நீருக்கு நிறமில்லையென்பதெல்லாம் பூக்களைப் பார்க்காதவர்கள் சொல்லி வைத்தப் பொய்கள். ரோஜாவுக்கு ஊற்றிய நீர் சிவப்பாய்… மல்லிகைக்கு ஊற்றிய நீர் வெள்ளையாய்… நீரும் பூக்குமடி! பூக்களெல்லாம் பெண்களாம். வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது? பெண் வண்டு உட்காரும் பூ ஆண் பூவாய் இருக்கலாமே! பறிக்கப் போகிறாய் என்று தெரிந்தாலும் எப்படி சிரிக்க முடிகிறது இந்தப் பூக்களால்? பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி? வாடாமலே இருந்து விட்டால் பூவுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமில்லை! இதழ் திறந்தால் இரண்டிலும் தேன் தான்! நீயிருக்கும்போது என்ன வரம் பெற்று காதலின் சின்னமானதோ ரோஜா! ஒருவேளை முட்கள் அதிகம் இருக்கிற சாபத்தாலா? எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?
 

 
 
நீ களைந்து எறிந்த ஆடையாய்க் கலைந்து கிடக்கிறது மேகக் கூட்டம்.
உற்றுப் பார்த்தால் அதில் ஒரு மானோ, ஒரு மயிலோ, அல்லது ஓர் இதயமோ தெரியலாம்.
பார்த்துக் கொண்டே இருக்கும்போது ஒரு மலரின் வடிவம், பெண் முகமாய் மாறலாம், ஏன் உன் முகமாய்க் கூட மாறலாம்.
வேகமாய் செல்லும் மேகம் சூரியனை நெருங்க நெருங்க மேகத்தின் நிழல் உன்மேல் படரும். மேகத்துக்கு நன்றி.
சூரியனைக் கொஞ்சி விட்டு மேகம் விலக விலக நிழல் விலகி மறுபடி வெயில் வரும். பதறிப் போவேன் நான்.
மேகம் கொஞ்சி விட்டுப் போன சூரியன் முகத்தில் புதிதாய் இருக்கும் ஓர் ஒளி.
இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்ளை. மழையில் கருப்பு. மாலையில் அது நடத்தும் வர்ண ஜாலம்.
எல்லாம் இருந்தும் கடைசியில் கலைந்தோ, கரைந்தோ போகிறது! காதலைப் போல…
எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?

 

 

மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக்கத் தெரியாது.
மழையே வராமல் கிடக்கும் நிலத்தின் வெடிப்பு.
மாலை நேரத்து மெல்லிய சாரல். வெயிலோடு சேர்ந்து பொழியும் மழை.
உலகத்தையே சுத்தப்படுத்தும் உன்னத மழை. மழை நின்றும் விடாத தூவானம். மழை முடிந்து வீசும் மண் வாசம்.
காற்று, புயல், சூறாவளியில் சிக்கினாலும் விடாது பொழியும் மழை. பெருமழையில் அடித்து செல்லப்பட்ட வீடு.
மழையின் இத்தனைப் பரிமாணங்களும் காதலிலும் உண்டு.
மழையில் நனைந்து விட்டு வெயிலில் குளிர் காயலாம். காதலில் நனைந்து விட்டுக் காமத்தில் குளிர் காயலாம்.
மழையிலும் சரி, காதலிலும் சரி நனையும் வரை நஷ்டமில்லை. நனையாவிட்டால் ஒரு லாபமுமில்லை.
எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?
 

 


மழையில் நனைந்ததும்,
மேகத்தைத் துவட்டிக்
கொள்கிறாய்!

 

வாசனையுமுண்டு
வாடுவதுமில்லை
நீ பூத்தப் பூவா? ப்ளாஸ்டிக் பூவா?

 

மழையில் குடை…
குடைக்குள் நாம்…
நமக்குள் மழை!

 

Related Posts...

  • பேரலையும் மாமழையும்
    மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய். மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில் கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்....
  • கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
    உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே இனிப்பாய் இருக்கிறது. நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய் நினைத்துக்கொள்வது!...
  • காதல் (திங்)கள் (குரல் பதிவு)
    நீ நினைக்கிறேன். நான் பேசுகிறாய். நமக்குள் காதல் வராமல் என்ன செய்யும்? * பூக்களற்ற தீவுகளுக்கு மணம்வீசப் பயணிக்கிறது. உன் கூந்தலிலிருந்து பிரிந்த இழையொன்று....
  • அன்பே காதல் இமை மழை குடை
    இந்த பதிவெழுதத் தூண்டிய அய்யனாருக்கு நன்றி :-)...
  • இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
    கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான். காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள். காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்....

61 Responses to “அன்புள்ள காதலிக்கு”

  1. Rajasekaran says:

    நல்லா இருந்தது, இவ்வலவு நாலக்கி அப்புரம் எனக்கு காதலிக்க ஆசை வந்தது,யாராவது தயாரா,திருமனம் செய்ய தயார்.

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD