அவன் :
உன்
விழி பேசியதை
மொழி பெயர்த்தால்
கவிதை என்கிறார்கள்.
*
இதயத்தில் நிறைந்து
விழி வழியே
வழிகிறது
நம் காதல்!
*
பார்த்து பார்த்து
செய்த கண்கள் உனக்கு!
அதைப் பார்த்துக்
கொண்டிருப்பதற்காகவே
செய்த கண்கள் எனக்கு!
*
தினமும்
உன் வருகைக்காகக்
காத்திருக்கின்றன..
பகலில் என் கண்களும்..
இரவில் என் கனவும்..
*
உனக்குத் தெரியுமா?
நம் கண்களும் கூடக்
காதலிக்கின்றன!
தொட்டுக் கொள்ளாமல்
அவை ஆயிரம்
க(வி)தைகளைப் பேசுவதைப் பார்!
நம்மைப் போல…
*
திறந்தே இருப்பதால்தான்
என்செவியில் உன்வார்த்தைகள்
ஒலிக்கிறதென்றால்,
இமைகள் மூடிய பின்னும்
என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
அது எப்படி?
*
என் கண்களுக்கு ஏனிந்தப் பேராசை?
எல்லாக் கணமும் உன் கண்களைப்
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்!
உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே
என் கண்களும் இமைப்பதைப் பார்!
*
அவள் :
போதும்…போதும்…
கவிதைகள் கொஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்!
நீ கண்களால் மட்டும்
காதல் செய்!
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
June 26th, 2006 at 6:41 am
//உன்
விழி பேசியதை
மொழி பெயர்த்தால்
கவிதை என்கிறார்கள்.// :))
தங்கள் பக்கமெல்லாம் காதல் வாசம் ! அருள் எனக்கொரு சந்தேகம். நீங்க வாசம் செய்தது கரூரிலா இல்லை காதலூரிலா?? : ))
விழிமொழியினை அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள் !!
June 26th, 2006 at 7:00 am
/தங்கள் பக்கமெல்லாம் காதல் வாசம் ! அருள் எனக்கொரு சந்தேகம். நீங்க வாசம் செய்தது கரூரிலா இல்லை காதலூரிலா?? : )) /
ஆஹா கேட்பது யார் காதல் கவி நவீன் தானே?
/விழிமொழியினை அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள் !!/
மொழி பெயர்ப்பு மட்டுமே என்னுடையது.. அழகாய் இருந்தால் அதற்குக் காரணம் விழியும் விழியின் மொழியும்!!
அன்புடன்,
அருள்.
June 28th, 2006 at 4:43 am
“போதும்…போதும்…
கவிதைகள் கொஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்!
நீ கண்களால் மட்டும்
காதல் செய்!…..
அருமை!……
June 28th, 2006 at 5:32 am
//திறந்தே இருப்பதால்தான்
என்செவியில் உன்வார்த்தைகள்
ஒலிக்கிறதென்றால்,
இமைகள் மூடிய பின்னும்
என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
அது எப்படி//
அது எப்படி?
அருள், காதலைச் சொல்லும் பதிவுகளுக்கு கருப்பு உடை ஏனோ? மாற்றலாமே!!!
June 28th, 2006 at 5:37 am
/*பார்த்து பார்த்து
செய்த கண்கள் உனக்கு!
அதைப் பார்த்துக்
கொண்டிருப்பதற்காகவே
செய்த கண்கள் எனக்கு!*/
/*தினமும்
உன் வருகைக்காகக்
காத்திருக்கின்றன..
பகலில் என் கண்களும்..
இரவில் என் கனவும்..*/
/*இமைகள் மூடிய பின்னும்
என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
அது எப்படி?*/
இவை அழகு அருள்!
/*உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே
என் கண்களும் இமைப்பதைப் பார்!*/
இதெல்லாம் ஓவரு ஆமா சொல்லிபுட்டேன்.
