ப்ரெண்டுங்க டே நொடிக்கவிதைகள் - 5
Aug 07

தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.

கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்…
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன…
என் பல கவிதைகள்!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

24 Responses to “கைவிடப்பட்ட கவிதை”

  1. பிரேம்குமார் Says:

    என்னய்யா ஒரே புலம்பலா இருக்கு…… :(

  2. அருட்பெருங்கோ Says:

    / என்னய்யா ஒரே புலம்பலா இருக்கு…… :(/

    தல,

    நகைச்சுவை திங்கள், காதல் செவ்வாய் மாதிரி இது புலம்பல் புதன் :)

  3. G.Ragavan Says:

    புலம்பல் புதன் முடிந்து அலம்பல் அடுத்தநாள் வரட்டும்.

    நன்றாக இருந்து இந்தக் கவிதை வடிவம்.

  4. அருட்பெருங்கோ Says:

    வாங்க ஜிரா,

    / புலம்பல் புதன் முடிந்து அலம்பல் அடுத்தநாள் வரட்டும்./

    அலம்பல் அடுத்த வாரம் ஆரம்பம்!!!

    /நன்றாக இருந்து இந்தக் கவிதை வடிவம்./

    நன்றி ராகவன்!!!

  5. த.அகிலன் Says:

    //இப்படித்தான்…
    முழுக்கவிதையும்
    வாசிக்க நேர்ந்தால்,
    என் துயர் தாங்க மாட்டாயென
    பாதியிலேயே கைவிடைப்படுகின்றன…
    என் பல கவிதைகள்!//

    சிலிர்க்குது பாஸ்…

  6. அருட்பெருங்கோ Says:

    வாங்க அகிலன்,

    / //இப்படித்தான்…
    முழுக்கவிதையும்
    வாசிக்க நேர்ந்தால்,
    என் துயர் தாங்க மாட்டாயென
    பாதியிலேயே கைவிடைப்படுகின்றன…
    என் பல கவிதைகள்!//

    சிலிர்க்குது பாஸ்…/

    முதன் முறையா வந்திருக்கீங்க ;)
    நீங்களே இப்படி சொல்லும்போது கொஞ்சம் நல்லா தான் எழுதியிருக்கேன் போல :)

  7. முத்துலெட்சுமி Says:

    ம்.. நன்றாக இருக்கிறது..

    இது பாதியா…சரியாக எண்ணுங்கள்..14முழு வரிகள் ஒரு அரை வரி எழுதி இருக்கிறீர்கள்…ஒன்பது வரிகள் புள்ளிகளாக விட்டிருக்கிறீர்கள்..

    அப்படின்னா பாதிக்கும் மேல எழுதிட்டீங்க :)

  8. அருட்பெருங்கோ Says:

    வாங்க முத்துலெட்சுமி,

    / ம்.. நன்றாக இருக்கிறது../

    நன்றிங்க!!!

    /இது பாதியா…சரியாக எண்ணுங்கள்..14முழு வரிகள் ஒரு அரை வரி எழுதி இருக்கிறீர்கள்…ஒன்பது வரிகள் புள்ளிகளாக விட்டிருக்கிறீர்கள்..

    அப்படின்னா பாதிக்கும் மேல எழுதிட்டீங்க :)/

    எழுதப்பட்டவை 9 வரிகள்… எழுதப்படாதவை 9 வரிகள்…

    ஈற்றில் உள்ள 6 வரிகளும் கைவிடப்பட்ட கவிதையில் சேராது.
    எனவே கைவிடப்பட்ட கவிதையில் பாதி தான் எழுதியிருக்கேன்!!!

    கணக்கு சரியா வருதுங்களா? ;)

  9. முத்துலெட்சுமி Says:

    அப்படியா அந்த கணக்கு

    சரி சரி அப்ப நீங்க பாதி என்ன பாதிக்கும் மேலயே எழுதாம விட்டுருக்கீங்க..விழித்திருப் ..ன்னு அந்த வரி பாதியிலயே முடிஞ்சிருச்சே..எழுதினது 8அரை வரிதான்..சோ ..ரொம்பவே படிக்கறவங்களை பத்தி மனசுல கவலைப்பட்டிருக்கீங்க…

    அக்குவேறு ஆணிவேற அலசிட்டனோ கவிதையை… :P

  10. அருட்பெருங்கோ Says:

    / அப்படியா அந்த கணக்கு

    சரி சரி அப்ப நீங்க பாதி என்ன பாதிக்கும் மேலயே எழுதாம விட்டுருக்கீங்க..விழித்திருப் ..ன்னு அந்த வரி பாதியிலயே முடிஞ்சிருச்சே..எழுதினது 8அரை வரிதான்../

    ஒத்துக்கறேன்…நீங்க கணக்குல புலிதான்னு ஒத்துக்கறேன்…நெக்ஸ்டு கவிதைல சரி பண்ணிட்டு மீட் பண்ணுவோம் :)))

