May 27
முன்குறிப்பு : இதில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே!
ஒரு காதல் பயணம் பகுதி - 1
எப்போதும் என் கண் பார்த்துப் பேசும் நீ,
நிலம் பார்த்துப் பேச ஆரம்பித்தக் கணத்தில்
நமக்குள் காதல் பிறந்தது!
நிலம் பார்த்துப் பேச ஆரம்பித்தக் கணத்தில்
நமக்குள் காதல் பிறந்தது!
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை.
தேவதையின் வரவுக்காக கோவிலுக்குள் காத்திருக்கிறேன்.
கோவில் மணி விடாது ஒலித்த ஒரு மங்கள வேளையில்
துவட்டப்படாத ஈரத்தலையோடு கோவிலுக்குள் நுழைகிறாய்.
அப்போது எங்கிருந்தோ ஒரு நூறுப் புறாக்கள் உன்னை
தரிசிப்பதற்காகவே அந்தக் கோவிலுக்கு வருகின்றன.
நீ வந்ததைப் பார்த்ததும் கோவிலும் அந்தப் புறாக்களை
தன் கோபுரத்தில் வைத்து தன்னை அலங்கரித்துக் கொள்கிறது.
வழக்கத்துக்கு மாறாக தன்னை விட்டு எல்லோரும்
உன்னையே கவனிப்பதைப் பார்த்து பொறாமை கொள்கிறார் கடவுள்.
உள்ளே நுழைந்த நீ வரிசையில் நின்று கண்ணை மூடிக் கடவுளைக் கும்பிடுகிறாய்.
நீ கண் திறந்ததும் உன் கண்ணில் நானே விழ வேண்டுமென
உனக்கெதிர் வரிசையில் நான் நிற்கிறேன்.
நீ கண் திறக்கிறாய்.
நான் உன் கண்களை நேராய்ப் பார்க்கிறேன்.
அச்சம், நடுக்கம், பதட்டம் என எல்லா உணர்ச்சிகளிடமும் ஓடிக் கடைசியில்
வெட்கத்தில் போய் தன்னை மறைத்துக்கொள்கிறது உன் முகம்.
பூசாரிக் கொடுத்த விபூதியை அப்படியேத் தூணில் கொட்டி விட்டு வெளியேறுகிறேன் நான்.
நான் கொட்டியதில் இருந்து ஒரு துளியெடுத்து உன் நெற்றியில் இட்டுக் கொள்கிறாய்.
அப்போது, நிலவு, தானேப் பொட்டு வைத்துக் கொள்வதைக்
கடவுளும் உள்ளிருந்து எட்டிப் பார்க்கிறார்.
வேண்டுதலை முடித்ததும் என்னைத் தாண்டி வேகமாகப்
போவது போல் நடித்துக் கொண்டுமெதுவாக செல்கிறாய்.
காதலில் நடிப்பது தானே சுகம்?
நானும் மெதுவாக உன்னைத் தொடர்ந்து நட(டி)க்க ஆரம்பிக்கிறேன்.
பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்து நான் பின்தொடர்வதை
உனக்கு நேரடி வர்ணனை செய்கிறாள், உன் தங்கை.
உன் பின்னால் என்னை சுற்ற வைத்துவிட்டு,
கோயில் பிரகாரத்தை நீ சுற்ற ஆரம்பிக்கிறாய்.
உனக்கு அருகில் வந்து உன் வேகத்திலேயே நானும்சுற்ற ஆரம்பிக்கிறேன், உன்னோடு.
“கோயிலுக்கு சாமி கும்பிட வந்தீங்களா” முதன்முறை உன்னிடம் பேசுவதால்,
கேட்டு(உளறி?)முடிப்பதற்குள் தடுமாறித்தான் போனேன்.
“இல்ல சினிமா பாக்க வந்தோம்” என
நீ சொல்ல நினைத்ததை உன் தங்கைசொல்கிறாள்.
உள்ளூற நகைத்தாலும் பொய்யாக அவளை அதட்டுகிறாய்.
