ஹலோ யார் பேசறது? - 1 காதல் வா(வ)ரம் - 2
Feb 10

என் எழுத்தில்
அடங்க மறுக்கும்
திமிரான கவிதை நீ!

*

என் காதலுக்கு
சிறப்பென்று சொல்லிக்கொள்ள
எதுவுமேயில்லை.
அது வெகு இயல்பானது,
என் சுவாசத்தைப் போல!

*

நீ பேசிய மொழியனைத்தும்
காதலின் தேசியமொழிதான்.

*

நீண்ட பிரிவுக்குத் தயாராகும்போது
உன் விழி திரட்டிய நீர்ச்சொட்டில்
அடர்ந்து கிடந்தது காதல்!

*

நாம் நடந்த பாதையில்
நான் மட்டும் நடக்கையில்
பிஞ்சுக்காற்று தோள்தொட
உன் விரலென்று திரும்பி
ஏமாந்திருக்கிறேன்!

*

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

14 Responses to “காதல் வா(வ)ரம் - 1”

  1. ஸ்ரீ Says:

    எல்லாக் கவிதைகளுமே அருமை. சரி காதல் வாரத்தை கொஞ்சம் முன்னமே காதல் மாதம் என ஆரம்பித்திருக்கலாமே மாப்பு :)

  2. ஹாரி Says:

    //நாம் நடந்த பாதையில்
    நான் மட்டும் நடக்கையில்
    பிஞ்சுக்காற்று தோள்தொட
    உன் விரலென்று திரும்பி
    ஏமாந்திருக்கிறேன்!//

    Wow! Surely, This one is a Blast!

  3. அருட்பெருங்கோ Says:

    ஸ்ரீ,

    நன்றிப்பா! காதல் வாரத்தை காதல் மாதமென்று ஆரம்பித்திருந்தால், ஆணிகளுக்கு பேய் பிடித்து ஆடியிருக்கும்!

  4. Thangam Says:

    திமிரினா தான் காதல், கவிதை எல்லாமே.
    நல்லா இருக்கு காதற் கவிஞரே

  5. அருட்பெருங்கோ Says:

    திமிர் காதலுக்கு அழகுனு சொல்றீங்களா? கருத்துக்கு நன்றிங்க தங்கம்!

  6. ஹாரி Says:

    //முடிஞ்ச வரைக்கும் தமிழ்லயே சொல்லலாமே//

    ஒரு எழுத்துக்கு மூணு எழுத்து டைப் பண்ண வேண்டியிருக்குன்னுதாங்க.

    இந்த நிலைமைல, நான் கவிதைமாதிரி ஏதோ எழுதியிருந்தேனே பார்த்தீங்களா? அத மட்டும் படிச்சீங்க, நீங்களே “Oh,My God”னு ஆங்கிலத்தில்தான் அலறுவீங்க!

  7. நாடோடி இலக்கியன் Says:

    //
    என் காதலுக்கு
    சிறப்பென்று சொல்லிக்கொள்ள
    எதுவுமேயில்லை.
    அது வெகு இயல்பானது,
    என் சுவாசத்தைப் போல!

    நீண்ட பிரிவுக்குத் தயாராகும்போது
    உன் விழி திரட்டிய நீர்ச்சொட்டில்
    அடர்ந்து கிடந்தது காதல்//

    படித்து ரசித்தேன்.அருமை.கலக்குங்க அருள்!!

  8. கோபிநாத் Says:

    \\ஸ்ரீ said…
    எல்லாக் கவிதைகளுமே அருமை. சரி காதல் வாரத்தை கொஞ்சம் முன்னமே காதல் மாதம் என ஆரம்பித்திருக்கலாமே மாப்பு :)\\

    ரீப்பிட்டேய்ய்ய்யய்

  9. எழில் Says:

    கவிதைகள் அனைத்தும் அருமை!!!!!!!

  10. aruna Says:

    //நாம் நடந்த பாதையில்
    நான் மட்டும் நடக்கையில்
    பிஞ்சுக்காற்று தோள்தொட
    உன் விரலென்று திரும்பி
    ஏமாந்திருக்கிறேன்//

    அட!!!!!!!!!
    அன்புடன் அருணா

  11. அருட்பெருங்கோ Says:

    ஹாரி,

    Phonetic layout மூலமா தட்டச்சிப் பழகினா இப்படி ஆகிடுது. தமிழ்99 பயன்படுத்திப் பாருங்க, உயிரெழுத்து குறிலா இருந்தாலும் நெடிலா இருந்தாலும் ஒரே கீஸ்ட்ரோக் போதும், உயிர்மெய்யெழுத்தா இருந்தா குறில், நெடில் ரெண்டுக்கும் அதிகபட்சம் ரெண்டு கீஸ்ட்ரோக்தான் வரும்… முயற்சி பண்ணிப் பாருங்க! நானும் இப்போதான் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கேன்! கணினியில தரவிறக்கிக்கொள்ள – http://software.nhm.in/writer.html ஆன்லைனில் பயன்படுத்த – http://wk.w3tamil.com/

  12. அருட்பெருங்கோ Says:

    @நாடோடி இலக்கியன்,
    படித்தமைக்கும் ரசித்தமைக்கும் நன்றிகள்!!! தொடர்கிறேன்…

    @கோபி,
    இன்னும் ஆணிகள் ஆவி பறக்க வந்து கொண்டே இருக்கின்றன :(

  13. தினேஷ் Says:

    வாழ்த்த வார்த்தையில்லை அதனால் அருமை, அருமை, அருமை….’

    தினேஷ்

  14. Sri Says:

    நல்ல கவிதைகள்…..அருமை,

Leave a Reply