ஜன்னல் வழியே வெட்கமின்றி ரசித்திருக்கிறேன் எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்
Feb 19

எவருக்கும் அனுமதியற்ற
எனது அறைச்சுவரெங்கும்
ஆணியில்லாமல் தொங்குகின்றன
உனது புகைப்படங்கள்.

ஒன்றில் சிரிக்கிறாய்.
ஒன்றில் சிணுங்குகிறாய்.
ஒன்றில் பயப்படுகிறாய்.
ஒன்றில் முகம்புதைத்து அழுகிறாய்.
ஒன்றில் தூர விலகி நடக்கிறாய்.
இன்னும் பலவற்றில் இன்னும் பல மாதிரி.
என்னை வெறுமைக்கு துரத்துகிற பாவனையில்
தினமொன்றாய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

உன்னிடமிருந்து தப்பிக்கும் முடிவுடன்
எல்லாப் படங்களையும் மூட்டைகட்டி
கொல்லைப்புற ஆழத்தில் புதைத்துவிட்டு திரும்புகிறேன்.

புகைப்படங்கள் இருந்த இடத்திலெல்லாம்
உன்னை இன்னுமதிகமாய் நினைவூட்டியபடி
இப்பொழுது தொங்கிக்கொண்டிருக்கிறது
அவற்றை மூட்டைகட்டிய கணம், கனமாய்!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

19 Responses to “தப்பித்துச் சென்று சிறைபடுதல்”

  1. Anonymous Says:

    oru naal kulira vaikureenga…
    oru naal pulambureenga…

    rasithum eludhuven …
    rasikavum eludhuven nu nirubichu irukeenga …

    vaazhthukal ….

  2. கருணா Says:

    நல்லா இருக்குங்க அருள்…
    எங்களை சிறைபடுத்தி விட்டீர்கள் உங்கள் கவிதைக்குள்…

  3. அருட்பெருங்கோ Says:

    @அனானி,
    வாழ்த்துகளுக்கு நன்றிங்க அனானி. (அனானினு சொல்றதுக்கே ஒரு மாதிரி இருக்கே. பெயரோடு வரலாமே)

    @கருணா,
    சிறைபட்டுட்டீங்களா? :) நன்றிங்க கருணா.

  4. Senthil Says:

    Arumai Nanbare….

  5. Dreamzz Says:

    kadaisi varigal nachu.. nice :)

  6. சுரேகா.. Says:

    அழகா எழுதியிருக்கீங்க!

    ஆமா..ஆனந்தவிகடனின்..ஐ லவ் யூ விகடனில் வந்த கவிதை உங்களுதா?

  7. அருட்பெருங்கோ Says:

    செந்தில், ட்ரீம்ஸ், சுரேகா,
    மூவருக்கும் நன்ரிகள்!!!

    ஐ லவ் யூ விகடனில் வந்த இரண்டும் நானெழுதியவைதான். ஆனால் இரண்டாவது கவிதையாக நான் அனுப்பியது :

    அந்த மூன்று வார்த்தைகளைக் கேட்டாலும்
    எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்
    என்று வெட்கப்படுகிறவளை என்ன செய்ய?

    ஆனால் அங்கு பிரசுரமாகியிருப்பது :

    எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்
    என்று வெட்கப்படுகிறவளை என்ன செய்ய?

    படிச்சவங்க எல்லாம் என்ன அர்த்தம் எடுத்துகிட்டாங்களோ :(

  8. கோபால் Says:

    ஒன்றில் சிரிக்கிறாய்.
    ஒன்றில் சிணுங்குகிறாய்.

    என்னை வெறுமைக்கு துரத்துகிற பாவனையில்
    தினமொன்றாய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

    அருமை தோழ‌ரே..!

  9. இராம்/Raam Says:

    சூப்பரு…

  10. அருட்பெருங்கோ Says:

    கோபால், இராம்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

  11. ram Says:

    dera arul,

    vaazhthukal,nachunu eruththu

    ram

  12. Mani Says:

    உணர்வுகளின் வெளிப்பாடு….

    அருமை அருள்!

  13. ஸ்ரீ Says:

    அடப்போப்பா உனக்கு இதே வேலையா போச்சு தானும் பொலம்பி அடுத்தவனையும் பொலம்ப உடுற :(

  14. அருட்பெருங்கோ Says:

    ராம், மணி,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

  15. அருட்பெருங்கோ Says:

    ஸ்ரீ,
    என்னைய என்ன பண்ண சொல்ற? அலுவலகத்துலயும் பொலம்பத்தான் விடறாங்க. புலம்பாம என்ன பண்றது?

  16. Anonymous Says:

    azhagiya kavidaigalal thamizhai melum azhagu paduthugirir.
    adhu enna anaithu kadhailum ila enra kadhapathiram

  17. அருட்பெருங்கோ Says:

    /azhagiya kavidaigalal thamizhai melum azhagu paduthugirir.
    adhu enna anaithu kadhailum ila enra kadhapathiram/

    கருத்துக்கு நன்றிங்க நண்பரே. இளா எல்லாக்கதைக்கும் பொதுவான ஒரு கற்பனை கதாபாத்திரம்.

  18. தினேஷ் Says:

    ஆழமான உணர்வின் பதிவு…
    அருமை நண்பரே…

    தினேஷ்

  19. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க தினேஷ்!

Leave a Reply