டிகளை விழுங்கிய மலைப்பாம்பு படுத்திருப்பதைப் போ...

19 Responses to “ஒன்றாகத் தந்தாய்”

  1. aruna says:

    //இனிமைகொள்ள ஒரு நினைவும்
    தனிமைகொல்ல ஒரு நினைவும்
    ஒன்றாகத் தந்தாய்.//

    உண்மையான வார்த்தைகள்!! நல்லா இருக்குங்க!
    அன்புடன் அருணா

  2. அருட்பெருங்கோ says:

    /உண்மையான வார்த்தைகள்!! நல்லா இருக்குங்க!
    அன்புடன் அருணா/

    நன்றிங்க அருணா.

  3. முகவைத்தமிழன் says:

    //பாதி உயிரை இழந்த உடலின் கதறலும்
    உடல் நீங்கிய உயிரின் தவிப்பும்
    ஒன்றாகத் தந்தாய்.//

    நின்று நிதானித்து பல முறை படித்து உள்வாங்கிய வரிகள்!! அர்த்தமுள்ளவை!!

    வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ!

    முகவைத்தமிழன்

  4. கோபிநாத் says:

    மெல்லிய சோகம்…நல்லாயிருக்கு.

    ஆனாலும் ஒரு கேள்வி மாப்பி உனக்கு என்ன ஆச்சு!!?

  5. அருட்பெருங்கோ says:

    /நின்று நிதானித்து பல முறை படித்து உள்வாங்கிய வரிகள்!! அர்த்தமுள்ளவை!!

    வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ!
    /

    வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க முகவைத்தமிழன்.

  6. அருட்பெருங்கோ says:

    /மெல்லிய சோகம்…நல்லாயிருக்கு./

    நன்றி கோபி.

    /ஆனாலும் ஒரு கேள்வி மாப்பி உனக்கு என்ன ஆச்சு!!?/

    என்னப்பா திடீர்னு இப்படி ஒரு கேள்வி? :)

  7. மங்களூர் சிவா says:

    ம்

    ஓகே

    //
    சேர்ந்த காதலைவிட உடைந்த காதல்தான் உன்னதமானது – இதை நான் சொல்லவில்லை
    கவி சாம்ராட் தாகூர் சொல்கிறார்.

    தாஜ்மகால் கட்டி முடித்த அந்நாளில் ஷாஜகான் கூட மும்தாஜின் மரணத்திற்காக மகிழ்ந்திருப்பானோ,
    ஒருவேளை ஒன்றாயிருந்திருந்தால் ஒன்பதாயிரம் பிரச்சனைகளில் அவர்களின் காதலும் ஒன்றாகி இருந்திருக்கும்.
    //

    இதுவும் சரிதான்!!

  8. suba says:

    (இனிமைகொள்ள ஒரு நினைவும்
    தனிமைகொல்ல ஒரு நினைவும்
    ஒன்றாகத் தந்தாய்.)

    Inthe vari rombe Pidichiruku.

  9. நன்றிங்க சுபா!

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD