காதல் யந்திரம் பச்சக் கலர் கேரட்
Jul 29

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*

 

இரண்டு முத்தங்கள் கொடுத்து

இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.

இயலாத செயலென

இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

 

*

 

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.

எப்பொழுதும் அளந்தே பேசுபவன்

உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே

அளவின்றி பேசுகிறேன்.

 

*

 

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட

சிறகடித்து தவிக்கும் இமைகள்!

 

*

 

தனியே நீ முணுமுணுக்கும்

இனிய பாடல்கள்

இசைத்தட்டில் ஒலிக்கையில்

இனிமை இழப்பதேன்?

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

49 Responses to “காதல் கவிதை”

  1. sri Says:

    naan dhaan first??

  2. Senthil Kumar Says:

    me the firstu..???

  3. Senthil Kumar Says:

    just missu…

    Ok… Arul Kavithaikal ellame super…

  4. sri Says:

    //காதல் கவிதை//
    இந்தக் கவிதைகள்ல இதுவும் ஒரு கவிதையா?? ;-)

  5. Senthil Kumar Says:

    //தனியே நீ முணுமுணுக்கும்
    இனிய பாடல்கள்
    இசைத்தட்டில் ஒலிக்கையில்
    இனிமை இழப்பதேன்?//

    Nalla Irukku….

    இசைத்தட்டில்-la Ethuvum Problem Illaiyee…

  6. sri Says:

    //இரண்டு முத்தங்கள் கொடுத்து
    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
    இயலாத செயலென
    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
    *
    யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
    எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
    என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
    எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
    உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
    அளவின்றி பேசுகிறேன்.//

    இதெல்லாம் ஒரு சாக்கா?? ;-)
    ம்ம்ம் நல்லாருக்கு..!! :-)

  7. Senthil Kumar Says:

    //இரண்டு முத்தங்கள் கொடுத்து
    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
    இயலாத செயலென
    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்//

    அடுத்த தடவை கொடுக்கும் போது வட்டியோட திருப்பி கொடுங்க Boss…

  8. Ramya Ramani Says:

    \\இரண்டு முத்தங்கள் கொடுத்து
    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
    இயலாத செயலென
    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்\\

    ஹிம்ம் ஹிம்ம்ம் நடக்கட்டும் :))

    \\உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

    எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட

    சிறகடித்து தவிக்கும் இமைகள்!
    \\

    அருமையான வரிகள் :)

  9. அருட்பெருங்கோ Says:

    /naan dhaan first??

    me the firstu..???/

    ஏனிந்த கொலைவெறி?

  10. அருட்பெருங்கோ Says:

    /just missu

    Ok Arul Kavithaikal ellame super/

    நன்றிங்க செந்தில்!

    /Nalla Irukku

    இசைத்தட்டில்-la Ethuvum Problem Illaiyee/

    :) இல்ல இல்ல

    /அடுத்த தடவை கொடுக்கும் போது வட்டியோட திருப்பி கொடுங்க Boss/

    அடுத்த தடவை எழுதும்போதுன்னு சொல்லுங்க!!!

  11. அருட்பெருங்கோ Says:

    //காதல் கவிதை//
    இந்தக் கவிதைகள்ல இதுவும் ஒரு கவிதையா??/

    இல்ல…அது Search Engine Optimization க்காக ;)

    /இதெல்லாம் ஒரு சாக்கா??
    ம்ம்ம் நல்லாருக்கு..!! /

    நன்றிங்க!

  12. அருட்பெருங்கோ Says:

    /ஹிம்ம் ஹிம்ம்ம் நடக்கட்டும் :))/

    எல்லாம் கவிதைல மட்டும் தாங்க!

    /அருமையான வரிகள் /

    நன்றிகள்!

  13. sri Says:

    //எல்லாம் கவிதைல மட்டும் தாங்க//
    என்ன அண்ணா ரொம்ப கவலைப் படற மாதிரித் தெரியுது. அம்மாக்கிட்ட வேணா சொல்லவா?? ;-)

  14. Alb Says:

    //நீ சொற்கள் நிறுத்தி
    பார்வை தொடங்கியதும்
    கவிதை களைந்து
    நிர்வாணமாகிறது காதல்!//

    ஆகட்டும் அருள்! வாழ்த்துக்கள்… !!