/*
போதும்…போதும்…
கவிதைகள் கொஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்!*/
பெண்கள் போதும் போதும் னு சொன்னா வேணும் வேணும் னு அர்த்தமாம்…
June 28th, 2006 at 6:02 am
நன்றி சத்தியா…
வழமை போன்ற பாராட்டுக்கு!!
June 28th, 2006 at 6:07 am
தேவ்,
வருகைக்கும் தருகைக்கும் நன்றி!
/அருள், காதலைச் சொல்லும் பதிவுகளுக்கு கருப்பு உடை ஏனோ? மாற்றலாமே!!! /
ம்ம்ம்….மாற்றுகிறேன் விரைவில்…. :))
June 28th, 2006 at 6:22 am
ப்ரியன்,
விரிவான ரசிப்புக்கும் விமர்சனத்துக்கும் நன்றிகள்!!
/இதெல்லாம் ஓவரு ஆமா சொல்லிபுட்டேன்./
:))
/பெண்கள் போதும் போதும் னு சொன்னா வேணும் வேணும் னு அர்த்தமாம்… /
நான் பெண்களுடன் அதிகம் பழகியதில்லை ப்ரியன்! உங்களைப் போலத் தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!!
June 28th, 2006 at 9:45 pm
/*நான் பெண்களுடன் அதிகம் பழகியதில்லை ப்ரியன்! உங்களைப் போலத் தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!! */
நானே அர்த்தமாம் னு தான் சொல்லியிருக்கேன் அர்த்தம் னு சொல்லலே,சோ…எனக்கும் பெண்களுடன் அதிக பழக்கமில்லை எனக் கொள்க
August 13th, 2006 at 11:55 pm
/நானே அர்த்தமாம் னு தான் சொல்லியிருக்கேன் அர்த்தம் னு சொல்லலே,சோ…எனக்கும் பெண்களுடன் அதிக பழக்கமில்லை எனக் கொள்க
/
புரிகிறது ப்ரியன்…
பெண்ணிடம் னு சொல்லியிருக்கனுமோ?? மன்னிச்சுக்குங்க :))
August 14th, 2006 at 12:56 am
// கருவூரிலா…..காதலூரிலா…//
என்ன கேள்வி இது?
காதலூரில் இருந்துதானே கருவூருக்கு
வர முடியும்!
August 17th, 2006 at 5:38 am
un -vezi -pesithai- nan- moozi -peyarthal -kavithai- enkerarkal
nalla- katpanai- nice
August 18th, 2006 at 5:18 am
சிவஞானம் ஐயா,
//என்ன கேள்வி இது?
காதலூரில் இருந்துதானே கருவூருக்கு
வர முடியும்!//
காதல் இன்னும் “கரு”வூருக்கே வரவில்லை…அதற்குள் சிலேடையா??? ;)))
ஆனாலும் ரசித்தேன்!!!
August 18th, 2006 at 5:59 am
yal ahathian,
வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள்!!!
January 6th, 2008 at 2:45 am
கவிதை அருமை. எளிமையான சொற்கள் = எளிதாகப் புரிகிறது - நன்று
January 7th, 2008 at 5:55 am
/ கவிதை அருமை. எளிமையான சொற்கள் = எளிதாகப் புரிகிறது - நன்று/
நன்றிங்க சீனா
June 19th, 2008 at 12:14 pm
/தங்கள் பக்கமெல்லாம் காதல் வாசம் ! அருள் எனக்கொரு சந்தேகம். நீங்க வாசம் செய்தது கரூரிலா இல்லை காதலூரிலா?? : )) /
ஆஹா கேட்பது யார் காதல் கவி நவீன் தானே?
/விழிமொழியினை அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள் !!/
மொழி பெயர்ப்பு மட்டுமே என்னுடையது.. அழகாய் இருந்தால் அதற்குக் காரணம் விழியும் விழியின் மொழியும்!!
yaarudaya vizhi
June 19th, 2008 at 6:16 pm
என்னோட விழிதான் :)))