மூன்று நெருங்கிய தோழிகளின் பெயர்களைக் கேட்டார்கள்.
உனது பெயரை மூன்று முறை சொன்னேன்.
*
தாமதமானாலும்,
நான் வரும்வரை
காத்திருக்கிறாள் காதலி.
தாமதமானதும்,
தேடிக்கொண்டு
வீட்டுக்கே வருகிறாள் தோழி!
*
ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!
*
நெடும்பயணத்துக்கான வழியனுப்புதலில்
வண்டி கிளம்பியபின் நீ ஓடிவந்து நீட்டிய
தண்ணீர் பாட்டில் முழுக்க நிரம்பியிருந்தது
நம் நட்பின் ஈரம்!
*
தினமும் பூப் பறித்து தருகிறது காதல்.
பூஞ்செடிக்கு நீரூற்றுகிறது நட்பு!
***
கடந்த சில நாட்களாக எனது வலைப்பதிவினைத் திறப்பதில் பிரச்சினைகள் இருந்திருக்கும். இதுவரை, தளம் (domain) மட்டும் சொந்தமாக வைத்துக்கொண்டு, ப்ளாகர் சேவை மூலம் பதிவெழுதிக் கொண்டிருந்தேன். அதில் இருந்து மாறி, தனி வலையிடம் (self hosting) வாங்கி வேர்ட்ப்ரஸ் மூலம் வலைப்பதியும் முயற்சியில் இருப்பதே அதற்கு காரணம்.
http://blog.arutperungo.com மற்றும் http://songs.arutperungo.com ஆகிய URLகளில் எந்த மாற்றமுமிருக்காது. ஆனால் திங்கட்கிழமை (14-04-2008) முதல் குறைந்தது ஒரு வார காலத்துக்கு இந்த URLகள் வேலை செய்யாது. புதிய இடுகைகள் எதுவும் எழுத முடியாத இந்த ஒரு வார காலத்தில் (மட்டும்) பழைய இடுகைகளை வாசிக்க விரும்பினால் http://arutperungo.blogspot.com மற்றும் http://samsongs.blogspot.com ஆகிய URL களைப் பயன்படுத்தலாம்!
கூகிள் ரீடர் அல்லது பிற RSS reader பயன்படுத்தி செய்தியோடை மூலமாக வாசித்து வருபவர்களுக்கு :
நீங்கள் http://feeds.feedburner.com/arutperungo மற்றும் http://feeds.feedburner.com/arutperungosongs செய்தியோடைகளைப் பயன்படுத்தினால், எந்த மாற்றமும் செய்ய வேண்டியிருக்காது.
ஒருவேளை
http://arutperungo.blogspot.com/feeds/posts/default ( அல்லது http://blog.arutperungo.com/feeds/posts/default )
மற்றும்
http://samsongs.blogspot.com/feeds/posts/default ( அல்லது http://songs.arutperungo.com/feeds/posts/default ) பயன்படுத்தினால், முன்னாலிருக்கும் feedburner செய்தியோடைகளுக்கு மாறிக்கொள்ளவும்.
மின்னஞ்சல் மூலமாக வாசிப்பவர்கள், எந்த மாற்றமுமில்லாமல் தொடர்ந்து மின்னஞ்சல் மூலமாக பதிவுகளை வாசிக்கலாம்.
வேர்ட்பிரஸிற்கு மாறிய பிறகு வாசிப்பதில் ஏதேனும் பிரச்சனைகளிருந்தால் மடலிடவும் – arutperungo@arutperungo.com
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
April 12th, 2008 at 7:58 am
//ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.//
Possisiveness.
//யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!//
Unconditional love
April 12th, 2008 at 8:05 am
\\ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!\\
உண்மை..;))
தகவலுக்கு நன்றி ராசா ;))
April 12th, 2008 at 8:35 am
//தினமும் பூப் பறித்து தருகிறது காதல்.
பூஞ்செடிக்கு நீரூற்றுகிறது நட்பு!//
ithai alaga solli irukeenga. so true! so true!
April 12th, 2008 at 9:38 am
நல்ல கவிதைகள்.
**
அப்பாஆஆ..நம்ம வேர்ட்பிரெஸ் பரப்பு முயற்சிகள் வீண் போகவில்லை
April 12th, 2008 at 11:26 am
///மூன்று நெருங்கிய தோழிகளின் பெயர்களைக் கேட்டார்கள்.
உனது பெயரை மூன்று முறை சொன்னேன்.///
நல்லா இருக்கு :))
April 13th, 2008 at 9:00 pm
மிக மிக அருமையான கவிதைகள்….:-)
April 13th, 2008 at 9:13 pm
கவிதைகள்
எல்லாமே நல்லா இருக்கு….
Senthil,
Bangalore
April 14th, 2008 at 12:25 am
காதல், நட்பு ரெண்டுலயும் ஒன்ன விட இன்னொன்னு தான் சிறந்ததுனு நான் சொல்ல வரலங்க… காதலோட இயல்பு அது, நட்போட இயல்பு இது னு மட்டும்தான் சொல்ல வந்தேன்!
நன்றி வினோ!
April 14th, 2008 at 12:26 am
/ உண்மை..;))/
பார்த்த உண்மையா? கேட்ட உண்மையா?அனுபவித்த உண்மையா?