  15. Naanal Says:

    //யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

    எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

    என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.//

    ரொம்ப அழகான வரிகள்..
    எல்லா கவிதைகளும் அழக இருக்கு… :-)

  16. அருட்பெருங்கோ Says:

    /என்ன அண்ணா ரொம்ப கவலைப் படற மாதிரித் தெரியுது. அம்மாக்கிட்ட வேணா சொல்லவா??/

    நீங்க சொல்லாமலே அவங்க பொண்ணு பாப்பாங்க… கவலை வேண்டாம் :)

  17. அருட்பெருங்கோ Says:

    /ஆகட்டும் அருள்! வாழ்த்துக்கள்!!/

    நன்றிங்க ஆல்பர்ட்!

  18. அருட்பெருங்கோ Says:

    /ரொம்ப அழகான வரிகள்..
    எல்லா கவிதைகளும் அழக இருக்கு… /

    நன்றிங்க நாணல்!

  19. M.Saravana Kumar Says:

    //இரண்டு முத்தங்கள் கொடுத்து
    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
    இயலாத செயலென
    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.//

    அதுதான் சரி..
    :)

    இன்னொன்னும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்..
    ;)

  20. M.Saravana Kumar Says:

    //யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
    எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
    என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
    எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
    உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
    அளவின்றி பேசுகிறேன்.//

    நடத்துங்க..
    :)

  21. DHANA Says:

    Kavithai nalla irukkungo…

  22. M.Saravana Kumar Says:

    //நீ சொற்கள் நிறுத்தி
    பார்வை தொடங்கியதும்
    கவிதை களைந்து
    நிர்வாணமாகிறது காதல்!//

    காதலுக்கு கவிதைகள்தான் உடைகளா??

  23. அருட்பெருங்கோ Says:

    /அதுதான் சரி..

    இன்னொன்னும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்../

    வாய்ப்பு கிடைக்கும் காலத்தில் உங்கள் கருத்தையும் கவனத்தில் கொள்கிறேன் :P

    /நடத்துங்க../

    கவுஜப் பயணத்த தான சொல்றீங்க? நடத்துவோம்!

    /காதலுக்கு கவிதைகள்தான் உடைகளா??/

    கவிதைகளும்….

  24. vikneshwaran Says:

    அசத்தலாக இருக்குங்க…

  25. அருட்பெருங்கோ Says:

    /அசத்தலாக இருக்குங்க/

    நன்றிங்க விக்னேஷ்வரன்!

  26. Z Says:

    //உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
    எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
    சிறகடித்து தவிக்கும் இமைகள்!//

    Itha thavira ellaame attakaasam.. ithu attakaasathukku konjam kammi unga rangekku…. :))))

  27. அருட்பெருங்கோ Says:

    /Itha thavira ellaame attakaasam.. ithu attakaasathukku konjam kammi unga rangekku. :))))/

    எல்லாரும் ஒரு ரேஞ்சாதாம்ப்பா இருக்கீங்க!

  28. Sathish Says:

    Hello..

    Adutha kadhal kavithai kaga aavaludan edhirpaarthu irukkiren..

    – Ungal illadha kadavulin varam vendum innoru bakthan

    PS: Ungaloda peyar arutperungo thaana?

  29. அருட்பெருங்கோ Says:

    சத்தீஷ்,

    என்னோட பெயர் அருட்பெருங்கோ தான். அதிலென்ன சந்தேகம்? :)

  30. Sathish Says:

    Illa…kavithai nayama oru punai peyar vachikiteengala illa appa amma voda thamizharvam than ungaloda kavithai nayathuku karanama nu therinjika than..

    infact open panna unga blog page a rendu naala close pannama..almost ella post um padichten…nalla karpanai panreengnaa..

  31. அருட்பெருங்கோ Says:

    சதீஷ்,

    எல்லா பதிவும் படிச்சுட்டீங்களா? இதப் படிச்சீங்களா? ;) - http://blog.arutperungo.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b_%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d_%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d

  32. Sathish Says:

    Idha padikala than..kavithaigal than padichtu irundhen..oru pechuku ella post um apdinu sonnadha vachi madakka koodathu..

    Nalla iruku andha 8 thagaval…ungala pathi innum therinjikka oru 16, 24 ellam ezhudhalame?

    btw, singara chennai la illadha velai ya..udane kilambi vaanga..

    apram “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, ” —- idhula than konjam varutham,

    “இல்லாத கடவுளுக்கான படையலாய்” apdingarthukum ippa than artham puriyudhu…naan kadhal a mattum than mean panreenga nu ninachikitu irundhen..

  33. vhalarmathi Says:

    //எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
    உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
    அளவின்றி பேசுகிறேன்..//

    rombe nalla irukku inthe varigal..keep it up..

