Oct 30

“இதோ பாருங்கோ… பொதுவாவே சித்திரை மாசம் அம்பாளுக்கு உகந்த நாள்… கும்பாபிஷேகத்துக்கு உகந்த நட்ஷத்திரம் வெள்ளிக்கிழமையிலயே வர்றதும் ரொம்ப விஷேஷமானது. வளர்பிறையும்கூட” வந்திருந்த ஐயன், கிட்டாஞாகிட்ட சொன்னதையே எல்லாருக்கும் கேக்குறாப்ல திரும்பி ஒருதரம் சத்தமா சொன்னாரு.

“அதில்ல சாமி… எங்க ஊருல சித்திர மாசம் ரெண்டாவது வெள்ளிக்கிழம ஏற்கனவே ஒரு கெட்டது நடந்து போச்சு…அதே நாள சாமி சொல்லவுந்தான்…” – இழுத்தாரு கிட்டாஞா.
அது வரைக்கும் பேசாம இருந்த கணக்கம்பட்டியாரு சித்திரையிலேயே மொத வெள்ளிக்கிழம நல்லாருக்குதான்னு பாக்கலாம்னு யோசனை சொன்னாரு.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Oct 30

கொஞ்சங்கூட விடியாத நல்ல இருட்டு. இன்னும் கோழி கூட கூப்புட்ல. வெங்காயத் தோட்டத்துல தண்ணியடைக்கறதுக்காவ தெக்கியூர் ரோட்ல சைக்கிள்ல பறந்துகிட்டு இருந்தாரு கிட்டாஞா.சாமியாடித் தோட்டத்துக்கிட்ட மேக்கத் திரும்பும்போதுதான் - அந்நேரத்துல தெக்க இருந்து யாரோ வெக்கு வெக்குனு ஓடியார மாதிரி இருந்துது. வர்றவங்க என்னமோ கத்திகிட்டே வாராப்ல இருந்துது. காதோட சேத்து துண்ட உருமா கட்டிருந்ததால கிட்டாஞாவுக்கு ஒரு சத்தமும் கேக்கல. ஏதாவது கெட்டது நடந்து போச்சோனு வெசனப்பட்டவரு துண்ட அவுத்துக்கிட்டே மேக்கத் திரும்பாம தெக்கையே விட்டாரு சைக்கிள.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Oct 28

143 kavidhai 1

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Oct 03

புதிதாய் வாங்கிய கேமராவில்
முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென
நீ கேட்டுக்கொண்ட போதும்,
நான் படமெடுத்தது
உன் நிழலை.

என் பிறந்தநாளுக்கு,
கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
உன் கைக்குட்டையை.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,