நட்பின் ஈரம் – ப்ளாகரில் எனது கடைசி பதிவு! (enom + google) -> dreamhost & blogger -> wordpress
Apr 18

‘எனக்கு உன்னைப்போல

கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.

எனக்கும்தான் உன்னைப்போல

கவிதை பேசத் தெரியாது!

 

*

 

கல்லூரியில் கூட

யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.

காதலில் மட்டும்

உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன்.

 

*

 

கவிதையெழுதுவதில்

என் விரல்களை வென்றுவிடுகின்றன

உன் இதழ்கள்!

 

*

 

நீ கையொப்பமிட்டு தரும்

எந்தப் புத்தகமும்

கவிதைப் புத்தகம்தான்!

 

*

 

இப்படி வாசிக்க…

ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.

நேசிக்க…நீ மட்டும்தான்!

 

*

ஒருவழியா வேர்ட்பிரசுக்கு மாறி ஒரு கவுஜைப் பதிவும் எழுதியாச்சு. ப்ளாக்கர் – வேர்ட்பிரஸ் மாற்றம் நடந்தபோதும், வேர்ட்பிரஸ் நீட்சிகளைப் பயன்படுத்தத் துவங்கியபோதும் சிரமமிருந்தாலும் எப்படியோ சமாளிச்சாச்சு! வேர்ட்பிரசுக்கு மாறினது குறித்த விரிவான பதிவு ஓரிரு நாளில் பதிக்கிறேன். புது வீடு எப்படியிருக்குனு சொல்லிட்டுப்போங்க :)

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

25 Responses to “கவிதை காதல் – வேர்ட்பிரசில் முதல் பதிவு!”

  1. ஸ்ரீ Says:

    சூப்பரா இருக்கு மாப்பி தளம் இப்போ. வாழ்த்துக்கள். கலக்கு :)

  2. அருட்பெருங்கோ Says:

    ம்ம்ம் நன்றி ஸ்ரீ! இன்னும் நல்லா பண்ணலாம். அதுக்கு வேர்ட்பிரஸ்கூட இன்னும் கொஞ்சம் சண்டை போடனும் :)

  3. Sri Says:

    //‘எனக்கு உன்னைப்போல

    கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.

    எனக்கும்தான் உன்னைப்போல

    கவிதை பேசத் தெரியாது!//

    ஆரம்பமே அசத்தல்………!!!!!!!

    அருமையான கவிதைகள்…..!!!

  4. Sri Says:

    //கவிதை காதல் – வேர்ட்பிரசில் முதல் பதிவு!//

    சொன்ன மாதிரியே செஞ்சிட்டீங்க………:-)

  5. தனசேகர் Says:

    புதிய தளமும் கவிதைகளும் அருமை அருட்பெருங்கோ !! :)
    பிலாகரிலிருந்து வோர்ட்பிரஸ்கு மாற வழிமுறைகளை எங்களுக்கும் சொல்லித்தரலாமே ? :)

  6. Senthil Says:

    வழக்கம் போல அருமையான கவிதைகள் அருள்…
    வாழ்த்துகள் புதிய தளத்திற்க்கு…..

    Senthil,
    Bangalore

  7. அருட்பெருங்கோ Says:

    @ஸ்ரீ,

    நன்றிங்க! சொன்ன மாதிரி செஞ்சுட்டனா? செய்ற மாதிரி முன்னாடியே சொல்லிட்டேன் ;)

  8. அருட்பெருங்கோ Says:

    @தனசேகர்,

    நன்றிங்க தனசேகர்.
    கண்டிப்பா எழுதறேன். ஆனா நான் எழுதறது மொக்க கலந்துதான் இருக்கும் :)
    ரவி எழதியிருக்கிற வேர்ட்பிரெஸ் நிறுவுவது, இற்றைப்படுத்துவது எப்படி? ங்கற பதிவ படிச்சுப்பாருங்க!

  9. அருட்பெருங்கோ Says:

    @செந்தில்,

    நன்றிங்க செந்தில்!

