எனக்கு என்னைப் பிடித்திருப்பதே
உனக்கு என்னைப் பிடித்திருப்பதால்தான்.
*
அந்த மூன்று வார்த்தைகளைக் கேட்டாலும்
”எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்று
வெட்கப்படுகிறவளை என்ன செய்ய?
*
கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென!
*
உன் வாசனையை
என்னுடன் கூட்டிச்செல்வதற்காகவே
தினமும் உன் கைக்குட்டை வாங்கிச் செல்வேன்.
*
உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!
*
இதுவரை நீ வந்த
கனவுகளையெல்லாம் சேர்த்து
ஒரே கனவாக காணும்
ஓர் இரவு கிடைக்குமா?
*
ஒவ்வொரு சந்திப்பிலும் நிரூபிக்கிறாய்.
கவிதையென்பது எழுதப்படுவதன்று
நிகழ்த்தப்படுவது என்று!
*
தூசிவிழுந்த இடக்கண்ணில்
நீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!
*
என் பிறந்தநாளுக்கு அனுப்ப
காதல் தேடும் வாழ்த்து
நீ!
*
நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ஊடலும் கூடலும் மட்டுமல்ல…
காதலில் தேடலும் சுகம்தான்!
*
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
March 22nd, 2008 at 9:36 pm
//தூசிவிழுந்த இடக்கண்ணில்
நீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!//
நல்லவேல மக்கா நீங்க யாரயும் காதலிக்கல, பின்னே இப்பவே இப்படின்னா சரி யாதுக்கும் மனசுல போட்டுவச்சுக்குறேன் சாய்ந்திரம் கடற்கறைக்குபோறோம்ல ஏதாவது சிக்குதான்னுபார்ப்போம்.
காதலிக்காமல் வருத்தப்படும் வாலிபர் சங்கம், மெரினா
March 22nd, 2008 at 11:18 pm
அருமையான கவிதைகள்!
March 23rd, 2008 at 12:25 am
(கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென)
Oru Kavinchan Oviyanaai uruvedukkum tharunangal alagu..Wonderful..keep it up
March 23rd, 2008 at 1:57 am
ஆகா…ராசா..காதல் வாழ்த்தா!!!குசும்புய்யா உனக்கு ;))
மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி ;))
March 23rd, 2008 at 1:58 am
\\கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென!\\
சூப்பரு
March 23rd, 2008 at 7:28 am
அருமையான கவிதை!!!!!
உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!//
அருமையான வரிகள்!!!!
பிறந்த நாள் அதுவுமா சூப்பர் கவிதை!!!!!
March 23rd, 2008 at 10:38 am
//நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ஊடலும் கூடலும் மட்டுமல்ல…
காதலில் தேடலும் சுகம்தான்!/
adada… super lines
nice kavidhai..
March 23rd, 2008 at 9:02 pm
//தூசிவிழுந்த இடக்கண்ணில்
நீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!//
எனக்கு பிடித்த அருமையான வரிகள்…..
March 23rd, 2008 at 9:35 pm
Hi Arul…
Arumaiyana Kavithaigal….
Senthil
Bangalore
March 23rd, 2008 at 10:03 pm
//இதுவரை நீ வந்த
கனவுகளையெல்லாம் சேர்த்து
ஒரே கனவாக காணும்
ஓர் இரவு கிடைக்குமா?//
எனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சது.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள். இன்னிக்கும் என்னிக்கும் எப்பவும் சந்தோஷமா இருங்க!!
March 24th, 2008 at 1:25 am
hi many more happy returns of the day Arul.
March 24th, 2008 at 10:17 pm
en kavi?
kavingana imsikiradhu podadha?
oviyana vera avadhaaram edukka aasaiya?
arumaiyana varigal… vaazhthukkal
Belated birthday wishes!!!!
March 25th, 2008 at 6:38 am
நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ஊடலும் கூடலும் மட்டுமல்ல…
காதலில் தேடலும் சுகம்தான்!
superb…
April 1st, 2008 at 7:05 am
\நல்லவேல மக்கா நீங்க யாரயும் காதலிக்கல, பின்னே இப்பவே இப்படின்னா\
அடப்பாவி நல்ல எண்ணம்யா!
\யாதுக்கும் மனசுல போட்டுவச்சுக்குறேன் சாய்ந்திரம் கடற்கறைக்குபோறோம்ல ஏதாவது சிக்குதான்னுபார்ப்போம்.\
வாழ்த்துகள்
\காதலிக்காமல் வருத்தப்படும் வாலிபர் சங்கம், மெரினா\
சங்கத்த மொதல்ல கலைங்கப்பா!
April 1st, 2008 at 7:06 am
/அருமையான கவிதைகள்!/
நன்றிங்க வீரசுந்தர்
April 1st, 2008 at 7:07 am
/Oru Kavinchan Oviyanaai uruvedukkum tharunangal alagu..Wonderful..keep it up/
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க முக்கியப்புள்ளி!
April 1st, 2008 at 7:10 am
/ஆகா…ராசா..காதல் வாழ்த்தா!!!குசும்புய்யா உனக்கு ;))/
குசும்பா? அப்படின்னா? இது கவுஜ மாப்ள
/மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி ;))/
ரொம்ப ரொம்ப தாமதமான நன்றி மாப்பி! ஆணித்தொல்ல அதிகமாப்போச்சு!
/சூப்பரு ;)/
நன்றி !!!
April 1st, 2008 at 7:11 am
/அருமையான வரிகள்!!!!
பிறந்த நாள் அதுவுமா சூப்பர் கவிதை!!!!!/
நன்றிங்க எழில்!!!
April 1st, 2008 at 7:13 am
/எனக்கு பிடித்த அருமையான வரிகள்…../
/hi many more happy returns of the day Arul./
வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீ!
April 1st, 2008 at 7:14 am
/Arumaiyana Kavithaigal…./
நன்றிங்க செந்தில்!
April 1st, 2008 at 7:16 am
/எனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சது.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள். இன்னிக்கும் என்னிக்கும் எப்பவும் சந்தோஷமா இருங்க!!/
கவிதைய வாசிச்சதுக்கும், பிறந்த நாள் வாழ்த்துக்கும் நன்றிங்க காயத்ரி!!
April 1st, 2008 at 9:42 am
\\தூசிவிழுந்த இடக்கண்ணில்
நீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!\\
ரொம்ப அசத்தலாக இருக்கிறது இவ்வரிகள்!
Belated Birthday wishes ,
God bless you!!
April 1st, 2008 at 3:22 pm
///உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!///
இது ரொம்ப பிடிச்சிருக்கு.
April 2nd, 2008 at 2:03 am
தேடல் நல்லாருக்கு ;-))
April 4th, 2008 at 5:07 am
Really very nice thinking!!!!!!!!!!!!!1
Supreb!!!!!
Great Man!!!!!!!!!!!
April 8th, 2008 at 2:26 am
/ரொம்ப அசத்தலாக இருக்கிறது இவ்வரிகள்!/
நன்றி திவ்யா!
/Belated Birthday wishes ,
God bless you!!/
இதற்கும் மனமார்ந்த நன்றிகள்
April 8th, 2008 at 2:27 am
/தேடல் நல்லாருக்கு ;-))/
நன்றிங்க சகாரா!
April 8th, 2008 at 2:33 am
/Really very nice thinking!!!!!!!!!!!!!1
Supreb!!!!!
Great Man!!!!!!!!!!!/
நன்றிங்க சத்யா!
April 8th, 2008 at 2:38 am
/இது ரொம்ப பிடிச்சிருக்கு./
நன்றிங்க நல்லவன்!
May 9th, 2008 at 6:16 pm
arul, ungaluku kavi eludharadhu vittutu oviyam varaya polamnu aasai ya..
andha field a vachu konjam peru vaazhthutu irukuranga, pavam boss avanga…
vitrungalen… apuram
தூசிவிழுந்த இடக்கண்ணில்
நீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்
kannula thhosi vilundha oothum podhu innoru moodikaradhuku, innaiku seriyana vilakam kedachiruku…
idhaiyum try panren…
May 10th, 2008 at 2:13 pm
பாலா,
நன்றி. இதையும் முயற்சி பண்றீங்களா? என்னமோ.. நல்லாருந்தா சரி!!!