ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக ஐ.டி துறையினர் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!
Nov 17

முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

*

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

*

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

*

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

*

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…

*

ஒரு முக்கிய வேண்டுகோள் : சென்னையிலுள்ள ஐ.டி துறை நண்பர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு டைடல் பார்க் எதிரே நடக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான டி.சர்ட் பிரச்சார நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மணி நேர நிகழ்வுக்கு அனைவராலும் வர முடியுமென்றும் நம்புகிறேன். உணர்வுள்ள நண்பர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருக்கும் கண்டன நிகழ்விலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மடலிடுங்கள் : arutperungo@gmail.com

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

17 Responses to “மழைக்கால காதல்”

  1. Saravana Kumar MSK Says:

    Me the first?

  2. Saravana Kumar MSK Says:

    எல்லா கவிதைகளும் அருமை.. :)

  3. Saravana Kumar MSK Says:

    //நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//

    இது மிக அழகு.. :)

  4. ஸ்ரீமதி Says:

    //நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//

    அழகான கற்பனை :)

  5. ஸ்ரீமதி Says:

    //மழை வரும் நேரம்
    தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
    குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
    மல்லிகைச் செடி நீ!//

    :)

  6. ஸ்ரீ Says:

    //மழை வரும் நேரம்
    தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
    குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
    மல்லிகைச் செடி நீ!//

    அடடடடடடடாஆஆஆஆஆ. சூப்பர்.

  7. Kathir Says:

    //பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
    மரக்கிளை மழை போல
    இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
    உனது தூக்க முத்தங்கள்!//

    அழகான கவிதை

  8. Devi Says:

    //மழை வரும் நேரம்
    தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
    குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
    மல்லிகைச் செடி நீ!//

    Arumai ….

  9. பிரேம்குமார் Says:

    //நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது//

    எல்லோருக்கும் பிடிச்ச கவிதை தான் எனக்கும் பிடிச்சது :)

    காதல் முரசு கோ is Back :)

  10. Z Says:

    semaiya irukkuthu ellaa kavithaiyum… muthal kavithaithaan naan romba rasiththa ondru…

  11. புனிதா Says:

    //முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
    மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
    மழை பொழியும் பொழுதெல்லாம்
    மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

    நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//

    கவிதை அழகு..மழையைப் போல :-)

  12. எழில்பாரதி Says:

    வாங்க வாங்க!!!

    சென்னை வந்து முதல் பதிவு அதுவும் காதல் மழையாய் பொழியுது என்ன் விசயம் கோ!!!!

    கவிதகள் எல்லாம் மழைத்துளியாய் நனைத்து விட்டு செல்கிறது அனைத்தும் அருமை!!!!

    தொடருங்கள் வாழ்த்துகள் கோ!!!

  13. Aarthy Says:

    arumaiyana kavithagal… romba nalla irukku !!

  14. Pradeep Rajkumar Says:

    கவிதைகள் மிக அருமை…
    வாழ்த்துக்கள்….

    Pradeep

  15. gayathri Says:

    நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது

    kavithai varikal arumai

  16. Kirubakaran Says:

    பெருமழையென…
    அழகான கனவு…well done

  17. முத்துலெட்சுமி Says:

    எல்லாமே வழக்கம்போல அருமை.. முதல் கவிதை ரொம்பவே பிடிச்சது..

Leave a Reply