  34. அருட்பெருங்கோ Says:

    /Idha padikala than..kavithaigal than padichtu irundhen..oru pechuku ella post um apdinu sonnadha vachi madakka koodathu../

    :)

    /Nalla iruku andha 8 thagaval…ungala pathi innum therinjikka oru 16, 24 ellam ezhudhalame?/

    அந்தளவுக்கு சரக்கில்லையே ;)

    /btw, singara chennai la illadha velai ya..udane kilambi vaanga../

    ம்ம்ம் பார்க்கலாம்ங்க!

    /apram “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, ” —- idhula than konjam varutham,/

    உங்களுக்கா சிவனுக்கா? ;)

    /“இல்லாத கடவுளுக்கான படையலாய்” apdingarthukum ippa than artham puriyudhu naan kadhal a mattum than mean panreenga nu ninachikitu irundhen../

    சீரியசா எடுத்துக்காதீங்க. ஆளுக்கொரு கருத்து. எல்லாருக்கும் தன்னோட கருத்து மேல நம்பிக்கை. அவ்வளவுதான்!

  35. அருட்பெருங்கோ Says:

    /rombe nalla irukku inthe varigal..keep it up../

    நன்றிங்க வளர்மதி!

  36. Sathish Says:

    Serious a sollala…aana eppavo namma manasula padhinja karuthukkala anubhavam kooda kooda appapa reality check panni paakalame…

    adhathu namma karuthu kala marupariseelanai seyya oru manasu venum nu solla varen…

    sari ithoda indha thread a mudichtu…next meet panren.. :)

  37. sathish kumar Says:

    Eppadi ….Naan Kavidhai padikum bodhu chattendru padipein.. appadi iruka.. unga kavidhai padikum bodhu mattum thadumaari nindruvitten chella iyalamal

  38. AlexM Says:

    I found your site on technorati and read a few of your other posts. Keep up the good work. I just added your RSS feed to my Google News Reader. Looking forward to reading more from you down the road!

  39. raja Says:

    super

  40. tharshani thevabalan Says:

    anna naan oru kavithai arasan but un kavithai varikal ennai thikaikavaiththuvddathu i love ur kavithai valka nee vallarka un kavi /mendum mendum un kavikkaka kaththirukeran /unnai maddum naan nearelparthal unnaku pon makudam sudduvan take care

  41. Vishnu Says:

    // தனியே நீ முணுமுணுக்கும்

    இனிய பாடல்கள்

    இசைத்தட்டில் ஒலிக்கையில்

    இனிமை இழப்பதேன்? //

    Very nice….

  42. mohanraj Says:

    தனியே நீ முணுமுணுக்கும்

    இனிய பாடல்கள்

    இசைத்தட்டில் ஒலிக்கையில்

    இனிமை இழப்பதேன்?

    ithu kadalin uuicham

  43. Yuva Says:

    இரண்டு முத்தங்கள் கொடுத்து
    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
    இயலாத செயலென
    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்………..nice lines….i really love them…

  44. mangai Says:

    super

  45. அருட்பெருங்கோ Says:

    /Serious a sollala…aana eppavo namma manasula padhinja karuthukkala anubhavam kooda kooda appapa reality check panni paakalame…

    adhathu namma karuthu kala marupariseelanai seyya oru manasu venum nu solla varen…

    sari ithoda indha thread a mudichtu…next meet panren../

    கருத்துக்கு நன்றி சதீஷ் :)

  46. அருட்பெருங்கோ Says:

    /Eppadi ….Naan Kavidhai padikum bodhu chattendru padipein.. appadi iruka.. unga kavidhai padikum bodhu mattum thadumaari nindruvitten chella iyalamal/

    கவிதை புரியலன்னு சொல்ல வர்றீங்களா? :)

  47. அருட்பெருங்கோ Says:

    /I found your site on technorati and read a few of your other posts. Keep up the good work. I just added your RSS feed to my Google News Reader. Looking forward to reading more from you down the road!/

    வாழ்த்துக்கு நன்றிங்க அலெக்ஸ்!

  48. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க ராஜா.

    *

    /anna naan oru kavithai arasan but un kavithai varikal ennai thikaikavaiththuvddathu i love ur kavithai valka nee vallarka un kavi /mendum mendum un kavikkaka kaththirukeran /unnai maddum naan nearelparthal unnaku pon makudam sudduvan take care/

    ஏங்க இந்த கொலவெறி? :(:(

  49. அருட்பெருங்கோ Says:

    விஷ்ணு, மோகன் ராஜ், யுவா, மங்கை, அனைவருக்கும் நன்றிகள்!

Leave a Reply