Jul 01
துயரங்களால் துவண்டு கிடக்கிறேன்.
சாய்ந்து கொள்ள ஒரு தோள் நோக்கி,
என் தேடல் தொடங்குகிறது.
அம்மா வருகிறாள்.
அவளுக்கே இதயம் பலவீனம்.
சாய்ந்து கொள்ள மனமில்லாமல் நடக்கிறேன்.
நண்பன் வருகிறான்.
மணமான மகிழ்ச்சியோடு.
சாயாமல் நடக்கிறேன்.
காதலி வருகிறாள்.
கையில் திருமண அழைப்பிதழோடு.
விழுந்து விடாமல் நடக்கிறேன்.
வழக்கம்போல
தூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை.
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
July 2nd, 2007 at 12:44 am
// வழக்கம்போல
தூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை.//
தனிமை என்ற பெயரில்
இறைவன்
July 2nd, 2007 at 12:55 am
தனிமையைப்போல இதமான மன ஆறுதலை இவ்வுலகில் யாராலும் தந்துவிடமுடிவதில்லை. நல்ல கவிதை. தொடருங்கள்.
July 2nd, 2007 at 5:44 am
நல்ல கவிதை அருள் ;)))
முந்தைய பதிவை படிக்க முடியவில்லை ;(
July 2nd, 2007 at 6:27 am
Arutperungo vazakkam pola kalaitinga!!!
Thanimai yai vendum anaivarum athu kidaithapin athanai verukkavum seikirarkal!!!
July 2nd, 2007 at 6:40 am
வாங்க ராகவன்,
/தனிமை என்ற பெயரில்
இறைவன்/
இறைவன் என்ற பெயரில் உங்களுக்கும்,
தனிமை என்ற பெயரில் எனக்கும்.
July 2nd, 2007 at 6:52 am
/ தனிமையைப்போல இதமான மன ஆறுதலை இவ்வுலகில் யாராலும் தந்துவிடமுடிவதில்லை./
உண்மைதான் நளாயினி. சில நேரங்களில் தனிமை கொடுமையாக இருந்தாலும் பல நேரங்களில் அது நிம்மதியானது.
/நல்ல கவிதை. தொடருங்கள்./
வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க!!!
July 2nd, 2007 at 6:55 am
/ நல்ல கவிதை அருள் ;)))/
நன்றி கோபி!!!
/முந்தைய பதிவை படிக்க முடியவில்லை ;(/
லிங்க் வேலை செய்ய வில்லையோ? பார்க்கிறேன்..
July 2nd, 2007 at 7:04 am
/ Arutperungo vazakkam pola kalaitinga!!!
Thanimai yai vendum anaivarum athu kidaithapin athanai verukkavum seikirarkal!!!/
நன்றிகள்!!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்!
அதுசரி என் பதிவுக்கும் அனானியாக வரவேண்டிய அவசியம் என்னனு எனக்குப் புரியல… பெயரோடு வரலாமே நண்பரே?
July 2nd, 2007 at 12:48 pm
அய்யயோ அருள்.. அழகா காதல் கவிதை எழுதுவீங்களே? ஏன் நீங்களும் தனிமை.. சோகம் னு? இது சரியில்ல..
July 2nd, 2007 at 12:48 pm
//நன்றிகள்!!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்!
அதுசரி என் பதிவுக்கும் அனானியாக வரவேண்டிய அவசியம் என்னனு எனக்குப் புரியல… பெயரோடு வரலாமே நண்பரே? //
Wen i was abt to leave unga kavithai a pathen.. athan apdie anony comment a potiten.. Am juz a reader here no way related n blogging.Ungaloda neria kavithaikala padichirken!!
Good work buddy.. take care..
July 2nd, 2007 at 11:45 pm
நல்லாருக்கு கவிதை …
ஆமா முந்தைய பதிவு தலைப்பு என்ன?
ஐந்து அழகும் பேரழகுமா..
இப்படி பி.கு எழுதினா மண்டைய குடையுதே?
July 3rd, 2007 at 5:45 am
வாங்க காயத்ரி,
/ அய்யயோ அருள்.. அழகா காதல் கவிதை எழுதுவீங்களே? ஏன் நீங்களும் தனிமை.. சோகம் னு? இது சரியில்ல../
ஏன் சோகம் , தனிமையெல்லாம் உங்க டிப்பார்மெண்ட்டா?
July 3rd, 2007 at 5:48 am
/Wen i was abt to leave unga kavithai a pathen.. athan apdie anony comment a potiten.. Am juz a reader here no way related n blogging.Ungaloda neria kavithaikala padichirken!!
Good work buddy.. take care../
மறுபடியும் நீங்க வந்து பதில் சொன்னதே பெரிய விசயம்
நன்றிங்க…
July 3rd, 2007 at 5:52 am
வாங்க முத்துலட்சுமி,
/ நல்லாருக்கு கவிதை …
ஆமா முந்தைய பதிவு தலைப்பு என்ன?
ஐந்து அழகும் பேரழகுமா..
இப்படி பி.கு எழுதினா மண்டைய குடையுதே?/
அந்த பதிவுதாங்க…
அழகான விசயங்கள் எல்லாமே நம்மள கைவிடும்போதும் நமக்கு துணையா இருக்கிறது தனிமை மட்டும்தான் னு சொல்ல வந்தேன்
July 3rd, 2007 at 6:31 am
//வழக்கம்போல
தூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை//
அருமை…. கலக்கிட்டீங்க..
July 4th, 2007 at 5:43 am
/அருமை…. கலக்கிட்டீங்க../
நன்றிங்க ஜி!!!
July 4th, 2007 at 7:37 am
ம்ம்ம்… அருமை …
July 4th, 2007 at 8:33 am
//வழக்கம்போல
தூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை
//
தனிமையுடனான நட்பு அழகாய் இருக்கிறது
July 5th, 2007 at 6:50 am
/ ம்ம்ம்… அருமை …/
நன்றிங்க சுந்தர்!!!
July 5th, 2007 at 6:52 am
வாங்க கவிநிலா,
/தனிமையுடனான நட்பு அழகாய் இருக்கிறது/
நட்பே அழகான விசயம்தான். எப்போதும் நம்மை விட்டுப் பிரியாத ஒருவரின் நட்பு கண்டிப்பாக அழகாகத்தான் இருக்க முடியும்.