Feb 19
கண் நடிக்கிறது.
ஆனால் காதல்
கண்ணடிக்கிறது.
~
உன் மார்பில்
தாவணி.
என் மார்பில்
தாவ நீ.
~
இயல்பாய் சிரித்தாய்.
என் முத்தம் உறங்க
இதழ் பாய் விரித்தாய்.
~
உன்னைப்பார்த்து
‘ஓ’ வென வியக்கிறது
ஓவியம்.
~
உன் கண் பார்த்து
ஆடிப்போனது
கண்ணாடி.
~
என்னில் விழுந்தாய்.
எனக்கே விழுதாய்.
~
முத்தம் இடு.
பின்
முத்தம் எடு.
~
நீ கவிதை.
தலைப்பு?
தலை பூ!
~
காதல்
உனக்கு வலி.
எனக்கு வலிமை.
~
காதல்
என்னில் ஊஞ்சலாடுகிறது.
உன்னில் ஊசலாடுகிறது.
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
February 19th, 2007 at 11:20 pm
மறுபடி ஆரம்பம் ஆகிவிட்டது காதல் விளையாட்டு.
//இயல்பாய் சிரித்தாய்.
என் முத்தம் உறங்க
இதழ்பாய் விரித்தாய்
கண் நடிக்கிறது
ஆனால் காதல்
கண்ணடிக்கிறது//
அருமை அருமை….
February 20th, 2007 at 4:05 am
ஆஹா..அருமை கவிஞரே…அருமை…
எல்லா நொடிகளும் ரொம்ப நல்லயிருக்கு…
February 20th, 2007 at 5:53 am
வாங்க பிரேம்,
/ மறுபடி ஆரம்பம் ஆகிவிட்டது காதல் விளையாட்டு./
ஹி ஹி சும்மா விளையாட்டுக்கு…
//இயல்பாய் சிரித்தாய்.
என் முத்தம் உறங்க
இதழ்பாய் விரித்தாய்
கண் நடிக்கிறது
ஆனால் காதல்
கண்ணடிக்கிறது//
/அருமை அருமை…./
நன்றி நன்றி!!!
February 20th, 2007 at 6:01 am
அருட்பெருங்கோ,
எல்லாமே அருமை கவிஞரே! இன்னும் தொடருங்கள்.
February 20th, 2007 at 6:05 am
எல்லாமே நல்லா இருக்கு!
இதுல ரொம்ப பிடிச்சது:
கண் நடிக்கிறது
ஆனால் காதல்
கண்ணடிக்கிறது
February 20th, 2007 at 6:08 am
வாங்க கோபி,
/ ஆஹா..அருமை கவிஞரே…அருமை…
எல்லா நொடிகளும் ரொம்ப நல்லயிருக்கு…/
நன்றி கோபி,,, நொடி நொடி யா சேர்த்தாதானே “மணி” கிடைக்கும்
February 20th, 2007 at 6:44 am
வாங்க நான் (நான் சொல்லும்போது நீங்க னு சொல்லிடட்டுமா?
)
/ அருட்பெருங்கோ,
எல்லாமே அருமை கவிஞரே! இன்னும் தொடருங்கள்./
கண்டிப்பாகத் தொடர முயல்கிறேன்….
வருகைக்கு நன்றிங்க!!!
February 20th, 2007 at 6:53 am
வாங்க மை ஃப்ரெண்ட்,
/ எல்லாமே நல்லா இருக்கு!
இதுல ரொம்ப பிடிச்சது:
கண் நடிக்கிறது
ஆனால் காதல்
கண்ணடிக்கிறது/
நன்றி நன்றி… இன்னும் இருக்கு… மெதுவாக வரும்!!!
February 20th, 2007 at 7:01 am
அருமை நண்பரே….
அசால்ட்டா காதல் கவிதைகளை அள்ளித் தெளிக்கிறீங்களே எப்படி?
உங்களுக்கு காதல் கவிதை மட்டும்தான் வருமா??? ;)))))
காதலல்லாதவர்களுக்காக ஒரு கவிதைய எழுதுங்க அப்பு…
February 20th, 2007 at 9:53 am
//வாங்க நான் (நான் சொல்லும்போது நீங்க னு சொல்லிடட்டுமா?
)//
கவிஞருக்கே உண்டான குசும்பு :-)…. நீங்க எப்பிடி வேணும்னாலும் கூப்பிடலாம்ணா
February 20th, 2007 at 9:24 pm
தல உங்கல பட்றி வந்ருக்கு http://www.dinamalar.com பார்த்தீங்கல
SURESH
February 21st, 2007 at 2:29 am
என்னயா ஆச்சு உமக்கு சும்மா எழுதிக்கிட்டே போறீரு ..இதெல்லாம் ஓவ்ரு ஆமா
February 21st, 2007 at 6:25 am
/கவிஞருக்கே உண்டான குசும்பு :-)…. நீங்க எப்பிடி வேணும்னாலும் கூப்பிடலாம்ணா/
சரிங்க நீங்க என்கிற நான்!!!
February 21st, 2007 at 6:26 am
/ தல உங்கல பட்றி வந்ருக்கு http://www.dinamalar.com பார்த்தீங்கல
SURESH/
நன்றி சுரேஷ்… காலையில் அலுவலகம் வந்ததும் உங்கள் மூலமாக ஓர் இனிய செய்தி!!!
மகிழ்ச்சியை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்!!!
February 23rd, 2007 at 10:32 am
ஒரு நொடிக் கவிதையாக இருந்தாலும் அழகு கவிதை.
February 23rd, 2007 at 10:43 am
// காதல்
என்னில் ஊஞ்சலாடுகிறது
உன்னில் ஊசலாடுகிறது //
ஊஞ்சலும் ஆடுவதுதான்
ஊசலும் ஆடுவதுதான்
ஊஞ்சலோ முன்னும் பின்னும்
அழகிய காமத்தைப் போல
ஊசல் பக்க வாட்டில்
பயந்து விழிக்கும் உன் கண்களைப் போல
February 23rd, 2007 at 10:44 am
http://blog.arutperungo.com/2007/02/2_20.html
// காதல்
என்னில் ஊஞ்சலாடுகிறது
உன்னில் ஊசலாடுகிறது //
ஊஞ்சலும் ஆடுவதுதான்
ஊசலும் ஆடுவதுதான்
ஊஞ்சலோ முன்னும் பின்னும்
அழகிய காமத்தைப் போல
ஊசல் பக்க வாட்டில்
பயந்து விழிக்கும் உன் கண்களைப் போல
February 24th, 2007 at 1:59 am
/ஒரு நொடிக் கவிதையாக இருந்தாலும் அழகு கவிதை. /
நன்றி துர்கா!!!
February 26th, 2007 at 7:34 am
வாங்க ஜிரா,
/ஊஞ்சலும் ஆடுவதுதான்
ஊசலும் ஆடுவதுதான்
ஊஞ்சலோ முன்னும் பின்னும்
அழகிய காமத்தைப் போல/
:-)))
/ஊசல் பக்க வாட்டில்
பயந்து விழிக்கும் உன் கண்களைப் போல/
இதென்னது புதுக் கதையா இருக்கு?
February 26th, 2007 at 9:53 pm
arumi….arumi….
March 6th, 2007 at 1:29 am
super ooooo super….Sir…. I have visited ur blog through premkumar’s blog. By… Subha…
March 6th, 2007 at 5:24 am
/super ooooo super….Sir…. I have visited ur blog through premkumar’s blog. By… Subha…/
வாழ்த்துக்கு நன்றி சுபா!!!