பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.
“சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?” – அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா?
யாருக்கும் கேட்டுவிடாமல்
சத்தமின்றிதான் முத்தமிடுகிறாய்.
இருந்தும் சங்கடத்தில் நெளிகின்றன…
செல்பேசிகள் இரண்டும்!
“எப்போதென்னைக்
காதலிக்க ஆரம்பித்தாய்?”
எத்தனை முறை
கேட்டாலும் உதட்டுப் பிதுக்கலே பதிலாய்…
ம்ம்ம்…எப்போது மலர்ந்தோமென
எந்த மலருக்குதான் தெரிகிறது?
கோபம்…
சூரியனுக்கு வந்தால்
அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!
என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!
Related Posts...
- காதல் கவிதை
காதல் கவிதை - இரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய். இயலாத செயலென இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
... - காதல் கவிதைகள்
காதல் கவிதைகள் - நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!... - களவாடிய கவிதைகள்
மொட்டுக்கள் பூக்கட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.
உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி
மீண்டும் மொட்டுக்களாவது உனக்கு தெரியுமா?
o0o
கடலுக்கும் கரைக்குமான எல்லையை
வரைய முடியாமல் தத்தளிக்கிறது அலை...
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்... - முத்தம்
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?... - கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!...
//”சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?” – அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா? //
நல்ல வரிகள்… ரசிக்கும் படி இருக்கு கவிதை…//
நன்றி கவி ரூபன்…
வாப்பா பிரேம்,
/ வாங்க காதல் முரசு,
நீண்ட இடைவேளைக்கு பின்பு கவிதை(கள்) மழை பொழிந்திருக்கிறது./
ம்ம்ம் நக்கல் தான வேணாங்கறது…
/என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!
அழகான கற்பனை
/
அட கற்பனை இல்லப்பா நெசமாத்தான்
/பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.
(அப்பாடல்க(ள்)ளில் மயங்கி தவிக்கிறோம் நாங்கள்)/
அது சரி… எந்த அர்த்தத்துல சொல்லிருக்கீங்களோ தெரியல
வாழ்த்துக்கள்… இன்னும் நிறைய எதிர் நோக்கி காத்துக்கிடக்கிறோம்/
நன்றி நன்றி நானும் எழுதனும்னுதான் பாக்கறேன் கம்பெனியில விட மாட்டேங்கறாங்களே…
/ //
“சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?” – அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா? //
ம்ம்ம், காலங்காலமா இப்படித்தானே திரைப்படத்தில் கதா நாயகனும் நாயகியும் டூயட் பாடுறாங்க/
அங்க எப்பவுமே ஒரு இதயம் ஒரு கனவு தான்… நான் சொன்னது ரெண்டு இதயம் சேர்ந்து ஒரு கனவு
@ சேரன்,
/ //என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது//
அசத்தல்!!!
~சேரன்/
நன்றீ
@ சூர்யா,
/ “சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?” – அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா?”
காதலின் பொருத்தத்தை அழகாக சொல்லியிருக்கீங்க/
காதலப் பத்தி என்ன சொன்னாலும் அழகுதானே?
/”அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!”
அபாரமான கற்பனை./
/”என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!”
அருமை/
மீண்டும் நன்றி!!!
@ அனானி,
/ yellame romba azhaga irruku…../
உங்களுக்கும் நன்றிங்க!!!
@ அன்வர்,
/ஐயா சீக்கிரமாக arutperungo.com-ஐ திரந்து விடுங்க
கேட்டா நேரம் போகாம எழுதுறேன்னு சொல்லூவீங்க
வெருமென நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு போக முடியல
எல்லாதையும் ஒரு கோப்பா எடுத்து வச்சிருக்கேன்
இது இந்த ஒரு வாரதுக்கு போதும். சீக்கிரம் அடுத்த பதிவை எதிர்பர்க்கும்
தங்களது சகோதரன்
மதுரையில் இருந்து மீறான் அன்வர்/
சரிங்கண்ணா… சீக்கிரமே பண்ணிடறேன்…
தொடர்ந்த வாசிப்புக்கு நன்றிகள்!!!
@ உமா,
/ HAI…..I’M UMA…I’M NEW TO THIS SITE…..BUT ITS SIMPLY SUPERB…I LOVE EVERY LINE….PLZ CONTINUE TO GIVE MORE “KAVETHAI” LIKE THIS……./
ரொம்ப நன்றிங்க… கண்டிப்பா தொடர்ந்து எழுதறேன்!!!
@ பழனி,
//என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!//
அருமையான வரிகள் …. வாழ்த்துக்கள் …
./பழனி //
நன்றி பழனி… தொடர்ந்து வாசிங்க!!!
kalakkurey arul !!!eppatithan ippadi ellam yosippinkalow! superma keep it.
nalla kavithigal, nan nirambavum thamadhamaga padikiren, niraiya eathir parthen, pathiyele mudintha salai pola mudinthuvitanave……..
anaithu kavithaigalume arumai……………………
Superb… sorry dont know how to type in tamil..
like your kavithaigal…
cellphone kavithai really smart
சூப்பரா இருக்கு. அழகான வரிகல். உங்கல் கவிதைகல் அனைத்தும் அருமை.
SUPER
MY WIFE: “எப்போதென்னைக்
காதலிக்க ஆரம்பித்தாய்?”
எத்தனை முறை
கேட்டாலும் உதட்டுப் பிதுக்கலே பதிலாய்…
ம்ம்ம்…எப்போது மலர்ந்தோமென
எந்த மலருக்குதான் தெரிகிறது?