அஞ்சாப்பு படிக்கும்போது
பென்சில் இல்லாதவங்கள
திலகா டீச்சர் முட்டிப் போட சொல்ல…
என்னோட பெரிய பென்சில
பாதியா ஒடச்சு ஒனக்கு கொடுத்ததுல
எம்பென்சில் சிறுசாப்போச்சு…
இங்கிலீசு பரிட்சையில
உனக்கும் காமிச்சக் குத்தத்துக்கு
என்னோட மார்க்கதான் பாதியாக்கிட்டாரு
காளிமுத்து வாத்தியாரு…
காலேஜ்ல தம்மடிக்கும்போதும்
ஆளுக்கொரு “பஃப்” னு
நீயும் சேர்ந்து இழுத்ததுல
ஒவ்வொரு தடவையும் பாதி ‘தம்மு’தான்…
நீ வராதப்ப உனக்கு ப்ராக்ஸி போட்டு மாட்டினதுல
HOD க்ளாஸ்ல என்னோட attendance தான் 50% ஆச்சு…
ஆம்லேட்டோ, ஆஃப் பாயிலோ
‘ருசி’ பார்க்கிறேன்னு
எந்தட்டுல நீ கைய வச்சா
எனக்கு மிஞ்சறது பாதிதான்…
Hostel TV Hall – ல்ல
Star movies க்கு நீயும் KTV க்கு நானும் சேனல மாத்தி மாத்தி
நாம பாத்த படமெல்லாம் பாதிபாதிதான்…
இப்படி TASMAC சரக்குல இருந்து சொந்த கத சோகம் வரைக்கும்
உன்னோட பகுந்துக்கிட்டா எல்லாத்தையும் பாதியாக்குற…
சந்தோசத்த மட்டும் எப்பட்றா மச்சான் ரெண்டு மடங்காக்கற?
( இது கவிதையெல்லாம் அல்ல… என்னுடைய பள்ளி, கல்லூரி கால நண்பர்களுக்கு நான் அனுப்பிய மொக்கை மெசேஜ்… ஒரு காதல் பாட்டு வேணும்னா இங்க கிடைக்கும்)
Related Posts...
- ஆம்.நானும் காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்.
அண்மைக்காலமாக
எனக்குள்ளும் புதிய மாற்றங்கள்
தென்படத் துவங்கியிருக்கின்றன.
என்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவது எனக்கேத் தெரிகிறது.
இராத்திரியின் நீளம் விளங்குகிறது.
நானும் கவுஜை ஜொள்ளுகிறேன்.
என் பிம்பம் விழுந்தே கண்ணாடிகள் உடைகின்றன.
கண்களிரண்ட... - ஹலோ யார் பேசறது? – 1
‘டேய் எங்களுக்கும் தான் நாளைக்கு செம் இருக்கு. எதுக்கு இப்போ படிக்கிற மாதிரி சீன் போடற?’
‘அடப்பாவிகளா… கிளாஸ் புள்ளயோட மூனு இண்டர்னல் பேப்பர் மட்டும்தாண்டா ஜெராக்ஸ் எடுத்துப் பாத்துட்டு இருக்கேன். இதுவே உங்களுக்குப் பொறுக்கலையா?’
‘புக்க பாத்து மண... - ஒரு வாரம் பின்தொடரப் போகும் மொக்கையின் குரல் :)
இணையத்துல இலவசமா கிடைக்குதுன்னு சொன்னாங்க. சரினு ஒன்ன ஆரம்பிச்சுட்டேன் ;-) அது வந்துங்க, என்னோட கல்லூரி காலத்துல எப்பவுமே படிக்கிறதுக்கு ஏதோ ஒரு புத்தகம் (ஓசில தான்) கெடச்சுடும். படிக்க, கும்மியடிக்க னு என்ன மாதிரியே உருப்படாததுங்க எல்லாம் ஒன்னாவே சு... - எவனா இருந்தா எனக்கென்ன?
தலைப்ப பார்த்ததும் யாரும் திட்ட வந்துடாதீங்க. பேர் வைக்கிறதுக்காக நம்ம மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க பாருங்க. காங்கேயம் பக்கத்துல ஒரு டீக்கடையோட பேரு ‘அடேங்கப்பா’ டீஸ்டால். ஒரு தடவை மதுரை போற வழியில ‘திடீர் உணவகம்’னு ஒரு கடை பார்த்தேன். ஹைதரப... - கல்யாண வீட்ல மொய் எழுதியிருக்கீங்களா?
இன்னொருத்தர் பேர சொல்லிட்டு 'முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்'னு அடுப்புக்குள்ள போடுங்கன்னாரு. எந்த அடுப்புக்குள்ள போட்றதுன்னு நான் முழிக்க, அவர் திரும்ப திரும்ப அடுப்புக்குள்ள போடுங்க அடுப்புக்குள்ள போடுங்கன்னே சொல்லிட்டு இருந்தாரு. எனக்கு அப்புறம் ...
வாங்க முத்துலெட்சுமி,
/ friendship day wishes…அருமையான செய்தி அனுப்பி இருக்கீங்க நண்பர்களுக்கு
உங்கள் நண்பர்கள் குடுத்துவைத்தவர்கள்./
ஹி ஹி அப்படி சொல்றீங்களா? சரிதான்!!!
கோபி,
/ அருள் சூப்பர் மொக்கை
))/
ஐயையோ நான் வெறும் மொக்கைனு இல்ல நெனச்சேன்… இது சூப்பர் வகையா?
/நண்பர்கள் தின வாழ்த்துக்கள்/
நன்றிப்பா… உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்!!!