    /சோ ..ரொம்பவே படிக்கறவங்களை பத்தி மனசுல கவலைப்பட்டிருக்கீங்க…/

    அப்படியும் சொல்லலாம்..பாதிக்கு மேல கவிதை எழுதத்தெரியாம போனது கூட ஒரு காரணமா இருக்கலாம் ;)

    /அக்குவேறு ஆணிவேற அலசிட்டனோ கவிதையை… :P/

    அக்கா, ஆள விடுங்க :)

  11. கோபிநாத் Says:

    \\ அருட்பெருங்கோ said…
    அப்படியும் சொல்லலாம்..பாதிக்கு மேல கவிதை எழுதத்தெரியாம போனது கூட ஒரு காரணமா இருக்கலாம் ;)

    /அக்குவேறு ஆணிவேற அலசிட்டனோ கவிதையை… :P/

    அக்கா, ஆள விடுங்க :)\\\

    அருள்
    கவிதையும் சூப்பர்
    பின்னூட்ட காமெடியும் சூப்பர் ;-))

  12. அருட்பெருங்கோ Says:

    ்வாங்க கோபி,

    / \\ அருட்பெருங்கோ said…
    அப்படியும் சொல்லலாம்..பாதிக்கு மேல கவிதை எழுதத்தெரியாம போனது கூட ஒரு காரணமா இருக்கலாம் ;)

    /அக்குவேறு ஆணிவேற அலசிட்டனோ கவிதையை… :P/

    அக்கா, ஆள விடுங்க :)\\\

    அருள்
    கவிதையும் சூப்பர்
    பின்னூட்ட காமெடியும் சூப்பர் ;-))/

    நன்றி கோபி!!!

    ஆனால் பின்னூட்டத்தில் நடந்த கவிதை திறனாய்வு, மீள் வாசிப்பு, இத்யாதி இத்யாதிகளை நீங்கள் காமெடி என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :)))

  13. முத்துலெட்சுமி Says:

    \\ஆனால் பின்னூட்டத்தில் நடந்த கவிதை திறனாய்வு, மீள் வாசிப்பு, இத்யாதி இத்யாதிகளை நீங்கள் காமெடி என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :))) //

    ஆமாம் நான் இதை வழிமொழிகிறேன்..
    :))

  14. அருட்பெருங்கோ Says:

    /
    ஆமாம் நான் இதை வழிமொழிகிறேன்..
    :))/

    அக்கா… மறுபடியுமாஆஆஆஆஆஆ???????

  15. delphine Says:

    சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கோ அருள்… புலம்பல் வேறு விதமா இருக்கும்….. நீங்க புலம்புவதை பார்த்த மன்சுக்கு கஷ்டமா இருக்கு. ஆனால் நல்லாத்தான் புலம்பியிருக்கிறீங்க..

  16. அருட்பெருங்கோ Says:

    /சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கோ அருள்… புலம்பல் வேறு விதமா இருக்கும்….. நீங்க புலம்புவதை பார்த்த மன்சுக்கு கஷ்டமா இருக்கு. ஆனால் நல்லாத்தான் புலம்பியிருக்கிறீங்க../

    ்மேடம்,

    கல்யாணமா? நான் ரொம்ப சின்னப் பையன்ங்க :)

    கவிதைல காதலிக்கிறதே நல்லா இருக்கு…இப்படியே இருப்போம் ;)

    சரி விடுங்க புலம்பல் இல்லாம வழக்கம்போல ஒரு கவிதை(?) வெள்ளிக்கிழமை போட்டுட்லாம் :)

  17. நவீன் ப்ரகாஷ் Says:

    :)) அருள் வித்தியாசமான முயற்சி :)) ரசித்தேன் !! :))

  18. Anonymous Says:

    Hai Arutperungo, sorry tamila ezhutha theriyala. I am Ms. Bala. Very nice. Keep it up

  19. அருட்பெருங்கோ Says:

    / :)) அருள் வித்தியாசமான முயற்சி :)) ரசித்தேன் !! :))/

    ்நன்றி நவீன் :))

  20. அருட்பெருங்கோ Says:

    /Hai Arutperungo, sorry tamila ezhutha theriyala. I am Ms. Bala. Very nice. Keep it up/

    ்நன்றிங்க பாலா!!!

    தமிழில் எழுத இங்கு சென்று பார்க்கவும்

  21. kavidhai Piriyan Says:

    புலம்பல் நமக்கு தேவை இல்லை…..கவிதை படிச்சோமா காதல ரசிச்சோமா…..அவ்வளவுதான்
    மக்கா…….

  22. அருட்பெருங்கோ Says:

    கவிதை ப்ரியன்,

    / புலம்பல் நமக்கு தேவை இல்லை…..கவிதை படிச்சோமா காதல ரசிச்சோமா…..அவ்வளவுதான்
    மக்கா……./

    அது!!!! :)

  23. Sri Says:

    kavithaiya vida comments romba nalla irunthathu…!! ;-)

  24. அருட்பெருங்கோ Says:

    நன்றி ஸ்ரீ!

Leave a Reply