இதயத்தின் எடை 50300 கிராம்! கொலுசே…கொலுசே… - 2
Aug 17

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருவிழாவின் அத்தனைக் கொலுசு சத்தத்திலும்
எனக்கு மட்டும் தனியாகக் கேட்கும்
உன் கொலுசின் இசை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!
உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கல்லூரியின் கடைசி நாளில்,
“நீ பேசுவதைக் கேட்காமல் இனி எப்படி இருப்பேன்” என்றேன்.
உன் கொலுசைக் கழற்றிக் கொடுத்து விட்டுப்போனாய் நீ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.
மெதுவாய்ப் படியேறி வரும் உன் கொலுசு சத்தம்
என் மனசோ சலங்கை கட்டியாடும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்
தெரியாமல்(!) உன் காலுக்கு முத்தமிடும் என் விரல்.
தெரிந்துகொண்டு சத்தமிடும் உன் கொலுசு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி விட்டு
அதன் சேட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாய்.
சத்தம்போட்டு அழுது கொண்டிருக்கும் உன் கொலுசு.

கொலுசே…கொலுசே… - 2

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

18 Responses to “கொலுசே…கொலுசே… - 1”

  1. அமுதன் Says:

    நன்றாக இருக்கிறது கொலுசு கவிதை.

  2. Naveen Prakash Says:

    //உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
    எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!//

    அனுபவித்து எழுதியிருப்பீர்கள் போலிக்கிறது அருள் ?;)) மனசுக்குள் ஜல்ஜல்…

  3. தம்பி Says:

    //கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்
    தெரியாமல்(!) உன் காலுக்கு முத்தமிடும் என் விரல்.
    தெரிந்துகொண்டு சத்தமிடும் உன் கொலுசு!//

    இது ரொம்ப அருமையா இருக்குங்க, படிக்கும்போதே உணர்வுகளை தூண்டற மாதிரி இருந்தது.

  4. சத்தியா Says:

    “வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!
    உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
    எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!…

    மனதொன்றின் ஆழமான ஏக்கம்தான். அருமையாகச் சொல்லி இருக்கின்றீர்கள்.

    பாராட்டுக்கள் அருள்.

  5. அருட்பெருங்கோ Says:

    நவீன்,

    /அனுபவித்து எழுதியிருப்பீர்கள் போலிக்கிறது அருள் ?;)) /

    நீங்களும் இதையேதான் கேட்கறீங்க…நானும் அதையேதான் சொல்றேன்…கற்பனை…கற்பனையைத் தவிர வேறில்லை!!! ;)))

    /மனசுக்குள் ஜல்ஜல்… /

    அந்த ஜல்ஜல் யாருங்கோ??? (ஏதோ நம்மப் பங்குக்கு ஒரு கேள்வி!)

  6. அருட்பெருங்கோ Says:

    தம்பி,

    /இது ரொம்ப அருமையா இருக்குங்க, படிக்கும்போதே உணர்வுகளை தூண்டற மாதிரி இருந்தது. /

    அப்படியா? மிக்க மகிழ்ச்சி!!!

    பாராட்டியமைக்கு ரொம்ப நன்றிங்க…

  7. அருட்பெருங்கோ Says:

    சத்தியா,

    /மனதொன்றின் ஆழமான ஏக்கம்தான். /

    :)))

    /அருமையாகச் சொல்லி இருக்கின்றீர்கள்.
    பாராட்டுக்கள் அருள். /

    நன்றி சத்தியா…

  8. பழனி Says:

    /* கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி விட்டு
    அதன் சேட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாய்.
    சத்தம்போட்டு அழுது கொண்டிருக்கும் உன் கொலுசு */

    /* கல்லூரியின் கடைசி நாளில்,
    “நீ பேசுவதைக் கேட்காமல் இனி எப்படி இருப்பேன்” என்றேன்.
    உன் கொலுசைக் கழற்றிக் கொடுத்து விட்டுப்போனாய் நீ! */

    மிகவும் ரசித்த வரிகள் …. வாழ்த்துக்கள் …

    ./பழனி

  9. G.Muthukumar Says:

    very nice work.. all works are excellent .. shows a lot of feelings.. i feel some kind of thabhu shankar style .. am i right..!!!

  10. அருட்பெருங்கோ Says:

    பழனி,

    /மிகவும் ரசித்த வரிகள் …. வாழ்த்துக்கள் … /

    ரசித்து வாசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி!!!!

  11. அருட்பெருங்கோ Says:

    முத்து,

    /very nice work.. all works are excellent .. shows a lot of feelings.. i feel some kind of thabhu shankar style .. am i right..!!! /

    உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றிகள்!!!

    தபூசங்கர் பாதிப்பு இல்லாமல் காதல் கவிதை எழுதவரவில்லையே என்ன செய்ய? அவருடையக் கவிதைகளை அதிகமாய் நான் ரசிப்பது காரணமாய் இருக்கலாம்…

  12. சேதுக்கரசி Says:

    //மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.
    மெதுவாய்ப் படியேறி வரும் உன் கொலுசு சத்தம்
    என் மனசோ சலங்கை கட்டியாடும்!//

    ரசித்த வரிகள் :-) (ரொம்ப நாள் முன்னாடியே படிச்சிருக்கேன்.. ப்ரியன் அனுப்பியிருக்கார் :-))

  13. kavidhai Piriyan Says:

    En kadhaliku golusu vanga kelabbiten……..Pena la ink irukkaa…illa Adilayum kadhal dhana……Unga kadhali kuduthu vaithaval !!

  14. அருட்பெருங்கோ Says:

    வாங்க கவிதை ப்ரியன்,

    /En kadhaliku golusu vanga kelabbiten……..Pena la ink irukkaa…illa Adilayum kadhal dhana……/

    நல்லது :) பேனாவெல்லாம் ஏதுப்பா? எல்லாம் இ-கலப்பை தான் ;)

    /Unga kadhali kuduthu vaithaval !!/
    அது அவங்கதான சொல்லனும் ;)

  15. கோவி.கண்ணன் Says:

    எல்லாமே சூப்பர் !

  16. அருட்பெருங்கோ Says:

    / எல்லாமே சூப்பர் !/

    நன்றிங்க கோவி!

  17. Anonymous Says:

    Very nice Poems, felt like an early morning gentle breeze’s touch.

    Srividhya

  18. அருட்பெருங்கோ Says:

    /Very nice Poems, felt like an early morning gentle breeze’s touch.

    Srividhya/

    பாராட்டுக்கு நன்றிங்க ஸ்ரீவித்யா!!!

Leave a Reply