ரெண்டு வார்த்த தண்டவாளப்பயணம் (சங்கம்னா ரெண்டு போட்டிக்காக)
Apr 29

அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.

*

கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.

*

“ஆயிரம் முத்தங்களுடன்,
_____”
என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
ஓர் இதழொப்பம் செய்.

*

கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.

*
 
ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

32 Responses to “காதல் செ(ய்)வ்வாய்”

  1. Sri Says:

    :-) super….!!

  2. ராம் பிரசாத் Says:

    //உன் முத்தச்சண்டையை விட
    முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.//

    அருமை..அருமை..தொடரட்டும் உமது முத்தச்சண்டை

  3. வீரசுந்தர் Says:

    கலக்குறீங்க பாஸ்!! காதல் சொட்டுது!!

    அதுலயும் கடைசி கவிதை முதல்ல புரியல.. புரிஞ்சப்பறம் ஆஹா!!!

  4. பிரேம்குமார் Says:

    தலைப்பும் கவிதைகளும் அழகு

    //அணிகலன் இல்லாத கோபத்தில்
    என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
    உன் இதழ்கள்.
    //

    வெகு அழகு

    //ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
    பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
    வெட்கத்துடன் சொல்கிறாய் -
    “லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்//

    ஆகா, என்னமா சிந்திக்கிறாங்கய்யா…

  5. ஆழியூரான் Says:

    //ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
    பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
    வெட்கத்துடன் சொல்கிறாய் -
    “லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”//

    ஐ.. அந்தப் புள்ள ரொம்ப வெவரமா இருக்கும் போலருக்கே..

  6. நந்தா Says:

    யோவ்வ்வ் இப்படி ஆளாளுக்கு கிளம்பிட்டா நாங்க எல்லாம் போனி பண்ண வேணாமா…. கடைசி கவிதை ஜூப்பரு…………….

  7. அருட்பெருங்கோ Says:

    @ஸ்ரீ,

    நன்றிங்க.

    @ராம்,

    நன்றி ராம். கவுஜ சண்டதான் தொடரும் :)

  8. அருட்பெருங்கோ Says:

    @வீரசுந்தர்,

    நன்றி சுந்தர். கடைசி கவிதை மொதல்ல எப்படி புரியும்? கடைசியிலதான் புரியும். ;)

    @பிரேம்,

    நன்றி தல. சிந்தனை செய் மனமே னு பாட்டெல்லாம் இருக்கே தெரியாதா?

  9. அருட்பெருங்கோ Says:

    @ஆழியூரான்,

    புள்ளைக எல்லாம் வெவரமாத்தாம்யா இருக்காங்க!

    @நந்தா,

    கி கி சமுதாயத்துக்கு ஏதோ நம்மாள முடிஞ்ச சேவை :) நன்றி.

  10. முத்துலெட்சுமி Says:

    :) நல்லாருக்கு ..வீர சுந்தருக்கு சொன்ன பதிலு சூப்பர்.

  11. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க்கா.

    அந்த பதில் மொக்கதான் ;)

  12. திகழ்மிளிர் Says:

    /அணிகலன் இல்லாத கோபத்தில்
    என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
    உன் இதழ்கள்./

    :))))))))

  13. அதிரை அபூ Says:

    இதற்கு பெயர்தான் நட்சித்திர கவிதையோ… சூப்பர்

  14. அருட்பெருங்கோ Says:

    திகழ்மிளிர், அந்த சிரிப்புக்கு என்னங்க அர்த்தம்?

    அபூ, நட்சத்திர கவிதையா? புரியலயே. எதுக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.

  15. அதிரை அபூ Says:

    உங்களது கவிதைகளின் இடையே * வருதே.. அதான் சொன்னேன்.. ஆனால் அதற்கு வேரொரு அர்த்தம் உண்டு ‍‍ தமிழ் தளங்கள்
    என்ற விண்ணில்
    நட்சத்திரம் போல்
    மிண்ணுகிறது…
    உங்களது கவிதைகள்

  16. எழில்பாரதி Says:

    அருள் கவிதைகள் அருமை!!!!!

    //அணிகலன் இல்லாத கோபத்தில்
    என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
    உன் இதழ்கள்.//

    சூப்பர்….

    //கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
    உன் முத்தச்சண்டையை விட
    முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.//

    *

    //ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
    பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
    வெட்கத்துடன் சொல்கிறாய் -
    “லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”//

    அருமையிலும் அருமை……..

  17. அருட்பெருங்கோ Says:

    ஆகா.. அபூ ரொம்ப கூச்சமா இருக்கே!

  18. அருட்பெருங்கோ Says:

    ரொம்ப நன்றிங்க எழில்

  19. வீரசுந்தர் Says:

    //கடைசி கவிதை மொதல்ல எப்படி புரியும்//

    நான் கீழ இருந்து மேல வாசிச்சேன்!!

    (எப்படி!!!! :-) )

  20. அருட்பெருங்கோ Says:

    கீழ இருந்து மேல வாசிச்சா மேல இருக்கிற கவிதைதான கடைசி கவிதை? ;)

  21. mangalore Siva Says:

    ஹீரோ டயலாக் சூப்பர்.

    (அட கவித நல்லா இருக்குன்னு அர்த்தம்பா)

  22. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க சிவா.
    புதிய அர்த்தங்களை புரிய வைத்தமைக்கு! ;)

  23. Senthil Kumar Says:

    //கண்ணில் முத்தமிட வந்தேன்.
    இமை ம(ப)றித்துக்கொண்டது.//

    Kavithai Superrrrrrrruuuuuuuuuuuuuuuuu…

    Senthil,
    Bangalore

  24. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க செந்தில்!

  25. Ravi Says:

    Superb Arul..

    Pattya Kelapunga…

    Ravi

  26. இராம் Says:

    கடைசி கவிதை நல்லாயிருக்குய்யா…… ;)

  27. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க ரவி.

    இராம், நன்றிப்பா! அது ஏன்யா கடைசி கவிதையே எல்லாருக்கும் பிடிக்குது? ;)

  28. karunakaran Says:

    chumma sollakoodadhu romba simple and uber.

  29. thamizh Says:

    //ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
    பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
    வெட்கத்துடன் சொல்கிறாய் -
    “லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”//

    superrrbb lines! i really enjoyed reading these lines. good one.

  30. அருட்பெருங்கோ Says:

    கருணாகரன், தமிழ்,
    இருவருக்கும் நன்றிகள்!!

  31. nithya Says:

    superb………………………

  32. அருட்பெருங்கோ Says:

    நன்றி நித்யா!

Leave a Reply