|
Feb
18
|
பால்யத்தின் காற்றுக் காலமொன்றில்
பட்டம் விட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதில்
ஆசையுடன் விளையாட அதுவும் வந்திருக்கிறது.
விபத்தில் அடிப்பட்ட கல்லூரி நண்பனை
மருத்துவமனை தூக்கிச்சென்ற பதற்றமான இரவில்
என்னுடன் சேர்ந்து அழுதிருக்கிறது.
அலுவலகத்துக்கு இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த
ஒரு திங்கட்கிழமையின் பரபரப்பான காலையில்
என்வேகத்தில் என்னருகிலேயே பயணித்திருக்கிறது.
நெருங்கிய உறவின் மரணமொன்றில்
சுடுகாட்டிலிருந்து திரும்பும்வழியிலேயே
எங்களைக் குளிக்க வைத்திருக்கிறது.
அப்பொழுதெல்லாம் சபித்துவிட்டு
வீட்டின் அறைக்குள்
நாற்காலியில் சாய்ந்துகொண்டு,
சூடான தேநீரைப் பருகியபடி
ஜன்னல் வழியே வெட்கமின்றி ரசித்திருக்கிறேன்
அதன் பொழிவை!
February 18th, 2008 at 10:10 pm
arumai arumai…
kaadhal ulagatha vittu konjam veliya vandhu irukeenga pola…
vaazhthukkal
February 18th, 2008 at 10:32 pm
dear arul,
unga kavithai etha week vegadan la vanthuruku ,valthukal, kalkunga,
ram
February 18th, 2008 at 11:46 pm
வெயில்தானா?
நான் என்னமோ நினைச்சேன்.
சகாதேவன்.
February 19th, 2008 at 12:18 am
மழைதானே அருட்பெருங்கோ?
February 19th, 2008 at 1:42 am
ரொம்ப நல்லாருக்கு, உங்க மழை..
February 19th, 2008 at 2:30 am
உங்கள் கவிதை “மழை” எங்களை குளிரச்செய்தது.
ஆனந்த விகடனில் உங்கள் கவிதையை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
வாழ்த்துக்கள்….
இது இன்னும் தொடரட்டும்….
கருணா..
February 19th, 2008 at 3:05 am
எனக்குப் பிடிச்சிருக்கு இந்தக் கவிதை.
February 19th, 2008 at 4:26 am
நல்லாயிருக்கு ராசா
)
வாழ்த்துக்கள்
)
February 19th, 2008 at 5:19 am
குளிக்கவைத்த அப்படிங்கற வரை என்னது அதுன்னு ஒரு கேள் வி இருந்தது.. அப்பறம் தான் மழைன்னு தெரிந்தது.. நல்லாருக்கு..
)
February 19th, 2008 at 5:21 am
@அனானி,
வாழ்த்துகளுக்கு நன்றிங்க அனானி!
@ராம்,
நன்றி ராம்!
February 19th, 2008 at 5:28 am
ஐயோ மழை!!!
மிகச் சந்தோஷமாக நனைந்தேன் உங்க மழையில்!!
அருமை!
அன்புடன் அருணா
February 19th, 2008 at 5:35 am
@கயல்விழி முத்துலெட்சுமி,
நன்றிங்க்கா. வழக்கம்போல போரடிக்காம நல்லாருக்குனு சொல்ற மாதிரி எழுதிருக்கேன் போல
@அருணா,
நன்றிங்க அருணா மழை வாசிச்சதுக்கும் வாழ்த்துக்கும்!!!
February 19th, 2008 at 5:58 am
mazhaiya pathiya azhagaana kavidhai. kalakunga
February 19th, 2008 at 6:15 am
நல்லாயிருக்குய்யா….
February 19th, 2008 at 6:27 am
@ட்ரீம்ஸ்,
நன்றிங்க ட்ரீம்ஸ்.
@இராம்,
நன்றி தல!!!
February 19th, 2008 at 11:40 pm
தல, பின்னிடீங்க போங்க…………
நன்றிகளுடன்
ஈசுவரன். மணி
February 25th, 2008 at 7:58 am
கருத்துக்கு நன்றிங்க மணி!!!
February 25th, 2008 at 8:09 am
Nandraga irunthathu tholare,
um veetin jannalil ,,
thangal partha malaiai,
en veettu kanippori jannalil..
indru naan parkail…
ennavendru solvathu..
mana magilchi adainthen,,
illatha KADAVUL
ungalul Irukkirar,
February 25th, 2008 at 8:13 am
/Nandraga irunthathu tholare,
um veetin jannalil ,,
thangal partha malaiai,
en veettu kanippori jannalil..
indru naan parkail…
ennavendru solvathu..
mana magilchi adainthen,,/
எனக்கும் மகிழ்ச்சி நண்பரே! நன்றிகள்.
/illatha KADAVUL
ungalul Irukkirar,/
அது சரிங்க. ஏன் எல்லாரும் பெயர் சொல்லாமலே வந்து கருத்து சொல்றீங்க.
April 24th, 2008 at 1:05 pm
மிகவும் அருமை..
அருட்பெருங்கோ நீ
கவிப்பெருங்கோ
இவண்
பூபதி
April 24th, 2008 at 1:06 pm
வெட்கமின்றி ரசித்திருக்கிறேன் உன் கவிகளை…
April 29th, 2008 at 2:08 pm
நன்றிங்க பூபதி.
வெட்கமின்றி ரசிச்சீங்களா? ரசிக்கிறதுக்கும் வெட்கத்துக்கும் என்ன சம்பந்தம்?
March 28th, 2009 at 6:44 pm
Hi ArutPerunGo…
Just today happened to see ur blog… Really had heart-filled-joy while seeing ur poems.. Especially that “Jannal Valiye….”
Kavithaihalai rasikkum ullangalai orunge kandathil mikka mahizhchi adainthaen….
En mahichiyayum inge pahirnthu kolhiraen…
Ungal kavi pani thodara en manamaarntha vaazhthukkal….
- Mahe
June 3rd, 2009 at 4:18 pm
it s a new though about MAZHAI….. nice