‘காலைவணக்கம்’ சொல்லிக்கொண்டு வந்த மடலில்
சிரித்தபடி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை.
குழந்தையைப் பார்த்ததும்
பால்யம்…
பள்ளிக்கூடம்…
தமிழய்யா…
தமிழ்…
என்றும்,
தமிழை நினைத்ததும்
கவிதை…
இலக்கியம்…
திரைப்படம்…
இசை…
என்றும்,
இசையை நினைத்ததும்
இளையராஜா…
எஸ்பிபி…
எஸ்பிபி சரண்…
சென்னை 28…
என்றும்,
சென்னையை நினைத்ததும்
வெயில்…
கடல்…
கடற்கரை…
காதல்…
என்றும்,
எதை நினைத்தாலும்
எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்
அடுத்து
உன்னை நினைத்ததும்
நீ மட்டுமே நிறைகிறாய்!
Related Posts...
- கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!... - காதல் ரயில்
நாம் தொடாமல் தான்
பேசுகிறோம்…ஆனால்,
காற்றில் கைகோர்த்து
விளையாடுகின்றன…
நாம் பேசிய வார்த்தைகள்!... - இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான்.
காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள்.
காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்.... - போடா கருவாயா
அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம்.
சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள்.
கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள்.
அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது ... - களவாடிய கவிதைகள்
மொட்டுக்கள் பூக்கட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.
உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி
மீண்டும் மொட்டுக்களாவது உனக்கு தெரியுமா?
o0o
கடலுக்கும் கரைக்குமான எல்லையை
வரைய முடியாமல் தத்தளிக்கிறது அலை...
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்...
அருமை…
எதார்த்தமான வரிகள்…
எப்போதும் போல் வாழ்த்துக்கள்
கடைசில பேப்பர படிக்கவெ இல்ல போல
)
/அருமை… எதார்த்தமான வரிகள்…
எப்போதும் போல் வாழ்த்துக்கள்/
நன்றிங்க கோபால்!!!
/கடைசில பேப்பர படிக்கவெ இல்ல போல
)/
என்ன சொல்ல வர்றீங்கனு புரியல பாலா!
எனக்கு பழய நினைப்புக்ள் வருகிறது….
அருமையான கவிதை….
வாழ்த்துக்கள்….. தொடருங்கள்…….
தொடர்ச்சியும் நடையும் அழகாய் வந்துள்ளது.
மேலும் தொடர்க!
/எனக்கு பழய நினைப்புக்ள் வருகிறது….
அருமையான கவிதை….
வாழ்த்துக்கள்….தொடருங்கள்……./
வாழ்த்துகளுக்கு நன்றிகள் தினேஷ்!
நன்றிங்க girl of destiny!