பால்யத்தின் காற்றுக் காலமொன்றில்
பட்டம் விட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதில்
ஆசையுடன் விளையாட அதுவும் வந்திருக்கிறது.
விபத்தில் அடிப்பட்ட கல்லூரி நண்பனை
மருத்துவமனை தூக்கிச்சென்ற பதற்றமான இரவில்
என்னுடன் சேர்ந்து அழுதிருக்கிறது.
அலுவலகத்துக்கு இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த
ஒரு திங்கட்கிழமையின் பரபரப்பான காலையில்
என்வேகத்தில் என்னருகிலேயே பயணித்திருக்கிறது.
நெருங்கிய உறவின் மரணமொன்றில்
சுடுகாட்டிலிருந்து திரும்பும்வழியிலேயே
எங்களைக் குளிக்க வைத்திருக்கிறது.
அப்பொழுதெல்லாம் சபித்துவிட்டு
வீட்டின் அறைக்குள்
நாற்காலியில் சாய்ந்துகொண்டு,
சூடான தேநீரைப் பருகியபடி
ஜன்னல் வழியே வெட்கமின்றி ரசித்திருக்கிறேன்
அதன் பொழிவை!
Related Posts...
- பேரலையும் மாமழையும்
மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய்.
மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில்
கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்.... - கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!... - குழந்தை கவிதை
ஒரு கையில் புத்தகப்பையும்
மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு
பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது
புடவையணிந்த குழந்தையொன்று.
இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு
அதட்டிக்கொண்டே வருகிறாள்
சீருடையணிந்த தாயொருத்தி!... - இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான்.
காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள்.
காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்.... - கிளி ஜோதிடம்
மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன்.
ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள்.
“சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன்.
(கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக)
என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்ப...
வெட்கமின்றி ரசித்திருக்கிறேன் உன் கவிகளை…
நன்றிங்க பூபதி.
வெட்கமின்றி ரசிச்சீங்களா? ரசிக்கிறதுக்கும் வெட்கத்துக்கும் என்ன சம்பந்தம்?
Hi ArutPerunGo…
Just today happened to see ur blog… Really had heart-filled-joy while seeing ur poems.. Especially that “Jannal Valiye….”
Kavithaihalai rasikkum ullangalai orunge kandathil mikka mahizhchi adainthaen….
En mahichiyayum inge pahirnthu kolhiraen…
Ungal kavi pani thodara en manamaarntha vaazhthukkal….
- Mahe
it s a new though about MAZHAI….. nice