நீ ஏதாவது பேச வேண்டும் எனக் காதலிடம்கையேந்துகிறேன்.
வேண்டியவர்களைக் காதல் என்றைக்கு கைவிட்டிருக்கிறது?
“உங்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இல்லன்னு கேள்விப்பட்டேனே,
அப்புறம் கோயிலுக்கு வந்திருக்கீங்க” என்று குனிந்து கொண்டே கேட்கிறாய்.
உன் தங்கையின் பேச்சைக் கேட்டு விட்டு உன் இசையைக் கேட்க இனிமையாயிருக்கிறது.
“இப்பவும் கடவுள் இருக்குன்னு நான் நம்பல…ஆனா”
“ஆனா?”“நேத்து உங்க வீட்டுக்கு வந்திட்டுப் போனதுல இருந்து
தேவதைகள் இருக்குன்னு நம்ப ஆரம்பிச்சுட்டேன்”என்ன சொல்கிறேன் என்று,
புரிந்து கொண்டு வெட்கத்தில் மேலும் அழகாகிறாய்.
“தேவதைகள் இருக்குன்னு நம்பறீங்களா? தேவதை இருக்குன்னு நம்பறீங்களா?”–
நீ தேவதையாக இருந்தாலும், பெண்தானே,
அதுதான் பெண்ணுக்கேயுரிய சந்தேகத்தோடு கேட்கிறாய்.
நீ சுற்றி வளைத்து என்னக் கேட்க வருகிறாய் எனத்தெரிந்தும்,
“தேவதைகள் இருக்குன்னு நம்பறேன்” என்று அழுத்திச் சொல்கிறேன் நான்.
மேலும், சந்தேகத்தில் மௌனமாகிறாய் நீ.
“தேவதைக்கு ஒரு குட்டி தேவதை பிறந்தால் அப்புறம் தேவதைகள்தானே?”
எனப் புரிய வைக்கிறேன் நான்.
உன் அசட்டு சந்தேகம் உண்மையிலேயே அசடாகிப் போனது.
முதல் சுற்று முடிந்தது.
வெட்கத்தை மறைத்துக் கொண்டு “நேத்துல இருந்து வேற என்னல்லாம் நம்ப ஆரம்பிச்சீங்க?” எனத் தூண்டில் போடுகிறாய்.
“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன – நீ இத நம்புறியா?”
“ஏன் நீங்க நம்பலையா?”
“நேத்து வரைக்கும் நம்பாமதான் இருந்தேன்…”
“நேத்து மட்டும் என்ன நடந்தது?”
“நம்ம திருமணம் எங்க நிச்சயிக்கப்பட்டது?”
“எங்க வீட்லதான்?”
“நீ எங்க குடியிருக்க?”
“அய்யோக் கடவுளே….நான் எங்க வீட்லதான் குடியிருக்கேன் .அதுக்கென்ன?”
நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரிந்தும், தெரியாதது போல் நடிக்கிறாய்.
“தேவதை குடியிருக்கிற இடம் சொர்க்கம் தான? அதனால தான் சொல்றேன் –
நம்ம திருமணமும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப் பட்டிருக்கு”
இரண்டாவது சுற்றும் முடிந்தது.
சில நொடிகள் வார்த்தைகள் ஓய்வெடுக்க, மௌனம் பேசிக் கொண்டிருந்தது.
“ஐய்யையோ இது தெரியாம நான் நேத்து பாதி நிச்சயத்திலேயே
வேற எடத்துக்கு குடி போயிட்டேனே” எனப் பதறுகிறாய்.
“கவலைப் படாதே…நீ எந்த இடத்தில் குடியேறினாலும் அந்த இடம் தன்னை சொர்க்கமாக மாற்றிக் கொள்ளும்” என உன்னை சமாதானப் படுத்துகிறேன்.
“இல்ல…நான் குடியேறினதே சொர்க்கத்திலதான்…” என்கிறாய்.
உனது அடுத்த வார்த்தைக்காகக் காத்திருக்கிறேன் நான்.
