அது ஓர் அழகிய நிலாக்காலம்.
கவலை வெயில் சுடாத இனிய இரவைப்போன்றது.
இரவின் மடியில் இனிய உறக்கத்தில் நான்.

என்னைத் தேடி மெல்ல வருகிறது ஒரு கனவு.
ஆனால், கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
கனவைத் துரத்தி விடுகிறேன் நான்.

அதன் வருகையும் என் துரத்தலும் தொடர்கதை.
கனவைத் துரத்தி துரத்தி கடைசியில் கனவின் பின்னே நான்.
அதனை விரட்டும் முயற்சியில் தொடங்கிய என் துரத்தல்
எப்படியாகினும் அதனை பிடித்து விடுகிற முயற்சியில் முடிகிறது.

ஓர் பௌர்ணமி இரவில் அந்தக் கனவும் கை (கண்?) கூடுகிற‌து.
கனவுக்கே உண்டான இயல்போடு
அது கலைந்து விட முயலும்போதெல்லாம்
நனவாகும் ஆசைகாட்டி அதனை என்னோடு இருத்திக் கொள்கிறேன்.

இறுதியில், தான் நனவாகப் பிறக்கவில்லை
தான் கலைவதற்காக தான் பிறந்ததாக
எனக்கந்த கனவு சொல்கிற‌போது
நான் மரணிக்கிறேன்.

கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
இப்போதும் என் கனவு கலையவில்லை.
கனவு காண்கையிலேயே,
எனக்கு தான் நிகழ்ந்துவிட்டது…
மரணம்!

Related Posts...

  • மரண விளையாட்டு
    குருதி தோய்ந்த நகங்களை நாவால் நக்கியபடி, உயிர் குடிக்கும் உக்கிரத்துடன் பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது. சிக்கிவிட்ட இரையென நடுங்குகிறேன் நான். இரக்கமேதுமின்றி மீண்டுமொருமுறை என்னைக் கொன்றுவிட்டு சலனமேயில்லாமல் என்னருகிலேயே படுத்துறங்குக...
  • விட்டுக்கொடுத்தல்
    சிகரெட் முதல் கடல் குளியல் ECR பயணம் பெரிய ராட்டினத்தில் சுற்றுதல் வரை உனது பயங்களுக்கு அடிபணிந்து...
  • செல்லரிக்கும் காதல்
    அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும் உன் பழைய காதல் கடிதமொன்று தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது....
  • பகல் கனவு – குறுந்தொகை – அணிலாடுமுன்றில்
    தீப்பெட்டியென நிலையாய் உன் நினைவு. தீக்குச்சியாய் உரசி உரசி எரியும் மனது....
  • என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?
    கிழிக்க மனமின்றி பத்திரப்படுத்திய உன் கடிதங்களை வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது மனம். * நம் பிரிவுக்குப் பிறகு 128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன் நீ பரிசளித்த ...

29 Responses to “என் கனவு”

  1. G.Ragavan says:

    // அருட்பெருங்கோ said…
    /ஒரு கனவு போயின்
    மறு கனவு
    காண்பதற்கு
    இரவும் உண்டு
    உறக்கமும் உண்டு
    கலையும் கனவுக்கு
    காவு கொடுப்பதா
    ஏற்கோம் ஏற்கோம் /

    ராகவன்,

    ஒரு கனவு போயின்
    மறு கனவு
    காண்பதற்கு
    இரவும் உண்டு
    உறக்கமும் உண்டு தான்…

    ஆனால் கண்கள்???

    கலைகிற கனவின் பின்னே
    அலைகிற கண்கள்…

    கனவு கலைவதை காண்ச் சகியாமல்
    இயக்கம் நிறுத்தும் மூளை…

    கனவைப் போலவே
    கலைந்து போகிற மனசு…

    சவமாகிறது…உடல்! //

    எந்தக் கண்களும்
    கண்டதில்லை கனவை
    கண்டவைகள் கனவல்ல
    எந்தக் கண்களும்
    கண்டதில்லை மனதை
    காணாத கூட்டணிக்குக்
    காணும் கண்களையும்
    வாழும் வாழ்க்கையையும்
    படையல் போட
    மடையலாக வேண்டுமோ!
    கசப்பென்றாலும்
    களிம்பைத் தின்பவன்
    நலம் பெறுவான்
    நஞ்சென்று புரிந்தும்
    கசப்பைத் தின்பவன்?

  2. அருட்பெருங்கோ says:

    //வந்தார் காதல் இளவரசன்..
    அழகிய கவிதையோடு. :-D //

    நன்றி மை ஃப்ரெண்ட்…

  3. அருட்பெருங்கோ says:

    /எந்தக் கண்களும்
    கண்டதில்லை கனவை
    கண்டவைகள் கனவல்ல
    எந்தக் கண்களும்
    கண்டதில்லை மனதை
    காணாத கூட்டணிக்குக்
    காணும் கண்களையும்
    வாழும் வாழ்க்கையையும்
    படையல் போட
    மடையலாக வேண்டுமோ!
    கசப்பென்றாலும்
    களிம்பைத் தின்பவன்
    நலம் பெறுவான்
    நஞ்சென்று புரிந்தும்
    கசப்பைத் தின்பவன்?
    /

    ந‌ன்றி ராக‌வ‌ன்.

    ப‌லியிடப்ப‌ட்ட‌‌தை
    இனியெங்கே ப‌டைய‌ல் போட?

  4. சிறில் அலெக்ஸ் says:

    எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க.

    http://theyn.blogspot.com/2007/06/7-9.html

  5. நளாயினி says:

    வித்தியாசமான கவிதை. ஆனாலும் மனசு பாரமாச்சு.

  6. அருட்பெருங்கோ says:

    / எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க./

    சிறில்

    பதிவு போட்டாச்சு :)

  7. அருட்பெருங்கோ says:

    / வித்தியாசமான கவிதை. ஆனாலும் மனசு பாரமாச்சு./

    நன்றிங்க நளாயினி…
    கொஞ்சம் சோகக்கவிதை முயற்சி பண்ணினேன்…அதான்…

  8. ponnakk says:

    கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
    இப்போதும் என் கனவு கலையவில்லை.
    கனவு காண்கையிலேயே,
    எனக்கு தான் நிகழ்ந்துவிட்டது…
    மரணம்!

    ShareThis

    ennatha solvathu…arut…

  9. சொல்ற மாதிரி ஒன்னுமில்லங்கறீங்களா? :)

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD