கொடுமைக் காரி நீ! காதல் வாங்கினால் முத்தம் இலவசம்!
Nov 13

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாம் தொடாமல் தான்
பேசுகிறோம்…ஆனால்,
காற்றில் கைகோர்த்து
விளையாடுகின்றன…
நாம் பேசிய வார்த்தைகள்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காதலில் கட்டிப் போடும் என்னைக்
கண்களாலேயேக் கட்டிப் போடுகிறாய்…
இதுதான் “கண்கட்டி வித்தை” என்பதா??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முதல் பார்வையில் நீ அழகு…
மறு பார்வையில் பேரழகு…
யாரிடம் பெற்றாயோ,
இரு பார்வைகளுக்கிடையே
மேலும் அழகாகும் வரத்தை!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னைக் கவிதை என்றேன்!
ஏன் காதல் கவிதையென்று
சொல்லவில்லையெனக்
கோபித்துக்கொண்டால்
நான் என்ன செய்வது?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாருமற்றத் தனிமையில்
என்னோடுக் குடும்பம் நடத்துகிறது…
குடும்பத்தோடு இருக்கையில்
என்னைத் தனிமைப் படுத்துகிறது…
உன் நினைவு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு தண்டவாளமாய் நீ!
மறு தண்டவாளமாய் நான்!
நமக்கேத் தெரியாமல்
நம்மீது பயணிக்கிறது
காதல் ரயில்!!

( பின்குறிப்பு :
இன்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, அமராவதி ஆத்தங்கரை! )

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

16 Responses to “காதல் ரயில்”

  1. செந்தழல் ரவி Says:

    mmmm கலக்குங்க…

  2. சுதர்சன்.கோபால் Says:

    இரண்டாமாண்டில் அடியெடுத்துவைக்கும் காதலுக்கு வாழ்த்துகள்.

  3. Naveen Prakash Says:

    கைகோர்த்து விளையாடும்
    கண்கட்டிவித்தை செய்யும்
    அழகு பேரழகாகும்
    செல்லமாக கோபித்துக்கொள்ளும்
    கொண்டபின் குடும்பம் நடத்தும்
    நினைவோடு தனிமைபடுத்தும்
    பயணிக்கட்டும் காதலாய்
    ரயில் ஆண்டாண்டுகாலமாய் !!

    அருளுக்கு கிட்டிய காதல் அமராவதியாய் பொங்கி ஓடட்டும் :))

  4. A.Prabhakaran Says:

    காதல் பெருக்கெடுத்து
    வெள்ளமாய் பாய்கிறது
    அமராவதி ஆற்றில் …

    துள்ளி விளையாடும்
    மீன்குஞ்சாய் அருட்பெருங்கோ …

    கரையோரம் அமர்ந்து
    மீன் விளையாட்டை ரசித்தபடி
    காதல் பருகும்
    நாங்கள் …

  5. ஜொள்ளுப் பேச்சி Says:

    //யாருமற்றத் தனிமையில்
    என்னோடுக் குடும்பம் நடத்துகிறது…
    குடும்பத்தோடு இருக்கையில்
    என்னைத் தனிமைப் படுத்துகிறது…
    உன் நினைவு!//
    உங்கள் கவிதை உண்மையில் சூப்பர்.உங்கள் காதல் இதில் பிரதிபலிக்கின்றது.

  6. சாத்வீகன் Says:

    /காற்றில் கைகோர்த்து
    விளையாடுகின்றன…
    நாம் பேசிய வார்த்தைகள்!/

    நன்றாய் இருக்கிறது..

    நீவிர்

    காதல் பெறும் கோ….

  7. யாழ்_அகத்தியன் Says:

    //யாருமற்றத் தனிமையில்
    என்னோடுக் குடும்பம் நடத்துகிறது…
    குடும்பத்தோடு இருக்கையில்
    என்னைத் தனிமைப் படுத்துகிறது…
    உன் நினைவு!//

    very very nice

  8. ஷைலஜா Says:

    /உன்னைக் கவிதை என்றேன்!
    ஏன் காதல் கவிதையென்று
    சொல்லவில்லையெனக்
    கோபித்துக்கொண்டால்
    நான் என்ன செய்வது?/

    அப்புறம் கோபம் போனதா இல்லையா?:) பெண்களின் மன இயல்பைக் காட்டும் அழகிய வரிகள்.
    ஷைலஜா

  9. அருட்பெருங்கோ Says:

    /mmmm கலக்குங்க… /

    நீங்க ஊக்கம் கொடுக்கும்போது என்ன பிரச்சினை? :)

    கலக்கலாம்!!!

  10. Anonymous Says:

    இரண்டாமாண்டில் அடியெடுத்துவைக்கும் காதலுக்கு வாழ்த்துகள்.

  11. அருட்பெருங்கோ Says:

    /இரண்டாமாண்டில் அடியெடுத்துவைக்கும் காதலுக்கு வாழ்த்துகள். /

    வாழ்த்துக்கு நன்றிங்க… ஓ சுதர்சன்!!!

  12. Kavidhai Virumbi Says:

    Solrathuku onnum illa..aana feel pandradhuku neriya iruku….Thats called Kadhal…..
    Anbudan,
    Pravin

  13. அருட்பெருங்கோ Says:

    /கைகோர்த்து விளையாடும்
    கண்கட்டிவித்தை செய்யும்
    அழகு பேரழகாகும்
    செல்லமாக கோபித்துக்கொள்ளும்
    கொண்டபின் குடும்பம் நடத்தும்
    நினைவோடு தனிமைபடுத்தும்
    பயணிக்கட்டும் காதலாய்
    ரயில் ஆண்டாண்டுகாலமாய் !!/

    கவிதைகளையெல்லாம் குளிப்பாட்டி ஒரு கவிதையா? நன்றி…

    //அருளுக்கு கிட்டிய காதல் அமராவதியாய் பொங்கி ஓடட்டும் :)) //

    என்னது ஓடட்டுமா??? :((((

  14. அருட்பெருங்கோ Says:

    //காதல் பெருக்கெடுத்து
    வெள்ளமாய் பாய்கிறது
    அமராவதி ஆற்றில் …//

    அமராவதி ஆத்துல இப்போக் சாயக்கழிவுதான் போயிக்கிட்டு இருக்கு…

    //துள்ளி விளையாடும்
    மீன்குஞ்சாய் அருட்பெருங்கோ …//

    நண்பா நீயுமா? :(

    //கரையோரம் அமர்ந்து
    மீன் விளையாட்டை ரசித்தபடி
    காதல் பருகும்
    நாங்கள் … //

    !!!

  15. அருட்பெருங்கோ Says:

    /உங்கள் கவிதை உண்மையில் சூப்பர்.உங்கள் காதல் இதில் பிரதிபலிக்கின்றது. /

    நன்றி ஜொள்ளுப்பேச்சி…
    வருகைக்கும் தருகைக்கும்!!!

  16. அருட்பெருங்கோ Says:

    //நன்றாய் இருக்கிறது..

    நீவிர்

    காதல் பெறும் கோ…. //

    நன்றி சாத்வீகன்…

Leave a Reply