“நேத்து நான் உங்க இதயத்துக்குள்ள நுழைஞ்சத நீங்க கவனிக்கலையா?”
எனக் கேட்டு சிரிக்கிறாய்.
“அது சொர்க்கம் போலவா இருக்கு?”
“அது சொர்க்கம் ‘போல்’ இல்லை – அது தான் சொர்க்கம்.
நான் வரப்போறேன்னு அதற்கு முன்பே தெரிஞ்சிருக்கு.
எனக்காக உள்ள ஒரு ராஜாங்கமே அமைச்சு எனக்கு வரவேற்பு கொடுத்தது”
உனக்குள்ளும் காதல் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.
மூன்றாம் சுற்றும் முடிந்தது.
வீட்டுக்கு செல்லத் திரும்பிய உன்னிடம் “ என்ன ‘வாங்க’, ‘போங்க’னு மரியாதையா
எல்லாம் கூப்பிட வேண்டாம், பேர் சொல்லியேக் கூப்பிடலாம்” என்கிறேன்.
“சரிடா சிவா” என்று சொல்லி “களுக்” கென சிரித்துக் கொண்டு சாலையில் மறைகிறாய் நீ.
“சரியான ஜோடியைத்தான் இணைத்திருக்கிறோம்”
என நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது இயற்கை.
( காதலில் தொடர்ந்து பயணிப்போம் )
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
May 28th, 2006 at 11:18 pm
நல்லா இருக்கு…
May 28th, 2006 at 11:45 pm
அழகு அழகாய் அனுபவித்து எழுதுகின்றீர்கள்…பாராட்டுகள்
[தல...வழ்க்கப்படி உல்டா இல்லையே
May 29th, 2006 at 12:49 am
///”எங்கிருந்தோ ஒரு நூறுப் புறாக்கள் உன்னை
தரிசிப்பதற்காகவே அந்தக் கோவிலுக்கு வருகின்றன.
நீ வந்ததைப் பார்த்ததும் கோவிலும் அந்தப் புறாக்களை
தன் கோபுரத்தில் வைத்து தன்னை அலங்கரித்துக் கொள்கிறது.
வழக்கத்துக்கு மாறாக தன்னை விட்டு எல்லோரும்
உன்னையே கவனிப்பதைப் பார்த்து பொறாமை கொள்கிறார் கடவுள்.”///
///”வேண்டியவர்களைக் காதல் என்றைக்கு கைவிட்டிருக்கிறது?”///
///”சரியான ஜோடியைத்தான் இணைத்திருக்கிறோம்”
என நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது இயற்கை.”///
அருள்!!கற்பனை வெள்ளம் உங்களை
மட்டும் அல்ல,படிக்கும் எங்களையும்
அதன்போக்கில் இழுத்துச்செல்கிறது.
“மூன்றும் முத்தா(மா)ன சுற்றுகள்!!.”
///”வீட்டுக்கு செல்லத் திரும்பிய உன்னிடம் “என்ன ‘வாங்க’, ‘போங்க’னு மரியாதையா எல்லாம் கூப்பிட வேண்டாம், பேர் சொல்லியேக் கூப்பிடலாம்” என்கிறேன்.
“சரிடா சிவா” என்று சொல்லி “களுக்” கென சிரித்துக் கொண்டு சாலையில் மறைகிறாய் நீ.”
“அருள்!!!அவள் நூறடி பாய்ந்துவிட்டாள்!!!!!!.”
அன்புடன்,
(துபாய்)ராஜா.
May 29th, 2006 at 1:50 am
ரவி,
/நல்லா இருக்கு… /
வருகைக்கும் கருத்தக்கும் நன்றி ரவி!
அன்புடன்,
அருள்.
May 29th, 2006 at 1:52 am
சிவஞானம்,
/அழகு அழகாய் அனுபவித்து எழுதுகின்றீர்கள்…பாராட்டுகள்/
அனுபவமெல்லாம் இல்லீங்க கற்பனை தான்!!
