|
Jul
30
|
ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!
*
ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் ‘யாரும் மூச்சு விடக்கூடாது’, ‘யாரும் மூச்சு விடக்கூடாது’ ன்னே சொல்றாங்கம்மா..
அக்கா : யாரும் பேசக்கூடாதுங்கறத தான் அப்படி சொல்றாங்க. மிஸ் சொல்றாங்கன்னு நீ மூச்சு விடாம இருந்துடாத பாப்பா!
*
அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.
இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் அப்பா முழிக்க, அடுத்து அவள் சொன்னது…’நான் எப்பவும் உண்மையேதான் தாத்தா பேசுவேன். பொய்யெல்லாம் பேச மாட்டேன்’
*
அக்கா : கையெழுத்தெல்லாம் முத்து முத்தா இருக்கனும் பாப்பா.
ஜனனி : ஹைதராபாத்ல இருந்து மாமா வாங்கிட்டு வந்த முத்தாம்மா?
அக்கா : ஜனனீஈஈஈஈ, அழகா குண்டு குண்டா எழுதுன்னு சொல்றேன்.
(நல்ல வேளை பெங்களூர்ல வெடிச்ச குண்டான்னு கேட்கல)
*
அம்மா : சரி ஜனனி நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்.
ஜனனி : சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.
*
ஜனனி : மாமா, நான் சின்ன பாப்பாவா, பெரிய பாப்பாவா?
நான் : நீ சின்ன பாப்பா தான்.
ஜனனி : நான் சென்னைக்குப் போனா?
நான் : சென்னைக்குப் போனா, மித்ரா சின்ன பாப்பா. நீ பெரிய பாப்பா.
ஜனனி : சேலத்துக்குப் போனா?
நான் : சேலத்துக்குப் போனா, அம்சா பெரிய பாப்பா. நீ சின்ன பாப்பா.
ஜனனி : என்ன மாமா. மாத்தி மாத்தி சொல்ற? எதாவது ஒன்னு சொல்லு மாமா!
(வர வர ஜனனி கூட என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்)
*
நான் : ஜனனி, ஊருக்கு வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?
ஜனனி : பச்சக் கலர் கேரட் வாங்கிட்டு வா மாமா.
(இனிமேல் அவளிடம் எதுவும் கேட்க் கூடாதென்று முடிவு செய்திருக்கிறேன்)
July 30th, 2008 at 10:15 am
Cute!
July 30th, 2008 at 10:21 am
\\தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.
\\
கலக்கல் பதில்..ரொம்ப சுட்டி போல
\\(வர வர ஜனனி கூட என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்)
\\
ஹா ஹா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை
)
July 30th, 2008 at 10:28 am
//பச்சக் கலர் கேரட் வாங்கிட்டு வா மாமா.//
குழந்தைக் கேட்கறால்ல அண்ணா, மறக்காம வாங்கிட்டுப் போய் குடுங்க..!!
July 30th, 2008 at 10:34 am
வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் உண்டுல்ல..மாமா காதல் எந்திரம் எழுதி எல்லாரையும் சுத்திவிட்டா மருமக கேள்வி யால சுத்தவிடறா.. ஹஹ்ஹா
July 30th, 2008 at 11:17 am
I tagged you here.. Plz accept my invitation http://mayuonline.com/eblog/a-for-apple/
தமிழில் எழுதினால் இரட்டை சந்தோஷம்
July 30th, 2008 at 11:18 am
/Cute!/
வருகைக்கு நன்றிங்க பத்ரி!
July 30th, 2008 at 11:20 am
//அக்கா : கையெழுத்தெல்லாம் முத்து முத்தா இருக்கனும் பாப்பா.
ஜனனி : ஹைதராபாத்ல இருந்து மாமா வாங்கிட்டு வந்த முத்தாம்மா?
அக்கா : ஜனனீஈஈஈஈ, அழகா குண்டு குண்டா எழுதுன்னு சொல்றேன்.
(நல்ல வேளை பெங்களூர்ல வெடிச்ச குண்டான்னு கேட்கல)//
ஹஹ்ஹாஹஹ்ஹா..
ஒரு வேளை நீங்க பெங்களூரில் வேலை பார்த்திருந்தால் கண்டிப்பாக கேட்டிருப்பாங்க…
July 30th, 2008 at 12:11 pm
marakkama பச்சக் கலர் கேரட் vangittu ponga!!!!! marantudaeenga
July 30th, 2008 at 1:34 pm
/கலக்கல் பதில்..ரொம்ப சுட்டி போல /
ரொம்பவே!
