உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்
கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.
மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
உன் வெட்கத்தைப் போலன்றி
சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
உன் கோபம்.
அந்த ஒரு நொடி
என் காதல் காயப்படுவதெல்லாம்
உன் கோபங்களுக்கு புரிவதில்லை.
ஆனாலென்ன?
மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர் தான்!
ஊடலில் பிரிந்தாலும்
பேசாமல் மௌனித்தாலும்
கோபமாக முறைத்தாலும்
எனக்கு நீ நீ தான்!
துயரம் தானென்றாலும்
உன் கோபங்களை வரவேற்க
என் கோபங்களுக்கு என்றும் அனுமதியில்லை.
ஒரு மௌனம்
ஒரு மன்னிப்பு
ஒரு சின்னக் காதல்
எப்பொழுதும் இவை மட்டுமே
என்னிடமிருந்து எட்டிப்பார்க்கும்.
கோபங்கள் களையப்பட்டு
நிர்வாணமான உன் மனம்
காதலையணிந்து கொண்டு கெஞ்சும் :
‘இனிமே கோபமாப் பேச மாட்டேண்டா’
அடிப்போடி…
உனக்கிருக்கும் காதலுக்கு
நீ இன்னும் நூறு மடங்கு கோபிக்கலாம்!
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
May 13th, 2008 at 10:14 am
May 13th, 2008 at 10:16 am
// மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர் தான்! //
நீர் நீர் தான்!
May 13th, 2008 at 10:35 am
/very nice poems….!!/
poems ஆ??
மேல இருக்கிறது ஒரே ஒரு கவிதைதான?
May 13th, 2008 at 10:38 am
oh appadiya…?!?
thani thaniya ezhuthi irunthathaala vera vera poemnu ninaichitten….!!
anyway nalla irunthathu……!!
May 13th, 2008 at 10:42 am
“”"அந்த ஒரு நொடி
என் காதல் காயப்படுவதெல்லாம்
உன் கோபங்களுக்கு புரிவதில்லை.”"”
முடியல…..
கவிதையில் காதல் பிச்சிக்கிட்டு அடிக்கிது.
May 13th, 2008 at 10:48 am
ராம்பிரசாத்,
நன்றி.
ஸ்ரீ,
May 13th, 2008 at 10:56 am
ஆகா, அந்த ஸ்ரீ க்கு பதில் சொல்றதுக்குள்ள நீ வந்துட்டியா மாப்ள…
யாராவது ஒருத்தங்க பேர மாத்துங்கப்பா!
அது சரி, காதல் பிச்சிக்கிட்டு அடிக்குதுனு சொல்லிட்டியே… காதல் பிச்சிக்காம அடிச்சாதான நல்லாருக்கும்?
May 13th, 2008 at 11:13 am
ஹா ஹா மாப்பி. நானே பேர மாத்திடுறேன்
May 13th, 2008 at 11:27 am
//////மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
உன் வெட்கத்தைப் போலன்றி
சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
உன் கோபம்.///////
வெட்கமும் கோபமும் ஒரு வித்தியாசமான நண்பர்கள். உங்கள் கவிதையில் ஒரு நாயகியின் சித்திரம் மனதினுள் வடிவாகி உணர்வுகளை தொட்டு சென்றன.
May 13th, 2008 at 12:34 pm
அருள்,
உங்கள் கவிதை நல்லா இருக்கு.
//ஒரு மௌனம்
ஒரு மன்னிப்பு
ஒரு சின்னக் காதல்
எப்பொழுதும் இவை மட்டுமே
என்னிடமிருந்து எட்டிப்பார்க்கும். //
இதே போல் எல்லோரும் இருந்தால் உலகில் சண்டை சச்சரவே இருக்காது.
May 13th, 2008 at 12:38 pm
//என் கோபங்ளுக்கு என்றும் அனுமதியில்லை.//
இந்த வரியில் ‘க’ மிஸ்ஸிங்.
கோபங்களுக்கு என்று இருக்க வேண்டும்.
மாத்திடுங்க பாஸ்.
May 13th, 2008 at 2:18 pm
ஸ்ரீ, நன்றி
சாய்ராம்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
May 13th, 2008 at 2:48 pm
கருத்துக்கு நன்றிங்க ஆஷா.