பாராட்டுக்கு நன்றிங்க..
/தல…வழ்க்கப்படி உல்டா இல்லையே/
என்ன கேட்கிறீங்கனு புரியலையே சிவஞானம்
அன்புடன்,
அருள்.
May 29th, 2006 at 1:55 am
ராஜா,
/அருள்!!கற்பனை வெள்ளம் உங்களை
மட்டும் அல்ல,படிக்கும் எங்களையும்
அதன்போக்கில் இழுத்துச்செல்கிறது./
கற்பனையா இருந்தாலும் காதல் வெள்ளத்துல நீந்துறது சுகம்தான்
/”மூன்றும் முத்தா(மா)ன சுற்றுகள்!!.”/
ம்ம்ம்..:))
/அருள்!!!அவள் நூறடி பாய்ந்துவிட்டாள்!!!!!!/
காதலுக்கு அது நல்லதுதானே??
அன்புடன்,
அருள்.
May 29th, 2006 at 2:18 am
அழகான நடை காதலான சிந்தனை ! பேசாமல் உங்கள் பெயரை ‘அருட்பெருங்கோ’ விற்கு பதில் ‘காதல் பெறுங்கோ ‘ என மாற்றி விடுங்கள் :))
May 30th, 2006 at 2:50 am
சே! கோயில்ல மூணே மூணு சுத்துதான் சுத்தணும்னு எவன் ரூல்ஸ் போட்டான்? ஒரு ஒம்போது சுத்து சுத்த வேண்டியதுதானே?

May 30th, 2006 at 7:14 am
நவீன்,
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றிகள்…
இப்போதைக்கு காதல் தருங்கோ மட்டுமே…பெறும் கோ ஆன பிறகு பார்த்துக் கொள்ளலாம்… :))
அன்புடன்,
அருள்.
May 30th, 2006 at 7:15 am
பிரபு ராஜா,
//சே! கோயில்ல மூணே மூணு சுத்துதான் சுத்தணும்னு எவன் ரூல்ஸ் போட்டான்? ஒரு ஒம்போது சுத்து சுத்த வேண்டியதுதானே?
:-)//
மறுபடியும் கோவிலுக்கு ஒரு மூனு தடவை வந்துட்டாப் போச்சு
அன்புடன்,
அருள்.
June 2nd, 2006 at 10:15 am
அடடா!… மீண்டும் ஓர் தொடரா? ம்… அசத்துறீங்களே!இது கற்பனையோ
நிஜமோ… தெரியவில்லை. ஆனாலும் நன்றாக எழுதி இருக்கின்றது.
வாழ்த்துக்கள் அருள்.
ம்… உங்கள் “காதலில் தொடர்ந்து பயணிப்போம்”… தொடர் தொடரட்டுமே!
June 2nd, 2006 at 10:20 am
அடடா!… மீண்டெஉம் ஓர் தொடரா? அசத்துறீங்களே! ம்.
June 9th, 2006 at 8:41 am
aduththathu eppo?
June 9th, 2006 at 8:49 am
இன்னொரு முறை படித்தேன்..
இதுதானா!… (சாமி) பாட்டை நினைவு படுத்துகிறது.
அடுத்த பாகம் சீக்கிரமா போட்டுடுங்க.. இல்ல..
கொஞ்சம் மெதுவாவாவது போட்டுடுங்கப்பு..
June 11th, 2006 at 11:27 am
அருள்!
தொடரை ஏனோ நீங்கள்தொடரவில்லை?
June 20th, 2006 at 1:25 am
பிரபு ராஜா, சத்தியா,
தொடரை தொடர முடியாமல் போனதற்கு காரணம் வேலைப் பளுதான்…வேறொன்றுமில்லை…
வேலை முடிந்து இப்போது மீண்டும் ஐதராபாத் வந்து விட்டேன்…
சீக்கிரமே அடுத்தப் பகுதியை பதிக்கிறேன்…
அன்புடன்,
அருள்.
October 11th, 2006 at 12:24 pm
Romba nalla irukku. suuperappu………..