  10. Selna Says:

    Really fantastic…. My hearty Congrats….

  11. Sri Says:

    //சொன்ன மாதிரி செஞ்சுட்டனா? செய்ற மாதிரி முன்னாடியே சொல்லிட்டேன்.//
    ம்ம்மம்……அடுத்த பதிவு எப்போ???:-)

  12. அருட்பெருங்கோ Says:

    @selna,
    really fantastic னு எத சொல்றீங்க? கவிதையவா? தளத்தையா? எதுவா இருந்தாலும் நன்றிங்க!!!

    @Sri,

    இது எதோ போட்டு வாங்கற மாதிரி இருக்கே :) அடுத்த பதிவு கவிதை கிடையாது. வேர்ட்பிரசுக்கு மாறினத பத்தி சாயுங்காலமா எழுதனும்!

  13. Sri Says:

    yennathu poottu vangarena…!??!
    achachoo enakku athellam theriyathu….:-(

  14. அருட்பெருங்கோ Says:

    ஆகா, எதுக்கு சீரியசாகறீங்க? கூல்!

  15. Sri Says:

    :-)

  16. பிரேம்குமார் Says:

    வீடு அழகா இருக்கு கோ. ஏகப்பட்ட அறைகள் இருக்குதே. சுத்திப் பாக்கவே நாள் ஆகும் போல!

    //இப்படி வாசிக்க…
    ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.
    நேசிக்க…நீ மட்டும்தான்!
    //

    அருமை… :) (ஆனா ‘இப்படி’ தேவையா?)

    //நீ கையொப்பமிட்டு தரும்
    எந்தப் புத்தகமும்
    கவிதைப் புத்தகம்தான்!
    //
    ஆகா கவித, கவித (சரி, காசோலை புத்தகம் கொடுத்தா?)

  17. அருட்பெருங்கோ Says:

    /வீடு அழகா இருக்கு கோ. ஏகப்பட்ட அறைகள் இருக்குதே. சுத்திப் பாக்கவே நாள் ஆகும் போல!/

    நன்றி தல! இதுல இன்னொரு வசதியும் இருக்கு. அறைகள என்னோட விருப்பப்படி வரிசை கட்டியிருக்கேன். அத உங்க விருப்பப்படியும் மாத்திக்கலாம். ஒரு அறையோட தலைய பிடிச்சி இழுத்து இன்னொரு அறைக்கு கீழ விட்டுப்பாருங்க ;)

    ஒரு அறையவே உங்களுக்கு பிடிக்கலன்னா அந்த பச்ச நிற பொத்தான அமுக்குங்க!

    /அருமை (ஆனா ‘இப்படி’ தேவையா?)/
    சரி தூக்கிடலாம்.

    /ஆகா கவித, கவித (சரி, காசோலை புத்தகம் கொடுத்தா?)/

    கி கி காச விட அந்த கையொப்பத்துக்கு மதிப்பு அதிகமில்லையா? :) :)

  18. Maragathavalli Says:

    epavum pola…. nanbare…
    pinnitinga….
    vaazhuthukkal…..
    valarga inum….

    anbudan
    Maragathavalli

  19. அருட்பெருங்கோ Says:

    /epavum pola. nanbare
    pinnitinga
    vaazhuthukkal..
    valarga inum. /

    வாழ்த்துக்கு நன்றிங்க மரகதவல்லி!

  20. அதிரை அபூபக்கர் Says:

    அருமை
    உங்களது கவிதை மட்டும் இல்லை
    தள வடிவமைப்புத்தான்…..

    வாழ்த்துக்கள்….

  21. அருட்பெருங்கோ Says:

    @அபூபக்கர்,

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க அபூ. தள வடிவமைப்புக்கு நான் தனியா எதுவும் பண்ணலையே! எல்லாமே இணையத்துல இலவசமா கிடைக்கிறதுதான்!

  22. mathi Says:

    all kavathi are super ………………….

  23. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க மதி.

  24. saikaarthiksai Says:

    lovesai anbu ammu

  25. Sankeethan Says:

    Attakasam!

Leave a Reply