குருதி தோய்ந்த நகங்களை நாவால் நக்கியபடி,
உயிர் குடிக்கும் உக்கிரத்துடன்
பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது.
சிக்கிவிட்ட இரையென நடுங்குகிறேன் நான்.
இரக்கமேதுமின்றி மீண்டுமொருமுறை
என்னைக் கொன்றுவிட்டு
சலனமேயில்லாமல்
என்னருகிலேயே படுத்துறங்குகிறது உன் நினைவு.
மறுபடியும் உயிரூட்டி
மரண விளையாட்டு விளையாட!

*

நம் காதலின்
மிக நீண்ட உரையாடல்
உனது மௌனம்.

*

அழகான கவிதையாய்
நுழைந்தவள்
கனமான கவிதையை
விட்டுச் செல்கிறாய்

*

நீ. நான். காதல்.
முக்கோண விளையாட்டில்
எப்போதும் தோற்கிறோம்
நானும் காதலும்.

*

நாளை முதல்
உன்னை மறந்துவிடுவதாக சொன்னது உண்மைதான்.
ஆனால் எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’ இருக்கிறது.

Related Posts...

  • என் கனவு
    அது ஓர் அழகிய நிலாக்காலம். கவலை வெயில் சுடாத இனிய இரவைப்போன்றது. இரவின் மடியில் இனிய உறக்கத்தில் நான். என்னைத் தேடி மெல்ல வருகிறது ஒரு கனவு. ...
  • விட்டுக்கொடுத்தல்
    சிகரெட் முதல் கடல் குளியல் ECR பயணம் பெரிய ராட்டினத்தில் சுற்றுதல் வரை உனது பயங்களுக்கு அடிபணிந்து...
  • செல்லரிக்கும் காதல்
    அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும் உன் பழைய காதல் கடிதமொன்று தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது....
  • என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?
    கிழிக்க மனமின்றி பத்திரப்படுத்திய உன் கடிதங்களை வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது மனம். * நம் பிரிவுக்குப் பிறகு 128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன் நீ பரிசளித்த ...
  • ஒன்றாகத் தந்தாய்
    தொலைந்து போய் அழும்பிள்ளையின் துயரும் தொலைத்துவிட்டுக் கதறும் தாயின் வலியும் ஒன்றாகத் தந்தாய். பாதி உயிரை இழந்த உடலின் கதறலும் உடல் நீங்கிய உயிரின் தவிப்பும் ஒன்றாகத் தந்தாய். பார்வையற்ற கண்களின் இருமையும் வாயில்லா இதயத்தின் வெறுமையும் ஒன...

29 Responses to “மரண விளையாட்டு”

  1. தினேஷ் says:

    உங்கள் கற்பனையும் அதை பிரதிபலிக்கிற கவிதைகளும் மிகமிக அருமை…

    தினேஷ்

  2. கோபால் says:

    நீ. நான். காதல்.
    முக்கோண விளையாட்டில்
    எப்போதும் தோற்கிறோம்
    நானும் காதலும்

    அருமை :) )))

  3. Deekshanya says:

    நண்பர் அருட்பெருங்கோ அவர்களுக்கு,
    நெடு நாட்கள் உங்கள் வலைப்பூவை என்னால் பார்க்கமுடியவில்லை. This page does not exist என்று சொல்லும். நேரடியாக தட்டினாலோ, அல்லது தேன்கூட்டிலிருந்தோ தட்டினாலும் இதே பிழை. ஏன் என்று புரியவில்லை. இன்று என் goodluck போலும், கிடைத்துவிட்டது என் கணினிக்கு உங்கள் பக்கம்!!!

    இனி comments…

    //நாளை முதல்
    உன்னை மறந்துவிடுவதாக சொன்னது உண்மைதான்.
    ஆனால் எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’ இருக்கிறது// எத்தனை அழகான வரிகள். எவ்வளவு உண்மை.

    எங்கோ படித்தது …
    What we have once enjoyed we can never lose. All that we love deeply becomes a part of us. Helen Keller

    நன்றி,
    தீக்ஷண்யா.

  4. அருட்பெருங்கோ says:

    /உங்கள் கற்பனையும் அதை பிரதிபலிக்கிற கவிதைகளும் மிகமிக அருமை…

    தினேஷ்/

    மிக்க நன்றி தினேஷ்!

  5. அருட்பெருங்கோ says:

    /நீ. நான். காதல்.
    முக்கோண விளையாட்டில்
    எப்போதும் தோற்கிறோம்
    நானும் காதலும்

    அருமை :) )))/

    நன்றி கோபால்.

  6. அருட்பெருங்கோ says:

    /நண்பர் அருட்பெருங்கோ அவர்களுக்கு,
    நெடு நாட்கள் உங்கள் வலைப்பூவை என்னால் பார்க்கமுடியவில்லை. This page does not exist என்று சொல்லும். நேரடியாக தட்டினாலோ, அல்லது தேன்கூட்டிலிருந்தோ தட்டினாலும் இதே பிழை. ஏன் என்று புரியவில்லை. இன்று என் goodluck போலும், கிடைத்துவிட்டது என் கணினிக்கு உங்கள் பக்கம்!!!/

    அருட்பெருங்கோ அவர்களுக்கா? :)

    என்ன பிழையென்று எனக்கும் புரியவில்லை. எனது செய்தியோடையை ( http://feeds.feedburner.com/arutperungo) கூகிள் ரீடரிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ இணைத்துக்கொண்டு வலைப்பதிவு பக்கம் வராமலே கூட படித்துக்கொள்ளலாம் ;)

    ///நாளை முதல்
    உன்னை மறந்துவிடுவதாக சொன்னது உண்மைதான்.
    ஆனால் எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’ இருக்கிறது// எத்தனை அழகான வரிகள். எவ்வளவு உண்மை.

    எங்கோ படித்தது …
    What we have once enjoyed we can never lose. All that we love deeply becomes a part of us. Helen Keller

    நன்றி,
    தீக்ஷண்யா.
    /

    ம்ம்ம் உண்மைதான். ஹெலென் கெல்லரும் சரியாதான் சொல்லியிருக்காரு…

    நன்றிங்க தீக்ஷண்யா!

  7. M.sathish says:

    arul sir ENN ippdillam nadakuthu, pathunki pathuki varuvathu, thaliponalum thurathum, Excellent Lines

  8. Arunasalam Rahini says:

    உங்கள் கற்பனையும் அதை பிரதிபலிக்கிற கவிதைகளும் மிகமிக அருமை…

  9. Arunasalam Rahini says:

    very very nice this நாளை முதல்
    உன்னை மறந்துவிடுவதாக சொன்னது உண்மைதான்.
    ஆனால் எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’ இருக்கிறது.

    அழகான வரிகள்

    nice………………………………..

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD