ஒரு காதல் பயணம் - 6 காதல் ரயில்
Nov 10

உனக்கான முதல் கவிதை
எழுதப்படவில்லை…
அது உனக்கே சூட்டப்பட்டது!

***************************************

என் கவிதைகளின் கரு நீ!
உன் கனவுகளின் உரு நான்!

***************************************

நம் கண்களின் சந்திப்பு
காதலை சொல்லும்…
நம் கனவுகளின் சந்திப்பு?

***************************************

நான் எழுதுகையில் உருவத்தையும்
நீ வாசிக்கையில் உயிரையும்
பெறுகின்றன, என் கவிதைகள்!

***************************************

இது என்ன வகை பண்டமாற்றம்?
மனதைக் கொடுத்து விட்டு
மனதையே எடுத்துப் போகிறாய்…

***************************************

எத்தனைக் கவிதை எழுதினாலும்
உன் இதயத்தை என்னால்
திருட முடியவில்லை..
நீயோ ஒற்றைப் புன்னகையில்
என்னைக் கைது செய்து போகிறாய்!
திருடும் முன்னேக் கைது செய்யும்
கொடுமைக்காரி நீ!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

9 Responses to “கொடுமைக் காரி நீ!”

  1. ஷைலஜா Says:

    இது என்ன வகை பண்டமாற்றம்?
    மனதைக் கொடுத்து விட்டு
    மனதையே எடுத்துப் போகிறாய்

    ***************************************
    beautiful!
    shylaja

  2. சாத்வீகன் Says:

    மூன்று வரிக்கு மிகாத கவிதைகள்.. நன்று

  3. கார்த்திக் பிரபு Says:

    கொடுமைகாரன் நீங்க..ஆமா எப்படிங்க இப்படிலாம் எழுதுறிங்க வாழ்த்துக்கள்

  4. மணி ப்ரகாஷ் Says:

    //இது என்ன வகை பண்டமாற்றம்?
    மனதைக் கொடுத்து விட்டு
    மனதையே எடுத்துப் போகிறாய்…//

    அழகு ..

  5. அருட்பெருங்கோ Says:

    /beautiful!
    shylaja /

    நன்றிகள்!!!

  6. தாரிணி Says:

    /நான் எழுதுகையில் உருவத்தையும்
    நீ வாசிக்கையில் உயிரையும்
    பெறுகின்றன, என் கவிதைகள்!/

    /எத்தனைக் கவிதை எழுதினாலும்
    உன் இதயத்தை என்னால்
    திருட முடியவில்லை..
    நீயோ ஒற்றைப் புன்னகையில்
    என்னைக் கைது செய்து போகிறாய்!
    திருடும் முன்னேக் கைது செய்யும்
    கொடுமைக்காரி நீ!/

    ம்ம் .கவிதை வரிகளில் பொங்குகிறது காதல். அருமை.
    வாழ்த்துக்கள்.

  7. அருட்பெருங்கோ Says:

    /மூன்று வரிக்கு மிகாத கவிதைகள்.. நன்று /

    அப்போ கடைசி கவிதை மட்டும் நல்லால்லையா??? :))

  8. அருட்பெருங்கோ Says:

    /கொடுமைகாரன் நீங்க..ஆமா எப்படிங்க இப்படிலாம் எழுதுறிங்க வாழ்த்துக்கள் /

    நல்லா இருக்குங்கறீங்களா? இல்ல
    நல்லா இல்லைங்கறீங்களா? ;)

    வந்து வாசித்ததுக்கு நன்றி கார்த்திக்!

  9. அருட்பெருங்கோ Says:

    /அழகு ../

    மணிபிரகாஷ்,
    வாசித்து பாராட்டியமைக்கு நன்றிகள்.

Leave a Reply