தவறை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி. மாத்திட்டேன்!
May 13th, 2008 at 3:14 pm
//உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்
கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.
மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
உன் வெட்கத்தைப் போலன்றி
சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
உன் கோபம்.//
உண்மையான வரிகள்…
அருமையான கவிதை…..
Senthil,
Bangalore
May 13th, 2008 at 3:26 pm
/உண்மையான வரிகள்…
அருமையான கவிதை…../
நன்றிங்க செந்தில்…தொடரும் வாசிப்புக்கும், கருத்துக்கும்!
May 13th, 2008 at 4:42 pm
துயரம் தானென்றாலும்
உன் கோபங்களை வரவேற்க
என் கோபங்களுக்கு என்றும் அனுமதியில்லை//
ரொம்ப அடக்கமானவராக்கும் அருட்பெருங்கோ.. கோபம் வருமா எதுக்காவது
May 13th, 2008 at 5:10 pm
ஆமாங்க்கா… ரொம்ப அடக்கமானவன்… அன்புக்கு மட்டும்
கோபமும் வரும், ஆனா உடனே போயிடும்
May 13th, 2008 at 5:15 pm
/அந்த ஒரு நொடி
என் காதல் காயப்படுவதெல்லாம்
உன் கோபங்களுக்கு புரிவதில்லை.
ஆனாலென்ன?
மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர் தான்!
ஊடலில் பிரிந்தாலும்
பேசாமல் மௌனித்தாலும்
கோபமாக முறைத்தாலும்
எனக்கு நீ நீ தான்!/
அழகான வரிகள்
May 13th, 2008 at 6:10 pm
நன்றிங்க திகழ்மிளிர்!
May 14th, 2008 at 6:35 am
கோபத்தைக் கூட இப்பிடிக் குளிர்விப்பாக எப்பிடி இவ்வ்ளோ அழகாக எழுத முடிந்தது?
அழகு….
அன்புடன் அருணா
May 14th, 2008 at 9:29 am
அருணா, கோபம் இருக்கிறவரைதான் கோபமா இருக்கும், கோபம் தீர்ந்ததும், அட இதுக்கா கோப்பட்டோம்னு தோனுமில்லையா? அதுமாதிரிதான்
May 14th, 2008 at 2:28 pm
Simply superb… i liked it very much….
May 14th, 2008 at 3:40 pm
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சிலம்பு செல்வி.
May 15th, 2008 at 12:26 am
நீ பேசும் போது -நான்
காதுகளலும் -
சுவாசிக்kiren
VERY NICE POEMS
Ever
Subash
May 15th, 2008 at 11:21 am
Sir,
Nalla kavithihal,unga websitea pathi kelvi patten,but epo than pakuren.Nalla erukku
May 15th, 2008 at 1:02 pm
நீங்களும் நல்லாவே கவிதையெழுதுறீங்களே சுபாஷ். அப்புறமென்ன ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சுடுங்க!
May 15th, 2008 at 1:04 pm
@ஜெயந்தி,
சாரா???? பேர் சொன்னா போதும்ங்க! வாழ்த்துகளுக்கு நன்றிகள்!
May 16th, 2008 at 10:30 am
Devathikaluku kobamthane azhagu, anaal antha kobamum udane marainduvidum indha kavidhaiyai parthu. arumai.
May 16th, 2008 at 8:11 pm
// மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர் தான்! //
நீர் நீர் தான்!
Sooper Sam..kalakureenga..keep them flowing
May 21st, 2008 at 5:47 pm
Romba Nalla Kavithai, Very Nice, Epdi ipdi Yosikareenga
May 23rd, 2008 at 2:21 pm
last lines are tooo gud.:)
May 25th, 2008 at 2:45 pm
கார்த்திக், ஜேப்பி, செல்வா, லக்ஷ்மணராஜா,
அனைவருக்கும் நன்றிகள்!
June 2nd, 2008 at 12:47 pm
Kadhalum kovamum kavithai superb…..kovam irunthal than kadhalum irukkum…arputhamana varthaigalal oru muthusarathai kavithai korthu irukinga…keep it up
June 2nd, 2008 at 4:21 pm
நன்றிங்க சிந்துசுபாஷ்!