Aug 15
நம் காதல் தேசத்தில்…
நீ…
தேசிய மலர்!
உன் கைக்குட்டை…
தேசிய கொடி!
உன் பிறந்தநாள்…
தேசிய தினம்!
உன் பாதச்சுவடு…
தேசிய சின்னம்!
என்று கொண்டாடினேன்.
இன்றோ…
உன் மௌனமே…
தேசிய கீதமானது!
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
August 15th, 2007 at 6:45 am
வாழ்த்துக்கள்.. அருட் பெருங்கோ..
August 15th, 2007 at 7:18 am
எழுத்துக்கு கொடி வண்ணம் முயற்சித்ததில் வெள்ளையில் ஏதேனும் வாக்கியங்கள் தெரியாமல் போய்விட்டதா? புலம்பல் தாங்கவில்லையடா சாமி :-))
August 15th, 2007 at 9:57 pm
/ வாழ்த்துக்கள்.. அருட் பெருங்கோ../
நன்றிங்க மேடம்!!!
August 15th, 2007 at 9:59 pm
/எழுத்துக்கு கொடி வண்ணம் முயற்சித்ததில் வெள்ளையில் ஏதேனும் வாக்கியங்கள் தெரியாமல் போய்விட்டதா? புலம்பல் தாங்கவில்லையடா சாமி :-))/
ஜெஸிலா,
கொடி வண்ணமெல்லாம் இல்லைங்க எப்பவுமே இதே வண்ணம்தான!!!
புலம்பல கேட்கிறவங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான்…என்ன பண்றது
August 15th, 2007 at 10:26 pm
அடுத்த காதல் புலம்பல் எப்போ அருட் பெருங்கோ?
August 15th, 2007 at 10:34 pm
/ அடுத்த காதல் புலம்பல் எப்போ அருட் பெருங்கோ?/
்புலம்பலுக்குன்னேதான் புதன் கிழமைய ஒதுக்கி வச்சிட்டேனே மேடம்
August 16th, 2007 at 5:01 am
ஆகா, ஒரு கொல (காதல்) வெறியோட தான்ப்பா திரியிறாங்க….
August 16th, 2007 at 5:07 am
/ ஆகா, ஒரு கொல (காதல்) வெறியோட தான்ப்பா திரியிறாங்க…./
தல,
பெயரிலேயே காதலை வத்திருக்கும் தாங்கள் மென்மையான காதல் உணர்வுகளை கொல வெறி என்று கொச்சைப்படுத்தலாமா?
August 16th, 2007 at 5:10 am
காதல் முரசு ஐயா’வே,
நன்றாக இருக்கிறது உங்களின் இந்த கவிதை……
August 16th, 2007 at 5:17 am
/ காதல் முரசு ஐயா’வே,/
ஏன்?ஏன்??ஏன்??? எனக்கு கோபம் வந்தா அப்புறம் அழுகாச்சி வந்துடும்
/நன்றாக இருக்கிறது உங்களின் இந்த கவிதை……/
நன்றிங்க ராயல் ராம்!!!
August 19th, 2007 at 4:40 am
என்ன செய்வது?
மௌனம் சம்மதம் என்று
தவறாக மொழி பெயர்த்த
நீ தேசத்துரோகிதான்!
August 8th, 2008 at 7:11 pm
Siva, Good