/தகவலுக்கு நன்றி ராசா ;))/
April 14th, 2008 at 12:28 am
/ithai alaga solli irukeenga. so true! so true!/
கோபி தமிழ்ல சொன்னத நீங்க ஆங்கிலத்துல சொல்றீங்க!
April 14th, 2008 at 12:30 am
/நல்ல கவிதைகள்./
நன்றி ரவி!
**
/அப்பாஆஆ..நம்ம வேர்ட்பிரெஸ் பரப்பு முயற்சிகள் வீண் போகவில்லை :)/
மாறினதுக்கப்பறம் வரப்போற பிரச்சினைக்கெல்லாம் உங்களதான் புடிக்கப்போறேன்!
April 14th, 2008 at 12:33 am
/நல்லா இருக்கு :))/
நன்றிங்க தமிழ் ப்ரியன்!
April 14th, 2008 at 12:35 am
/கவிதைகள்
எல்லாமே நல்லா இருக்கு…./
நன்றிங்க செந்தில்!!
April 14th, 2008 at 12:54 am
கடைசி பதிவுனு போட்டு பயமுறுத்திட்டீங்க முழுவதும் படித்த பிறகு தான் நிம்மதி ஆச்சு…………
April 14th, 2008 at 11:33 am
கவிதைகள் வழக்கம் போல அருமை:)
வாழ்த்துக்கள் மாறுதல்களுக்கு:)
April 16th, 2008 at 12:12 pm
//தாமதமானாலும்,
நான் வரும்வரை
காத்திருக்கிறாள் காதலி.
தாமதமானதும்,
தேடிக்கொண்டு
வீட்டுக்கே வருகிறாள் தோழி!//
வீட்டுக்கு வந்த தோழிக்கு காப்பி கிடைத்தது
வீட்டுக்கு வந்த காதலிக்கு ஆப்பு கிடைத்தது.
கவித்கள் சூப்பர். WPக்கு வந்தமைக்கு வாழ்த்துகள். கலக்குங்க.
April 16th, 2008 at 10:21 pm
/கடைசி பதிவுனு போட்டு பயமுறுத்திட்டீங்க முழுவதும் படித்த பிறகு தான் நிம்மதி ஆச்சு…………/
கவலைப்படாதீங்க ஸ்ரீ… அதான் வேர்ட்பிரஸ்க்கு மாறியாச்சே! சீக்கிரமே வேர்ட்பிரஸில் முதல் பதிவுன்னு ஒரு பதிவு போட்றலாம்
April 16th, 2008 at 10:23 pm
/கவிதைகள் வழக்கம் போல அருமை:)
வாழ்த்துக்கள் மாறுதல்களுக்கு:)/
நன்றிகள் பல ரசிகன்!!!
April 16th, 2008 at 10:27 pm
/வீட்டுக்கு வந்த தோழிக்கு காப்பி கிடைத்தது
வீட்டுக்கு வந்த காதலிக்கு ஆப்பு கிடைத்தது./
சூடாக கிடைத்தது…
வீட்டுக்கு வந்த,
தோழிக்கு காப்பியும்
காதலிக்கு ஆப்பும்!
இப்படியிருந்திருந்தா கவுஜையாகியிருக்கும் :-))
/கவித்கள் சூப்பர். WPக்கு வந்தமைக்கு வாழ்த்துகள். கலக்குங்க./
வாழ்த்துகளுக்கு நன்றிங்க சிறில்!!!
April 16th, 2008 at 11:47 pm
கவிதைகள் வழக்கம் போல அருமை manikandan.nellai
April 17th, 2008 at 7:54 pm
நல்ல கவிதைகள்
அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
April 18th, 2008 at 7:41 pm
/கவிதைகள் வழக்கம் போல அருமை manikandan.nellai/
நன்றிங்க மணிகண்டன். முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்!
April 18th, 2008 at 7:42 pm
/நல்ல கவிதைகள்/
நன்றிங்க கே ஆர் பி!
April 23rd, 2008 at 11:22 am
SUPER
April 29th, 2008 at 1:57 pm
நன்றிங்க ரெகு!
May 9th, 2008 at 6:48 pm
அருட்பெருங்கோ,
wowowowwowowow… I dont have words to express my feelings. Really wonderful, I read almost all your blogs, all are very excellent. Are you working in cine field? Better you try there; such kind of peoples should be there only. Keep witting especially love poets. Wish you all the best for you future.
Take care,
Mastan Oli
May 10th, 2008 at 2:10 pm
மஸ்தான்,
நன்றி. ஆனா நீங்க என்ன வச்சு காமெடி எதுவும் பண்ணலயே?
May 10th, 2008 at 3:00 pm
மூன்று நெருங்கிய தோழிகளின் பெயர்களைக் கேட்டார்கள்.
உனது பெயரை மூன்று முறை சொன்னேன்.//
பாவம் - உங்களுக்கு ஒரேயொரு தோழிதானா ?

May 12th, 2008 at 9:27 am
கொழுவி,
May 12th, 2008 at 12:47 pm
hehe… =))
காமெடி எதுவும் பண்ணல.
I’m true only…
May 12th, 2008 at 1:47 pm
/காமெடி எதுவும் பண்ணல.
I’m true only… /
August 13th, 2008 at 10:45 pm
ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!
Migavum arumai!!!
August 20th, 2008 at 1:23 pm
super kavithai,i wish u to succes your love.