November 8th, 2006 at 11:41 pm
ஆகாகா நல்லா பொலம்பித் தள்ளீருக்கீங்க? இந்தப் பொண்ணுதானா நீங்க சொன்ன அந்தப் பொண்ணு?
ஒங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாததெல்லாம் சரியா வருதே. சரி இல்லாத கடவுளுக்கு ஏன் பொறாமை வரனும்?
ஒருவேளை இப்படியிருக்கலாம்.
“அன்பே கடவுள் இல்லையென்று நேற்று வரை நினைத்திருந்தேன். அந்த உண்மையும் பொய்யானது. நீ கும்பிடுகிறாய் என்று தெரிந்ததும் இல்லாத கடவுளும் கூட வந்துவிட்டாரே!”
November 9th, 2006 at 11:01 pm
நன்றி அனானி
November 10th, 2006 at 11:24 am
எப்போதும் என் கண் பார்த்துப் பேசும் நீ,
நிலம் பார்த்துப் பேச ஆரம்பித்தக் கணத்தில்
நமக்குள் காதல் பிறந்தது!
நல்லா இருக்கு…
December 27th, 2006 at 6:36 am
/ஆகாகா நல்லா பொலம்பித் தள்ளீருக்கீங்க? இந்தப் பொண்ணுதானா நீங்க சொன்ன அந்தப் பொண்ணு?
/
அகா..அகா…அகககா…
/ஒங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாததெல்லாம் சரியா வருதே. சரி இல்லாத கடவுளுக்கு ஏன் பொறாமை வரனும்? ;-)/
அது அவனக்குள் இருக்கும் அவள் பேசியதாக இருக்கலாம்…
/ஒருவேளை இப்படியிருக்கலாம்.
“அன்பே கடவுள் இல்லையென்று நேற்று வரை நினைத்திருந்தேன். அந்த உண்மையும் பொய்யானது. நீ கும்பிடுகிறாய் என்று தெரிந்ததும் இல்லாத கடவுளும் கூட வந்துவிட்டாரே!”
/
என்னது அன்பே கடவுள் இல்லையென்றா? அன்பே சிவம்னுதான கமல் கூட சொல்லியிருக்கார் ;))
May 10th, 2007 at 7:49 pm
சூப்பர்
அனுபவம் பேசுகிறதோ????
.“சரியான ஜோடியைத்தான் இணைத்திருக்கிறோம்” என நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது இயற்கை
நல்ல கற்பனை
இப்படி எல்லாத்தையும் கற்பனை பண்ணிப்பார்த்து விட்டால்
நிஜமாகும் போது சுவாரஸ்யம் குறைந்து விடாது….?
June 7th, 2007 at 10:25 pm
Great…….Never seen such a wonderfulll kavithaissss…….No research today …….Only all ur kavithaisss…Interesting…Thank U…どうも ありがとうごさいます
June 8th, 2007 at 1:29 am
வாங்க சூர்யா,
/சூப்பர்
அனுபவம் பேசுகிறதோ????/
அனுபவமெல்லாம் இல்லீங்க…
/.“சரியான ஜோடியைத்தான் இணைத்திருக்கிறோம்” என நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது இயற்கை
நல்ல கற்பனை/
கற்பனைனு நீங்களே சொல்லிட்டீங்களே
/இப்படி எல்லாத்தையும் கற்பனை பண்ணிப்பார்த்து விட்டால்
நிஜமாகும் போது சுவாரஸ்யம் குறைந்து விடாது….? /
கற்பனை அப்படியே 100% நிஜமாவதில்லையே… அதனால் சுவாரஸ்யங்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது
June 8th, 2007 at 1:32 am
/Great…….Never seen such a wonderfulll kavithaissss…….No research today …….Only all ur kavithaisss…Interesting…Thank U…どうも ありがとうごさいます /
இது கவிதை இல்லீங்க… கதைங்க
கடைசில என்ன சொல்லிருக்கீங்கனுதான் புரியல!!!