/ஹா ஹா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை
)/
ஹ்ம்ம்ம்
July 30th, 2008 at 1:37 pm
/குழந்தைக் கேட்கறால்ல அண்ணா, மறக்காம வாங்கிட்டுப் போய் குடுங்க..!! /
சரிங்கக்கா… வாங்கிக் கொடுத்துட்றேன்
July 30th, 2008 at 1:40 pm
/வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் உண்டுல்ல..மாமா காதல் எந்திரம் எழுதி எல்லாரையும் சுத்திவிட்டா மருமக கேள்வி யால சுத்தவிடறா.. ஹஹ்ஹா/
ம்ம்ம் அவ வளர வளர கொஞ்சம் பயமாதான் இருக்கு
July 30th, 2008 at 1:45 pm
/I tagged you here.. Plz accept my invitation http://mayuonline.com/eblog/a-for-apple/
தமிழில் எழுதினால் இரட்டை சந்தோஷம்/
நன்றி மயூரேசன்! நாளைக்கு எழுதிட்றேன்! நீங்க சொல்லலனாலும் தமிழ்ல தான் எழுதியிருப்பேன்
July 30th, 2008 at 1:46 pm
/ஒரு வேளை நீங்க பெங்களூரில் வேலை பார்த்திருந்தால் கண்டிப்பாக கேட்டிருப்பாங்க/
அதுவும் சரிதான்
July 30th, 2008 at 1:48 pm
/marakkama பச்சக் கலர் கேரட் vangittu ponga!!!!! marantudaeenga/
நாட்ல எத்தன ஜனனி இருக்கீங்க?
July 30th, 2008 at 2:20 pm
நன்றி!!! அருட்பெருங்கோ!
July 30th, 2008 at 2:20 pm
janani rocks!
July 30th, 2008 at 3:01 pm
நன்றி!!! அருட்பெருங்கோ!
நன்றிக்கு நன்றியா?
/janani rocks!/
அவ எப்பவும் கலக்குறா… தூரத்துல இருக்கிறதால நமக்குதான் எல்லா விசயமும் தெரியறதில்ல!
July 30th, 2008 at 8:17 pm
//அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.
இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் அப்பா முழிக்க, அடுத்து அவள் சொன்னது…’நான் எப்பவும் உண்மையேதான் தாத்தா பேசுவேன். பொய்யெல்லாம் பேச மாட்டேன்’//
இதுதான்பா CUTENESS….
July 30th, 2008 at 8:18 pm
ஜனனி… நீ கலக்கு மா..
July 30th, 2008 at 8:24 pm
July 30th, 2008 at 9:41 pm
July 31st, 2008 at 3:54 pm
/இதுதான்பா CUTENESS
ஜனனி நீ கலக்கு மா../
ஜனனி சார்பா நன்றிங்க சரவணக்குமார்!
July 31st, 2008 at 3:54 pm
வருகைக்கு நன்றிங்க ரவி!
July 31st, 2008 at 3:56 pm
/:))) Ippa ivingalum nammala round katta aarambichittaangalaa… avvvvv/
தொலைபேசியிலயே இவ்வளவும். நேர்ல போனா இன்னும் கிடைக்கும்
July 31st, 2008 at 5:54 pm
மிகவும் இரசித்தேன்!
August 1st, 2008 at 9:48 am
ஜனனி கண்ணு…. எப்படிம்மா இப்படியெல்லாம்?
//சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.//
பாசக்கார புள்ள
August 1st, 2008 at 1:45 pm
/மிகவும் இரசித்தேன்!/
நன்றிங்க முருகானந்தம்!
/ஜனனி கண்ணு. எப்படிம்மா இப்படியெல்லாம்? /
தல, ஜனனி, அவங்க மாமா மாதிரியே அறிவாளி
/பாசக்கார புள்ள/
August 11th, 2008 at 12:58 pm
/*அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது. */
Mama mathiriyae eppavae kadhai ezhudaraa pola Janani
August 24th, 2008 at 12:06 pm
Saw her reciting thirukkal..ungala madhiriyae vara training-a?
August 25th, 2008 at 5:59 pm
THIS SITE IS VERY NICE
September 8th, 2008 at 5:06 pm
//அம்மா : சரி ஜனனி நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்.
ஜனனி : சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.//
romba sweet
October 4th, 2008 at 4:39 pm
/Mama mathiriyae eppavae kadhai ezhudaraa pola Janani/
ம்ம்ம் என்ன விட அவ நல்லாவே கதை சொல்லுவா
/Saw her reciting thirukkal..ungala madhiriyae vara training-a?/
என்ன மாதிரியா? இல்ல நல்ல மாதிரி வரனும்
/THIS SITE IS VERY NICE/
நன்றிங்க பாண்டி!
/romba sweet /
இன்னொரு ஜனனியா?
நன்றி
November 6th, 2008 at 4:18 pm
பச்ச கலர் கேரட்டா????!!!!!
பாப்பா ஒரே ஜாலிப் பாப்பாவாகீதே!!!!!!
//
ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!
*
ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் ‘யாரும் மூச்சு விடக்கூடாது’, ‘யாரும் மூச்சு விடக்கூடாது’ ன்னே சொல்றாங்கம்மா..
அக்கா : யாரும் பேசக்கூடாதுங்கறத தான் அப்படி சொல்றாங்க. மிஸ் சொல்றாங்கன்னு நீ மூச்சு விடாம இருந்துடாத பாப்பா!
*
அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.
//
பாப்பா ரொம்ப புத்திசாலி
October 16th, 2009 at 9:09 pm
JANANI is Great,