ஆத்தா நான் Physics ல பாசாகிட்டேன்!!! உலகிலேயே மிகப்பெரிய சிறுகதை :)
Jul 17

நம் சந்திப்புகள்
இரவில் வேண்டாமென நிந்திக்கின்றன…
நம் நிழல்கள்!

*

கதை சொல்கிறேனென சொல்லி
நீ சொல்வதெல்லாம் கதை.
செய்வதெல்லாமோ கவிதை!

*

முகம் துடைத்த
கைக்குட்டையைத் துவைக்காதே.
அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
அழகு படிந்ததை?

*
பிடித்துவிட எத்தனிக்கையில்
மறைந்து விடுகிறது வானவில்.
கூடவே என் வானமும்.
*

என் காதல் கேள்விகளுக்கு நீயே விடை என்றிருந்தேன்.
நீயோ கேள்விகள் எதுவுமின்றி என்னிடமிருந்து,
‘விடைபெற்றாய்’!

*

களிமண்ணை சிற்பம் ஆக்கினாய்.
பிறகு ஏனோ உடைத்துப் பார்த்தாய்.
மண்ணாகவே இருந்திருக்கலாம்!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

10 Responses to “நிந்திக்கும் நிழல்கள்”

  1. enbee Says:

    Nalla irukku.
    Why the shadow is crying?

  2. அருட்பெருங்கோ Says:

    / Nalla irukku.
    Why the shadow is crying?/

    காதலர்கள் பகலில் சந்தித்தால் நிழல்களும் சந்தித்துக் காதலிக்க முடியுமாம். காதலர்கள் இரவில் சந்தித்தால் நிழல்கள் என்ன செய்யும்? அதனால்தான் காதலர்களை இரவில் சந்திக்க வேண்டாமெனப் புலம்புகின்றன அவர்களுடைய நிழல்கள்.

    சரிதானே என்பீ?

  3. பிரேம்குமார் Says:

    அழகான கவிதைகள் நண்பா :-)

  4. அருட்பெருங்கோ Says:

    / அழகான கவிதைகள் நண்பா :-)/

    நன்றி தல :)

  5. delphine Says:

    முகம் துடைத்த
    கைக்குட்டையைத் துவைக்காதே.
    அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
    அழகு படிந்ததை?///
    சூப்பெரோ சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்.:)

  6. enbee Says:

    //
    காதலர்கள் பகலில் சந்தித்தால் நிழல்களும் சந்தித்துக் காதலிக்க முடியுமாம். காதலர்கள் இரவில் சந்தித்தால் நிழல்கள் என்ன செய்யும்? அதனால்தான் காதலர்களை இரவில் சந்திக்க வேண்டாமெனப் புலம்புகின்றன அவர்களுடைய நிழல்கள்.

    சரிதானே என்பீ? //

    Yes boss, I understood that.

    What I asked was different.

    I thought, the green letters represent real & the black letters represent shadows.

    And the black letters are carrying some sadness.

    thats why I asked why the shadow is crying.

    correct me if i am wrong.

    :)

  7. அருட்பெருங்கோ Says:

    வாங்க என்பீ,

    /Yes boss, I understood that.

    What I asked was different./

    நாந்தான் உங்க கேள்விய சரியா புரிஞ்சிக்கல :)

    /I thought, the green letters represent real & the black letters represent shadows.

    And the black letters are carrying some sadness.

    thats why I asked why the shadow is crying./

    பசுமையானக் காதல் கவிதைகளுக்கு பச்சை நிறம், சோகமான காதல் கவிதைகளுக்கு கருப்பு நிறம் கொடுப்பது என்பது என்னுடைய வழக்கம் :) எப்பவும் அது தனித்தனிப் பதிவுகளில் வரும். இங்கே ஒரே பதிவில் போட்டு விட்டதால் உங்களைக் கொஞ்சம் குழப்பிவிட்டது :) காதலுக்கும் நிறம உண்டுதானே?்

    /correct me if i am wrong.

    :)/
    நீங்க சரியாதான் கேட்டிருக்கீங்க… நாந்தான் குழ(ம்)ப்பிட்டேன்… :)

  8. அருட்பெருங்கோ Says:

    / முகம் துடைத்த
    கைக்குட்டையைத் துவைக்காதே.
    அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
    அழகு படிந்ததை?///
    சூப்பெரோ சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்.:)/

    நன்றிங்க மேடம்!!!

  9. sanjai Says:

    kathalin enthachcheyalum kavithaithakal thane kavinjare…
    nice….

  10. sanjai Says:

    nice….

Leave a Reply