Feb 14
இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
*
எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
பொய் சொல்லவில்லை. ஆனால்…
ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்
உன்னைதான் நினைக்கிறேன்.
*
நீ பிரிந்தபிறகும் கூட
‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
*
இதயம் லேசாக்கிய உன் நினைவெல்லாம்
இன்று சுமக்க முடியா கனமாய் மாறுவதேன்?
*
உன்னை நினைத்துக்கொள்ள மறக்கும்வரை
பிரிந்துவிட்டதாய் சொல்வதெல்லாம் பொய்தான்!
*
முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!
*
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
February 14th, 2008 at 10:46 pm
காதல் வாரத்தின் ஐந்தாவது பகுதியும் அருமை!
February 14th, 2008 at 11:15 pm
நொடிக்கு ஒரு முறை நினைக்குறீங்களா :O. “Exception” வருவதற்கு அது தான் காரணம் மாமே
February 15th, 2008 at 12:20 am
Ko !! Ungaloda 2 KAVITHAI ANANTHAVIKATAN la vanthirukku… Vazhthukkal…
Nambi (ursnambi@rediffmail.com)
February 15th, 2008 at 4:10 am
“இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு”
“நீ பிரியாமல் இருந்தால்…”
“முட்களை மட்டும்…”
நெஞ்சைத் தொட்டது…
“கோ” வின் கோலங்கள் தொடரட்டும்
February 15th, 2008 at 7:12 am
//முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!//
என்ன சொல்வது?முட்கள் பூக்குமா என்று கேட்பதைத் தவிர? அருமை!!
அன்புடன் அருணா
February 15th, 2008 at 9:25 am
//முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!//
ஏனப்பா ஜோகம் திடீர்னு
February 15th, 2008 at 9:34 am
கடைசி கவிதை… டச் செய்துடீங்க ! என்னத்த சொல்ல!
February 16th, 2008 at 12:40 am
//நீ பிரிந்தபிறகும் கூட
‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
//
//முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!//
கலக்கல் மாமே…:)
February 16th, 2008 at 12:04 pm
இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
*
எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
பொய் சொல்லவில்லை. ஆனால்…
ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்
உன்னைதான் நினைக்கிறேன்.
Unga kavithai ellame arumai ..eppadithaan ippadi yosikiringa ..matravarkal manasilum irukkum unmayin velippadu ungal kavithai …vazhthukkal….
February 16th, 2008 at 11:59 pm
//நீ பிரிந்தபிறகும் கூட
‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
//
அழகான கவிதைக்கு இந்தாங்க ஒரு பூ.
என்ன கடைசியில் முள் குத்திடுச்சு…
————–குந்தவை———–
February 17th, 2008 at 11:43 pm
@பிரேம்,
நன்றிங்க பிரேம்.
@ஸ்ரீ,
கவுஜைக்கும் ஜாவாவுக்கும் என்ன சம்பந்தம் மாப்ள?
February 17th, 2008 at 11:44 pm
@ப்ரேமா,
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ப்ரேமா.
@குந்தவை,
வாழ்த்துப்பூவுக்கு நன்றிங்க குந்தவை.
February 18th, 2008 at 5:23 am
என்னங்க அருட்பெருங்கோ பிப் 15 க்கு சோகக் காதல் கவிதை, பிப் 14 யாராவது முடியாதுனு சொல்லிட்டாங்களா? எப்போதும் போல் கவிதை அருமை வாழ்த்துக்கள். அப்படியே என்னோட பிளாக்குக்கும் வருகை தந்து உங்க கருத்த தெரிவிங்க.
April 16th, 2008 at 11:41 pm
அழகான கவிதை வாழ்த்து manikandan.nellai
April 23rd, 2008 at 10:43 am
YOUR KAVITHAI ELLAM SUPPER.
April 23rd, 2008 at 11:31 am
நன்றிங்க ரெகு