அந்த ஆண்டு மழைக்காலத்தின் ஒரு மாலைவேளையில்,
மலைப் பாதையொன்றில் நான் போய்க் கொண்டிருக்கிறேன்.விழிகளை மூடி மழையை செவிக்குள் சேமித்தவாறு செல்கிறேன்.
மழையையும் மீறி மனசைத் தொடுகிறது ஒரு மழலைக் குரல்.
பிஞ்சுக் கை ஒன்று மெல்ல என் பாதம் தொடுகிறது.
குனிந்து பார்த்தால் காலடியில் அழகானதொரு குழந்தை.
தூக்கலாமா என நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே,
என் கால்களைப் பற்றி என்னை நோக்கிக் கை நீட்டுகிறது.
மூளை யோசிப்பதற்கு முன்னே மனதைத் தூண்டி,
வசீகரிப்பதில் குழந்தைக்கு நிகர் குழந்தைதான்!
குழந்தைக்கு என்னைப் பிடித்துப் போனதோ…
எனக்குக் குழந்தையைப் பிடித்ததோத் தெரியவில்லை.
ஆனால் அன்று முதல் நாங்கள் ஒன்றாகவேத் திரிகிறோம்.
மொழியுமில்லாத மௌனமுமில்லாத அதன் மழலைக் குரல் எதேதோ சொல்கிறது!
அதன் குறும்பும் சிரிப்பும் தவிப்பும் என்னைக் கொல்லாமல் கொல்கிறது!
என் கவிதைகளைத் தின்று நன்றாய் வளர்கிறது குழந்தை!
வளர வளர அதன் சுமை என்னை முழுதாய் அழுத்துகிறது!
அன்றென் பாதையில் குழந்தையைத் தவழ விட்டுப் போனவள் யாரோ?
குழந்தையைக் கொஞ்சியபடி அவளைத் தேடியலைகிறேன் நான்…
நம்
முதல் குழந்தைக்கு
என்னப் பெயர்
சூட்டலாமெனக் கேட்கிறாய்!
அடிப்பாவி!
நமக்கு(ள்) முதலில் பிறந்தது
காதல் குழந்தைதானே?
( சொல்ல மறந்து விட்டேனே!
உருவமில்லாத அந்தக் குழந்தைக்கு நான் வைத்த பெயர் – காதல்! )
Related Posts...
- இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான்.
காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள்.
காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்.... - போடா கருவாயா
அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம்.
சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள்.
கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள்.
அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது ... - களவாடிய கவிதைகள்
மொட்டுக்கள் பூக்கட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.
உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி
மீண்டும் மொட்டுக்களாவது உனக்கு தெரியுமா?
o0o
கடலுக்கும் கரைக்குமான எல்லையை
வரைய முடியாமல் தத்தளிக்கிறது அலை...
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்... - அவளால் சுமாரான கவிதைகள்
எல்லோருக்கும்
முகம் காட்டும் கண்ணாடி
உனக்கு மட்டும்
நிலவு காட்டுவதெப்படி?... - பேரலையும் மாமழையும்
மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய்.
மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில்
கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்....
சூப்பரப்பு… நெஜந்தான், முதல்ல காதல் தான் ‘பிறக்கிறது’. நல்ல சிந்தனை.
`Guru
`
நன்றி குரு…
முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்…