நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…

நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !

அதிகாலை வேளையில்
உனக்காகத் தான்
நடக்க ஆர்ம்பித்தேன்

சில நேரம் தென்றலாய்த்
தேகம் தீண்டுகிறாய்

சில நேரம் புயலாய்ப்
புரட்டிப் போடுகிறாய்

வாரி விட்டத் தலைமுடியை
நீ கலைத்து மகிழ்வதையும்

வண்டியில் போகும்போது
நீ உரசி மோதுவதையும்

விரும்பி இரசிக்கிறேன்

உலகின் எந்த மூலைக்குப் போனாலும்
உன் முகம் தான்
உன் ஸ்பரிசம் தான்

நாட்கணக்காய் உண்ண மறந்தாலும்
நொடிப்பொழுதும் உனை மறந்தேனா?

உன்னையே உயிர் மூச்சாகக் கொண்டேன்

சாகும் வரையும் உன்னையே சுவாசித்திருப்பேன்

காற்றே!

ஈராயிரம் ஆண்டுகள்
அவிழ்க்க முடியவில்லை

மூன்று முடிச்சு!

அந்த மூன்று முடிச்சுக்கள் என் குரல்வளையை நெரிக்கும்
எனத் தெரிந்தும் சம்மதிக்கிறேன் – தாலி கட்டிக் கொள்ள…

வீட்டுச்சிறையின் கைதிக்கான கைவிலங்குதான் அது
எனத் தெரிந்தும் சம்மதிக்கிறேன் – வளையல் போட்டுக் கொள்ள…

பின் தூங்கி முன் எழ வேண்டுமா ? எழுகிறேன்…
கணவனை கடவுளாகத் தொழ வேண்டுமா ? தொழுகிறேன்…

எல்லாப் பெண்களைப் போலவும்
அடிமையாக வாழ சம்மதிக்கிறேன்…

யாரேனும் ஏற்றுக்கொண்டால்…

நன்றியுடன்,
ஒரு விதவை.



ஈழ விடுதலைக்கு
உயிர்களை உரமாக்கிய
மாவீரர்கள் அனைவருக்கும்
அஞ்சலி!

படங்கள் : நன்றி – கூகிள்

© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD