பொதுவாக கண்கள் அழகாக உணர்வதை மட்டுமே அழகு என்ற வார்த்தை மூலம் அர்த்தப்படுத்துகிறோமோ என்று எனக்குத் தோன்றுகிறது. இயற்கைக் காட்சிகள், பூக்கள் என்று கண்ணுக்கு அழகான விசயங்கள் இருக்கின்றன. சில விசயங்கள் கண்களைத் தாண்டி அந்த அழகை இதயத்துக்கு தூக்கி செல்வதுமுண்டு, குழந்தையின் சிரிப்பைப் போல. இவற்றையும் தாண்டி இதயம் மட்டுமே உணர்கிற அழகான விசயங்கள் சில உண்டு. வாழ்க்கையை அழகாய் ரசிக்க கண்கள் பார்க்கும் அழகைவிட இதயம் உணரும் அழகு முக்கியமென நினைப்பவன் நான். அவை இதயத்தைப் பொருத்து மாறுபடலாம். என்னைப் பொருத்தவரை இதயம் உணரும் அழகான விசயங்கள் என்று நான் நினைப்பவை இவை.
Read Full Post »சொற்களைத் தந்தாய்.
கவிதை செய்தேன்.
யாரோ வாசிக்கிறார்!
மொட்டுக்களைத் தந்தாய்.
மலரச் செய்தேன்.
யாரோ சூடிக் கொள்கிறார்!
1. “அருட்பெருங்கோ நல்ல தமிழ்ப் பெயர், ஆனா வாய்லதான் நுழைய மாட்டேங்குது” - என்னோடப் பெயரைக் கேட்டதும் பெரும்பாலானவர்கள் சொல்றது இதுவாத்தான் இருக்கும். அதக் கொஞ்சம் தெளிவாக்க இதை ஒரு வாய்ப்பா எடுத்துக்கறேன். என்னோட இயற்பெயர் சிவசாம்ராஜ். தமிழ் மேல இருந்த பாசத்துல சாம்ராஜ், பெருங்கோ ஆகிட்டான் (சாம்ராஜ் - பேரரசன் - பெருங்கோ). எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, அதையும் மாத்தலாம்னு யோசிச்சப்போதான் அன்பே சிவம்னு கமல் சத்தம் போட்டார். சரி அன்பு னு மாத்தலாம்னு யோசிக்கும்போதுதான் என்னோட சிற்றறிவுக்கு, கொஞ்ச நாள் முன்னாடி நான் எங்கேயோ படிச்ச ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது. குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் இந்த மாதிரி நமக்குப் பழக்கமானவங்க மேல காட்டறதுக்கு பேர்தான் அன்பு, ஆனா முன்னப்பின்ன பழக்கமில்லாத எல்லார் மேலேயும் காட்டற அன்புக்கு அருள்னு பேர் அப்படினு எங்கேயோ படிச்சிருக்கேன். இப்படிதான் சிவம் அன்பாகி , அன்பு அருளாகி, இறுதியா சிவசாம்ராஜ்- அருள்+பெருங்கோ - அருட்பெருங்கோ ஆகிட்டேன். (அருட்பெருங்கோனு சும்மா பேருக்குதான் வச்சிருக்கேன், இன்னும் கெசட்ல எல்லாம் மாத்தல)
Read Full Post »அது ஓர் அழகிய நிலாக்காலம்.
கவலை வெயில் சுடாத இனிய இரவைப்போன்றது.
இரவின் மடியில் இனிய உறக்கத்தில் நான்.
என்னைத் தேடி மெல்ல வருகிறது ஒரு கனவு.
Recent Comments